Advertisment

மாவலி பதில்கள்!

mavali

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

மிக சிரமப்பட்டு செய்தி சேகரித்து, முறைகேடுகள் பலவற்றைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. முறைகேடுகள் செய்பவர்களோ, பத்திரிகைகளுக்கு வேறு என்ன வேலை என் கிறார்களே?

Advertisment

அவரவருக்கு அவரவர் வேலை. பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டியது, மக்களுக்கான கடமையை. முறைகேட்டாளர்கள் செய்துகொண்டிருப்பது அவர்களின் "தொழில் தர்ம'த்தை. இரண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Advertisment

mm

ஜி.மகாலிங்கம், காரப்பாளையம்

பா.ஜ.க. போராட்டம் அறிவித்ததால்தான் கோவில்கள் திறக்கப்பட்டன என்று அதன் தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

கரெக்ட். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி யது ஆளுங்கட்சியின் பொறுப்பு. அதன்படி, வெள்ளி -சனி -ஞாயிறு களில் கோவில் திறப்பு குறித்த அரசின் அறிவிப்புக்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிறார் அண்ணாமலை. அதே நேர்மையுடன், தமிழ்நாட்

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

மிக சிரமப்பட்டு செய்தி சேகரித்து, முறைகேடுகள் பலவற்றைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. முறைகேடுகள் செய்பவர்களோ, பத்திரிகைகளுக்கு வேறு என்ன வேலை என் கிறார்களே?

Advertisment

அவரவருக்கு அவரவர் வேலை. பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டியது, மக்களுக்கான கடமையை. முறைகேட்டாளர்கள் செய்துகொண்டிருப்பது அவர்களின் "தொழில் தர்ம'த்தை. இரண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Advertisment

mm

ஜி.மகாலிங்கம், காரப்பாளையம்

பா.ஜ.க. போராட்டம் அறிவித்ததால்தான் கோவில்கள் திறக்கப்பட்டன என்று அதன் தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

கரெக்ட். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி யது ஆளுங்கட்சியின் பொறுப்பு. அதன்படி, வெள்ளி -சனி -ஞாயிறு களில் கோவில் திறப்பு குறித்த அரசின் அறிவிப்புக்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிறார் அண்ணாமலை. அதே நேர்மையுடன், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி -எதிர்க்கட்சிகள் -கல்வியாளர்கள் -மாணவர்கள் எனப் பலரும் போராடியும், நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு திமிர்த்தனத்துடன் இருப்பதால், அரியலூர் அனிதா முதல் கடந்த மாதம்வரை தொடர்ந்த உயிர்ப் பலிகளுக்கு பா.ஜ.க.தான் பொறுப்பு என ஒப்புக்கொள்வாரா அண்ணா மலை?

த.சிவாஜி மூக்கையாஸ், சென்னை-44

ஒன்றரைக் கோடி தொண்டர்கள் அ.தி.மு.க.வுக்கு இருப்பது உண்மையென்றால், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்திருக்க முடியுமே?

f

அ.தி.மு.க.வில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கலாம். தி.மு.க.வில் ஒரு கோடிக்கு மேலான தொண்டர்கள் இருக்கலாம். இதில் பலரிடம், இரண்டு கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளும் இருக்க லாம். பா.ஜ.க. போல மிஸ்டுகால் மூலமாகவே தொண்டர்களை சேர்க்கலாம். மற்ற கட்சிகள் ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்த்தலாம். கட்சிகளுக்குப் பல கணக்குகள் இருப்பதுபோல, அதில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கும் பலவித கணக்குகள் உண்டு. அது அப்படியே ஓட்டுக் கணக்காக மாறிவிடும் என்று நினைப்பது தப்புக்கணக்கு.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

உலகக் கோப்பை டி-20 ஆட்டங்களை பார்க்கிறீர்களா?

ஒரு காலத்தில் பெரிய, பெரிய ஜாம்பவான்களையே மிரட்டிய இலங்கை அணி இன்று தனக்கான இடத்திற்குப் போராடுவதையும், ஒரு நேரத்தில் பிற அணிகளால் வெளுத்து வாங்கப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு, இப்போது பப்புவா அண்ட் கினி போன்ற அணிகளை வெளுத்து வாங்க வாய்ப்பு கிடைப்பதையும், அயர்லாந்து அணி ஒரு பக்கம் அசத்த -அதனைத் தோற்கடித்த நமீபியா அணியின் ஆட்டத்தையும் பார்க்கும் போது, காலத்தின் விளையாட்டை ரசிக்க முடிகிறது.

எஸ்.கதிரேசன், பேராணம்பட்டு

தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுவது சரியா?

அரசியல் செய்வதற்கு சரி, தப்பு என்ற அளவுகோல் எல்லாம் கிடையாது. அ.தி.மு.க ஆட்சியிலும் தனியார் பஸ் கட்டணக் கொள்ளை அமோகமாகத்தான் இருந்தது. ஜெயலலிதா படத்தைப் பஸ்ஸில் ஒட்டிக்கொண்டு, அள்ளிக் கட்டி னார்கள். தி.மு.க. ஆட்சியிலும் அந்தக் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்நாள் முதலமைச்சர் அதனை நிறுத்தவேண்டும் என்று அறிக்கை விடுவதன் மூலம், ஓ.பன்னீர்செல் வத்தை முன்னாள் முதல்வர் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற சூழல் அமைகிற தல்லவா அதுதான் அரசியல் வெற்றி.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

மாவலியிடம் வாசகர்கள் கேள்வி மட்டும்தான் கேட்க வேண்டுமா? பதில் சொல்லக் கூடாதா?

திண்டுக்கல் வாசகர் எஸ்.முனியாண்டி எம்.ஏ., பி.ஜி.எல். ஒரு விளக்கமான பதிலைத் தந்துள்ளார். "2021 செப்டம்பர் 18-21 தேதியிட்ட இதழில் வெளியான மாவலி பதில்களில், விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது பற்றிய கேள்விக்கு தங்கள் பதில் சரியே. ஆனால், ஒரு திருத்தம். அல்லது சொல்ல மறந்த செய்தி ஒன்றைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். உலகின் முதன்முதல் தொழில் வேளாண்மை. அவ்வேளாண்மை எல்லா மதத்தினருக்கும் உள்ளது. குறிப்பாக, தமிழர்கள் கொண்டாடும் வழிபாட்டுத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கப்படு கிறது. ஏதோ ஒரு விழாவுக்கான வாழ்த்து என்பதைவிட அனைத்து மதத்தினருக்கும் பொதுவான தமிழர் திருவிழா -மூத்த தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன் னாலே போதுமானது'' என்பதுதான் வாசகரின் பதில்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஆர்.எம். வீரப்பனால் ஏன் தலைவராக முடியவில்லை?

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களி டம் ஆர்.எம்.வீக்கு பெரும்பாலான ஆதரவு இருந்தாலும், எம்.ஜி.ஆர். மறைவுக்காக "உடன்கட்டை' ஏறும் தகுதி கொண்டவராக அவர் இல்லை. அதனால் தலைவராகவும் ஆக முடியவில்லை.

nkn271021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe