வாசுதேவன், பெங்களூரு
வரும் முன் காப்போம் திட்டம்?
உடலும் உயிரும் காக்கும் மருத்துவத்திற்கு மட்டுமல்ல, நாட்டையும் சமுதாயத்தையும் காக்கும் அரசியல் பொதுவாழ் விலும் அந்தத் திட்டம் அவசியமானது. இல்லாவிட்டால், என்னவாகும் என்பதற்கு அடுத்த பதிலைப் படியுங்கள்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
இந்திரகுமாரி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நீதிமன்ற தண்டனை குறித்து?
எந்த இந்திரகுமாரி? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியா? தி.மு.க. இலக் கிய அணியில் பொறுப்பு வகிக்கும் இந்திரகுமாரியா? 1991-96 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் முதல் சுடுகாட்டுக் கொட்டகை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் இலட்சியமாக இருந்தது. அந்த அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்தி ரகுமாரி. பள்ளி மாணவர்களுக் கான இலவச செருப்புத் திட்டம் வரை அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு
வாசுதேவன், பெங்களூரு
வரும் முன் காப்போம் திட்டம்?
உடலும் உயிரும் காக்கும் மருத்துவத்திற்கு மட்டுமல்ல, நாட்டையும் சமுதாயத்தையும் காக்கும் அரசியல் பொதுவாழ் விலும் அந்தத் திட்டம் அவசியமானது. இல்லாவிட்டால், என்னவாகும் என்பதற்கு அடுத்த பதிலைப் படியுங்கள்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
இந்திரகுமாரி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நீதிமன்ற தண்டனை குறித்து?
எந்த இந்திரகுமாரி? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியா? தி.மு.க. இலக் கிய அணியில் பொறுப்பு வகிக்கும் இந்திரகுமாரியா? 1991-96 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் முதல் சுடுகாட்டுக் கொட்டகை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் இலட்சியமாக இருந்தது. அந்த அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்தி ரகுமாரி. பள்ளி மாணவர்களுக் கான இலவச செருப்புத் திட்டம் வரை அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு இருந் தது. தன் கணவரை நிர்வாகியாகக் கொண்டு அறக் கட்டளை தொடங்கி அதற்கு அரசுப் பணத்தை வாங்கி முறை கேடு செய்த புகார் தொடர்பாக 1996ல் அமைந்த தி.மு.க அரசு வழக்கு தொடர்ந்தது. 25 ஆண்டு களுக்குப் பிறகு, அ.தி.மு.க முன் னாள் அமைச்சர் மீதான வழக்கில், 5 ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்படும்போது, அந்த ஊழல் பிரமுகர் தி.மு.க.வில் நிர்வாகியாக இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாணியிலேயே தீர்ப்பு கேட்டதும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து, மருத்துவ மனைக்கு சென்றுவிட் டார். வருமுன் காப்போம் என்று நினைத்து, தி.மு.க.வுக்கு வந்தார் இந்திரகுமாரி. ஆனாலும், விடாது வழக்கு என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், தி.மு.க. பிரமுகராக தண்டனையை எதிர்கொள்கிறார். இத்தகைய நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில், வருமுன் காப்போம் என தி.மு.க தலைமை செயல்பட்டிருந்தால் இந்திரகுமாரிகள், செல்வகணபதிகள் அவர்கள் வழியில் வந்தவர்கள் விஷயத்தில் கவனமாக இருந்திருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், தேனி மாவட்டம்
"இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன்'' என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரித்துள்ளது குறித்து?
மகாத்மா காந்தி பிறந்தநாளை பா.ஜ.க. அரசு கொண்டாடுகிறது. அந்த பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் நாட்டில்தான், இந்து தேசம்- இல்லையேல் ஜலசமாதி என்கிறார் அந்த சாமியார். இந்தியாவி லிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் நாடான நிலையில், இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள் பா.ஜ.க.வின் முன்னோடித் தலைவர்கள். ஆனால், இது அனைத்து மதத்தினருக்குமான நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மகாத்மா காந்தி. அதனால்தான், அவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். காந்தி விரும்பியபடியே, இந்தியாவை பன்முகத்தன்மை கொண்ட மதச்சார் பற்ற நாடாக கட்டமைத்தது நேரு அரசு. டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த அரசியல் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. இதன்பிறகும், மதவெறி அரசியலின் பின்னணியில் சாமியார்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கும் அதன் அரசியல் சட்டத்திற்கும் எதிரான தேசத்துரோகிகள் இவர்கள்தான்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை
டாஸ்மாக்கையும் பள்ளிகளையும் திறக்க அனுமதியளித்த அரசு சாமி தரிசனம் செய்யவும் அனுமதியளிக்கவேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் கூறியுள்ளதை பற்றி?
கோயில் கூடாது என்பதல்ல, அது கூட்டம் சேர்ந்து கொரோனா பரவலுக்கு வழியமைத்து விடக்கூடாது என்கிறது அரசாங்கம். கோயிலின் வழக்கமான பூசைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. திருவிழா மற்றும் சிறப்பு நாட் களிலான பூசைகளுக்குத்தான் கட்டுப்பாடுகள் விதிக் கப்படுகின்றன. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் உள்ளது. அங்கேயும் பா.ஜ.கவினர் இதை வலியுறுத்தலாம்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
எதிர்பார்ப்பது, எதிர் பார்க்க வைப்பது எது கடினம்..?
தேர்தலுக்கு முன் எதிர்பார்ப்பது மக்களின் வழக்கம். அதற்கேற்ப அவர்களை எதிர்பார்க்க வைக்கும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் பழக்கம். தேர்தலுக்குப் பிறகு, மக்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறு வதும்-அவர்களை எதிர்பார்க்க வைத்த அரசு அதை நிறைவேற்று வதும் கடினம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தனது 505 தேர்தல் வாக்குறுதி களில் 200க்கு மேல் நிறைவேற்றப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. எனினும், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, கேஸ் மானியம் போன்ற எதிர்பார்ப்பிற்குரியவை இன்னும் நிறைவேறவில்லை. மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் புது அறிவிப்புகளை வெளியிடுவதும், திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், பயண வழியில் உள்ள மாணவர் விடுதி, காவல்நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து-அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் உரையாடுவதும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.