மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை 430 கோடிக்கு நடந்துள்ளதே?
பண்டிகைகளை ‘குடிப் பெருமையின் அடையாளமாக நினைப்பவர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் போலும்.
வாசுதேவன், பெங்களூரு
"அபூர்வ ராகங்கள்' முதல் "அண்ணாத்தே' வரையில் நடிகர் ரஜினிகாந்தின் வளர்ச்சி?
சுருதிபேதமாக முதல் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர், 45 ஆண்டுகால வளர்ச்சியில் தமிழ்த் திரையின் சுருதியும் நாதமுமாக விளங்கியது பெரும் சாதனை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, ஆண்கள் -பெண்கள், ஏழை -பணக்காரர், ஏ சென்டர் -சி சென்டர் என்ற பேதமின்றி அனைத்துத் தரப் பிலும் அவருக்கு ரசிகர்கள் அமைந் தது அவரது திறமைக்கான விருது. உயரம் தொட்ட போதும், அவரது கால் கள் தரையில் நின்றன. எளிமை அவ ரது பலம். அர சியல் சர்ச்சை களுக்குள் இழுத்து வரப் பட்டாலும் அதிலிருந்து லாவகமாகத் தப்பித்துக் கொண்டார். சினிமாவில் அவர் எ
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை 430 கோடிக்கு நடந்துள்ளதே?
பண்டிகைகளை ‘குடிப் பெருமையின் அடையாளமாக நினைப்பவர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் போலும்.
வாசுதேவன், பெங்களூரு
"அபூர்வ ராகங்கள்' முதல் "அண்ணாத்தே' வரையில் நடிகர் ரஜினிகாந்தின் வளர்ச்சி?
சுருதிபேதமாக முதல் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர், 45 ஆண்டுகால வளர்ச்சியில் தமிழ்த் திரையின் சுருதியும் நாதமுமாக விளங்கியது பெரும் சாதனை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, ஆண்கள் -பெண்கள், ஏழை -பணக்காரர், ஏ சென்டர் -சி சென்டர் என்ற பேதமின்றி அனைத்துத் தரப் பிலும் அவருக்கு ரசிகர்கள் அமைந் தது அவரது திறமைக்கான விருது. உயரம் தொட்ட போதும், அவரது கால் கள் தரையில் நின்றன. எளிமை அவ ரது பலம். அர சியல் சர்ச்சை களுக்குள் இழுத்து வரப் பட்டாலும் அதிலிருந்து லாவகமாகத் தப்பித்துக் கொண்டார். சினிமாவில் அவர் எப்போதும் "அண்ணாத்தே'தான்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அவ்வளவு சுலபமாக "பா.ஜ.க.'வை வீழ்த்த முடியாது என்றும்... ராகுல் நினைப்பது நடக்காது என்றும் பிரசாந்த் கிஷோர்கூறுவது பற்றி?
தன் வலிமையைவிட, எதிரியின் வலிமையை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதனை அலட்சியப் படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் பல மாநிலங்களில் வலிமை குன்றியிருக்கிறது. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. சரியான தலைமை, வியூகம், மாநில அளவிலான நிர்வாகக் கட்டமைப்புகள், கூட்டணி பலம் இவை இல்லாமல் பா.ஜ.க.வை வீழ்த்துவது காங்கிரசுக்கு பெரும் சவால்தான். இதை பிரசாந்த் கிஷோர்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை, ஒரு காங்கிரஸ் தொண்டரைக் கேட்டால்கூட சொல்லிவிடுவார்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
"சசிகலாவை சந்திப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்' என எடப்பாடி கூறியிருப்பது பற்றி?
"ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுப்போம்' என்று ஜெயக்குமார் சொல்கிறார். இ.பி.எஸ்.ஸை நீக்கியதாக கட்சியின் ஓர் அணியின் நிர்வாகி மீடியாக்களில் பேசுகிறார். ஓ.பி.எஸ். தம்பி ராஜா, சசிகலாவின் அக்கா மகனான தினகரனை சந்திக்கிறார். சசிகலா இணைப்பு பற்றி சூசகமாக ஓ.பி.எஸ். பேசுகிறார். யாரும் யாரையும் நீக்குவது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்
இத்தனை மணிக்குள் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மக்கள் சுதந்திரத்தை அரசு பறிப்பது சரியா?
பண்டிகைகள் நாள் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் வழிபாட்டுத் தலங் களின் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் நடைபெறுகின்றன. அதுபோலத்தான், பட்டாசு வெடிப்பது போன்ற செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது. மக்களின் சுதந்திரம் என்பதில் பட்டாசு வெடிப்போரும் உண்டு. பட்டாசு வெடிக்கப்படும்போது தெருக்களில் செல்வோரும் உண்டு. இருதரப்பின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். பட்டாசு வெடித்தல், தொழுகை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாடுகள், சுதந்திரப் பறிப்பு அல்ல, நெறிமுறைப்படுத்துதல்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
"இல்லம் தேடி கல்வித் திட்டம்' வெற்றியடையுமா..?
தன்னார்வலர்கள் தேர்வு, அவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல், திட்ட மிட்டபடி களத்திற்கு சென்று பணியாற்றுதல், மாணவர்களை ஆயத்தப்படுத்தும் பெற்றோர் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப் புடன் செயல்படுத்தினால் கல்வித்துறையில் வெற்றிகரமான புதிய முயற்சியாக இல்லம் தேடி கல்வி திட்டம் அமையும்.
தா.விநாயகம். ராணிப்பேட்டை
நான்கு வார சிறைக்கு பிறகு ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலையானது குறித்து?
பாலிவுட்டிலிருந்து வெளியாகும் படங்களைப் போலவே, பாலிவுட் நடிகர்கள் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான செய்திகளிலும் த்ரில்லிங் இருக்கும். திருப்பங்கள் ஏற்படும். பின்னணியில் யாரோ சில மர்ம நபர்கள் இருப்பது கடைசிக்கட்டத்தில் தெரியவரும். ஷாருக்கான் மகன் மீது போதை வழக்கு பாய்ந்தது. சிறைப்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் பெற பெரும் சட்டப்போராட்டம் நடந்தது. இதில் சினிமா, அரசியல், மதம், அரசு நிர்வாகம் என பல விளையாட்டுகள் கலந்துள்ளன. போதை உலகத்தின் உண்மை முகம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
வினிஷா உமா சங்கர் க்ளாஸ்கோ காப்-26 அரங்கில் தன்னுடைய பேச்சாற்றலால் உலக தலைவர்களை தெறிக்க விட்டுட்டாரே ?
இளங்கன்று பயம் அறியாது. மனதில் பட்டதைப் போட்டு உடைத்திருக்கிறார். நிறைவேற்றப்படாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்கள் மீது இளைய சமுதாயத் திற்கு வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது என உலகளாவிய அரங்கில் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல நாட்டவர் பார்வையாளராக இருந்த அரங்கில் வினிஷா பேசியது அன்டர் லைன் செய்யப்பட வேண்டிய வார்த்தைகள்.