Advertisment

மாவலி பதில்கள்

mm

வாசுதேவன், பெங்களூரு

கிரிக்கெட்டை தவிர்த்து, இந்தியாவில் எந்த விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது..!

Advertisment

அரசியல்.

mm

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

காஷ்மீரில் மீண்டும் வன்முறை தொடங்கியுள்ளதே?

நேரு ஆட்சிக் காலத்தில், பலகட்ட ஆய்வுகளுக் குப் பிறகு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ் தான 370-வது பிரிவை ஒரேநாளில் ரத்துசெய்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவால். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடப் பட்டன. ஜனநாயக அரசியல் சக்திகளின் தலைவர் கள் -முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பல மாதங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பொதுமக்களின் நட மாட்டமும் தொழிலும் முடக்கப் பட்டன. இவையனைத்தும், பாகிஸ்தானில் தூண்டப் படும் தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கை என்றும்,

வாசுதேவன், பெங்களூரு

கிரிக்கெட்டை தவிர்த்து, இந்தியாவில் எந்த விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது..!

Advertisment

அரசியல்.

mm

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

காஷ்மீரில் மீண்டும் வன்முறை தொடங்கியுள்ளதே?

நேரு ஆட்சிக் காலத்தில், பலகட்ட ஆய்வுகளுக் குப் பிறகு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ் தான 370-வது பிரிவை ஒரேநாளில் ரத்துசெய்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவால். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடப் பட்டன. ஜனநாயக அரசியல் சக்திகளின் தலைவர் கள் -முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பல மாதங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பொதுமக்களின் நட மாட்டமும் தொழிலும் முடக்கப் பட்டன. இவையனைத்தும், பாகிஸ்தானில் தூண்டப் படும் தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கை என்றும், காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக உறுதி செய்யும் வெற்றி கரமான செயல்பாடு என்றும் பிரதமர் பெருமிதம் கொண்டார். அதற்கு நேர்மாறாக, ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்றைய காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினர், போலீசார் மட்டுமின்றி, பண்டிட் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களும் தீவிரவாதத்திற்கு இரையாகின்றனர். வன்முறை வளர்ந்துகொண்டிருக்கிறது. மண்ணின் தன்மை அறியாமல் விதைக்கப்படும் எதுவும் விளையாது என்பதை மோடி அரசு உணர்ந்து, காஷ்மீரில் உண்மையான ஜனநாயகப் பயிரை வளர்க்காதவரை வன்முறைதான் மரமாக வளரும்.

பி.மணி, வெள்ளக்கோவில்

மோடி சர்வாதிகாரி அல்ல, அவர் ஒரு ஜனநாயக தலைவர் என்கிறாரே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?

ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தையும், உத்தரப்பிர தேசத்தில் விவசாயிகள் மீதான உயிர் பறிப்புத் தாக்குதலையும் இந்தியா பார்த்துக் கொண்டிருக்கும் போதே மோடி பற்றி அமித்ஷா இப்படிச்சொல்வது, வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல இருக்கிறது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களுக்கு ஒன்பதுவித வண்ணங்களில் ஆடை அணிந்து வரவேண்டும் என யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து?

மன்னன் தலைத்தே மலர்த்தலை உலகம் என்கிறார் சங்கப் புலவர் மோசிகீரனார். ஆட்சி செய்பவன் தன்மையைப் பொறுத்தே மக்கள் வாழும் நாடு அமையும். தவிடு தின்கிற ராஜா ஆட்சியில் இருந்தால் முறம் பிடிக்கிற மந்திரிகளும் நிர்வாகிகளும்தான் இருப்பார் கள். நவராத்திரிக்கான யூனியன் வங்கியின் அறிவிப்பு அப்படித்தான் இருக்கிறது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், தன் கான்வாய் வாகனங்களை குறைத்துவிட்டாரே?

முதலமைச்சர், பிரதமர் என அவரவருக்கும் உரிய பாதுகாப்பு கட் டாயம் இருக்க வேண்டும். பிரதமராக இருந்த இந்திராகாந்தி, முன்னாள் பிர தமர் ராஜீவ்காந்தி இருவரது படுகொலையும் தான் இந்தியாவில் அரசியல் தலைவர் களுக்கான பாதுகாப்பை அதிகப் படுத்தியது. அதையே காரணமாக வைத்து, விடுதலைப்புலிகளால் தனக்கு ஆபத்து என்று ஜெய லலிதா இசட் ப்ளஸ் பாதுகாப்பைப் பெற்றதுடன், தனது வீட்டிலிருந்து தலைமைச் செய லகத்திற்கு செல்லும்போதுகூட, சாலையின் இரு புறம் போக்குவரத்தை நிறுத்தி, குறுக்கிடும் சாலை களில் எல்லாம் தடுப்பரண்கள் அமைத்து, ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு மக்கள் நடமாட்டத்தை முடக்கி, அவசர -அவசியத் தேவைகளுக்காக செல்பவர்களையும் பரிதவிக்க வைத்ததன் மூலம், முதல்வர் கான்வாய் என்றாலே பொதுமக்கள் அலறும் நிலை உருவா னது. வெறுப்பை விதைத்தது. ஒவ்வொரு முறை, ஜெ. ஆட்சி அமைந்தபோதும் இந்த அவலம் தொடர்ந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண் டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந் தது. அதனால், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. செயல்பாட்டிலும் அது முழுமை பெறவேண்டும்.

சி. கார்த்திகேயன் சாத்தூர்

காமராஜர், சத்தியமூர்த்தியை மதித்ததற்கும், மு.க., மற்றும் எம்.ஜி.ஆர்., அண்ணாவை மதித்த தற்கும் என்ன வித்தியாசம்?

காங்கிரசுக்குள் ராஜாஜிக்கு இருந்த செல் வாக்கை எதிர்கொள்ளும் வகையில் சத்தியமூர்த்தி செயல்பட்டார். அதில், காமராஜர் என்ற மகத்தான தலைவர் உருவானார். பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி ஆரம்பித்த அண்ணா, தன் இயக் கத்தை வலுப்படுத்துவதற்காகத் தம்பிகள் அனைவரையும் ஒருங்கிணைத்தார். அதில் கலைஞர், எம்.ஜி.ஆர். மட்டு மின்றி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்பட பலர் அரசியலில் உருவானார்கள். சத்தியமூர்த்திக்கு கிடைத்தது மரியாதை. அண்ணாவுக்கு கிடைத்தது மகத்துவம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஓர் அரசியல்வாதியின் எதிர் காலம் யார் கையில்?

அதிகாரம் பெறுகிற வரையில் கட்சித் தலைமையின் கையில்... அதிகாரம் பெற்ற பிறகு, மக்களின் கையில்.

Advertisment
nkn161021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe