பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

"இதுவரையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றதில்லை' என்கிற சாதனை தற்போது முடிந்துவிட்டதே?

mm

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை என்பதே முறியடிப்பதற் காகத்தான். டான் பிராட்மேனின் சாதனையை சுனில் கவாஸ்கர் முறியடித்தார். சுனில் கவாஸ்கரின் சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார். 1992 முதல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும், பின்னர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவுடன் மோதிய ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் வென்றதில்லை என்பது சாதனையாக இருந்தது. அதனை துபாயில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தகர்த்துவிட்டது. பாகிஸ்தான் அணியினரின் அக்கறையும் -நேர்த்தியும் கொண்ட ஆட்டத்தால்தான் இந்திய கேப்டனாக மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகராகவும் பாகிஸ்தான் டீமை அரவணைத்துப் பாராட்டினார் விராட் கோலி. 1999-ல் சென்னையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கடைசிக்கட்டத்தில் திருப்பம் ஏற்பட்டு, பாகிஸ்தான் அணி வென்றது. அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பாகிஸ்தான் அணிக்கு கரவொலி எழுப்பி, வாழ்த்து தெரிவித்தனர். விளையாட்டு என்பது போர்ப்பகை அல்ல... நட்புணர்வு.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழக ஆளுநர் டெல்லி சென்றது குறித்து அரசியல் பார்வையில் என்ன தோன்றுகிறது?

ஆளுநர் என்பவர் தன்னை நியமித்தவர் களுக்கான வேலைகளை செய்கிறார் என்பது.

வாசுதேவன், பெங்களூரு

"தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றியது குறித்து ரிப்போர்ட் கார்டு தேவை' என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

கோரிக்கை நியாயமானது. ஆனால், கமலுக்குத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் ரிப்போர்ட் கார்டு சரியாக அமையமாட்டேன் என்கிறது.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"சமூக நீதி கண்காணிப்புக் குழு' என்பதன் பொருள் என்னங்க?

Advertisment

சாதி ஏற்றத் தாழ்வைப் போக்கும் வகையில், சமூக நீதிக் கொள்கை சார்ந்த திட்டங்கள் எந்தளவு செயல்படுத்தப்படுகின்றன, யார் பயன் பெறுகிறார்கள், யார் யாருக்கு உரிய பலன் கிடைக்க வில்லை, இன்னும் அதனை வலுவாகவும் விரைவாகவும் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்பது உள்பட பலவற்றையும் கவனித்து, அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டிய பெரும்பொறுப்பு பேராசிரியர் சுப.வீ. தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுவுக்கு இருக்கிறது. அத்துடன், சாதி வெறியின் ஆணிவேரைக் கண்டறிந்து அதில் மருந்தடிக்க வேண்டும். இந்த மண்ணில் பட்டியல் இன மக்களுக்கும், முடி திருத்தும் சமுதாயத்திற்கும் பொருளாதாரத்தில் பெரிய வேறுபாடில்லை. ஆனால், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவருக்கு முடி திருத்த மாட்டேன் என ஒருவர் சொல்லும் நிலைமை நீடிக்கிறது. சமூக நீதியில் நம்பிக்கையுள்ளோர் கண்காணிக்க வேண்டிய முக்கியமான இடம் இது.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு அவசியம்தானே மாவலியாரே?

சிட்டுக்குருவி களுக்கு வான்வெளி, மாணவர்களுக்குப் பள்ளிக்கூடம். வானமும் கூடமும் சுத்தமாக இருந் தால்தான் பாதுகாப்பு.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

பிரியங்காவை, காங்கிரஸ் பிரதம வேட்பாளராக நிறுத்துமா?

mm

முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலுவாக, கால் ஊன்றி நிற்கட்டும். அப்புறம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதமராக, பிரியங்காவை நிறுத்தட்டும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"எங்களைச் சீண்டினால் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தருவோம்' என்கிறாரே பா.ஜ.க.வின் அண்ணாமலை?

mm

ஊடகங்களும் சமூக வலைத்தளங் களும் பெருகிவிட்ட காலத்தில், பஞ்ச் டயலாக் குகள் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் அதிகரித்து வருகிறது. 17 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது என்று தெனா வெட்டு காட்டியுள்ளார் அண்ணாமலை. அவருக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஹேமந்த் அண்ணாதுரை அனுப்பியுள்ள போஸ்ட் கார்டில், “"17 மாநிலங்களில் நீங்க ஆட்சி பண்ணினாலும், 18.5 கோடி உறுப்பினர்களைக் கொண்டாலும், தமிழ்நாட்டில் நீங்க ஒத்த ஓட்டு பா.ஜ.க.தான்'’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது வைரலாகப் பரவியுள்ளது. எனவே, அண்ணாமலை அவர்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரவேண்டாம். பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த ஆளுக்கு 15 லட்ச ரூபாயை வாங்கித் தந்தால் போதும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

முதல்வர் ஸ்டாலின் சென்னை யில்... அரசுப் பேருந்துகளில் ஏறி பயணம் செய்து, பயணிகளிடம் ஆய்வு நடத்தி யுள்ளது பற்றி?

mm

நமக்கு நாமே பயணத்தின்போதே அரசுப் பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் நலம் விசாரித்தவர் மு.க.ஸ்டாலின். தனது தேர்தல் பரப்புரைகளின்போது அதனைத் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கிறார். பெண்களுக்கான இலவசப் பயணம் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற் றுள்ள நிலையில், மாநகரப் பேருந்தில் அவர் ஆய்வு செய் தது கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு என்ற பேருந்து சீராக ஓடும் வகையில் முதல்வர் ஆய்வு செய்து சரிப்படுத்த வேண்டிய துறைகள் நிறைய உள்ளன.