சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஆறுமுகசாமி ஆணையம் -ஏ.கே.ராஜன் கமிட்டி என்ன வித்தியாசம்?
இரண்டுமே பறிபோன உயிர்களுக்கான உண்மைக் காரணத்தை அறிவதுதான். ஆறுமுகசாமி ஆணையம், உயிரிழப்புக்கு யார், யார் காரணம் என்கிற உண்மையைக் கண்டறிந்து தரவேண்டிய பொறுப்பில் உள்ளது. ஏ.கே.ராஜன் கமிட்டி, இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற என்ன வழி என கண்டறிவதற்கான பணியை மேற்கொண்டது. கமிட்டி தனது வேலையை முடித்து, அறிக்கையைக் கொடுத்து, அது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆணையத்திற்கு கடந்த ஆட்சியும் வாய்தா வழங்கியது. இந்த ஆட்சியிலும் அது தொடர்கிறது. இறந்தவரைப் புதைத்து அரசு செலவில் நினைவிடம் எழுப்பலாம். இறப்பின் ரகசியங்களைப் புதைக்கக்கூடாது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
புதுச்சேரியிலிருந்து முதன் முறையாக பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மாநிலங் களவை
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஆறுமுகசாமி ஆணையம் -ஏ.கே.ராஜன் கமிட்டி என்ன வித்தியாசம்?
இரண்டுமே பறிபோன உயிர்களுக்கான உண்மைக் காரணத்தை அறிவதுதான். ஆறுமுகசாமி ஆணையம், உயிரிழப்புக்கு யார், யார் காரணம் என்கிற உண்மையைக் கண்டறிந்து தரவேண்டிய பொறுப்பில் உள்ளது. ஏ.கே.ராஜன் கமிட்டி, இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற என்ன வழி என கண்டறிவதற்கான பணியை மேற்கொண்டது. கமிட்டி தனது வேலையை முடித்து, அறிக்கையைக் கொடுத்து, அது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆணையத்திற்கு கடந்த ஆட்சியும் வாய்தா வழங்கியது. இந்த ஆட்சியிலும் அது தொடர்கிறது. இறந்தவரைப் புதைத்து அரசு செலவில் நினைவிடம் எழுப்பலாம். இறப்பின் ரகசியங்களைப் புதைக்கக்கூடாது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
புதுச்சேரியிலிருந்து முதன் முறையாக பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது குறித்து?
புதுச்சேரியின் அரசியல் தள்ளாட்டத்தை எல்லாக் கட்சி களுமே ஒவ்வொரு காலகட்டத் தில் பயன்படுத்திக் கொண்டுள் ளன. பா.ஜ.க. தனக்கான வாய்ப் பை எதிர்பார்த்து, அதற்கான சூழலை உருவாக்கி, அதையே நெருக்கடியாக மாற்றி, தன்னை அதில் கச்சிதமாகப் பொருத்திக் கொள்வதில் பெயர் பெற்ற கட்சி. இங்கும் அங்கும் தாவக்கூடிய அரசியல்வாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு, சட்டமன்றத் தில் நுழைந்து, அதிகாரத்தின் மூலம் நியமன உறுப்பினர்களை யும் பெற்று, இப்போது மாநிலங் களவை எம்.பி.யையும் தேர்ந் தெடுத்துவிட்டது. தமிழ்நாட்டை ஒட்டித்தான் புதுச்சேரி இருக் கிறது. இதை மற்ற கட்சிகளைவிட பா.ஜ.க நன்றாகவே உணர்ந் திருக்கிறது.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
ஒவ்வொரு நாளும் மாறும் நிலைப்பாடு கொண்டதுதான் அரசியலா..? எதிர்க்கட்சியி-ருந்து வரும் உறுப்பினர்களை எந்த நம்பிக்கையில் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள் கிறார்கள்...?
வானிலை அறிக்கை போலத் தான் வாழ்க்கையும் அரசியலும். எந்த நாளில் வெயில் அடிக்கும், எந்த நாளில் மழை பெய்யும் என்று அப்போதைய பருவ நிலைக் கேற்பத்தான் அறிய முடியும். பருவத்தே பயிர் செய்ய நினைக்கும் அரசியலில் மாற்றான் தோட் டத்து மல்லிகைகள் மணக்கின்றன.
ம.ரம்யாமணி, குப்பம், ஆந்திரா
நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?
பஞ்சாப், ராஜஸ்தான் என மிச்சசொச்சமாக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் காங்கிர சுக்கே உரிய கோஷ்டிப்பூசல் இன்றைக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் அதன் வளர்ச்சிக் குப் பெரும் தடையாக இருக்கிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க.வின் மத வெறிக் கொள்கைக்கு வெளிப் படையான எதிர்ப்பாளர்களான மாணவர் தலைவர் கண்ணையா குமார், குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி இருவரும் ராகுல்காந்தி முன்னி லையில் காங்கிரசில் சேர்ந்திருப் பது, அந்தக் கட்சிக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கின்ற நிகழ்வாகும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
மோடி சொன்னது போல இருக்கே எடப்பாடி சொன்ன "2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறதென்பது?'
பழைய எஜமானர் மீதான விசுவாசத்திலேயே இன்னமும் இருக்கிறார், மாநில உரிமைகளுக் காகக் குரல் கொடுத்த அண்ணா வின் பெயரில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்.
வாசுதேவன், பெங்களூரு
ஔவையார் என்றதும் கண்கள் முன் தோன்றும் அறிவுரை?
அதியமான் தந்த ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனியைப் பெற்ற சங்ககால அவ்வையாரில் தொடங்கி, ‘சுட்ட கனி வேண்டுமா -சுடாத கனி வேண்டுமா?’ எனக் கேட்ட அவ்வையார் உள்பட இரண்டு, மூன்று அவ்வையார் களை சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழறிஞர்களும் இலக்கிய ஆய்வாளர்களும். ஒவ்வொரு அவ்வையாரின் படைப்புகளிலும் சிறப்பு உண்டு. அதனைத் தனது தமிழாற்றுப்படையில் கவிப்பேரரசு வைரமுத்து விவரித்து எழுதியிருப் பார். "ஒரே கொள்கை -பொது நோக்கம் கொண்ட தலைவர்கள் -அறிஞர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது, எப்படி இருக்க வேண்டும் என்றால், தண்ணீரைக் கீறிச் செல்லும் அம்பு ஏற்படுத் தும் தடம் உடனடியாக மறைந்து விடுவதுபோல, உடனடியாக மறைந்துவிட வேண்டுமே தவிர, அது காலம் காலமாகப் பகையை வளர்க்கக்கூடியதாக இருக்கக் கூடாது' என்கிறார். விற்பிடித்து நீர்க்கிழித்து எய்த வடுப்போல மறையுமே, சீரொழுகு சான்றோர் சினர் என்பது அந்த அவ்வையா ரின் வாக்கு. பொதுநல நோக்கம் கொண்ட தலைவர்கள் மட்டுமே இந்த அறிவுரையின் மகத்துவத் தை உணர்வார்கள்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
டெல்லி நீதிமன்றதிலே துப்பாக்கி சூடு நடந்திருப்பது எதைக் காட்டுகிறது?
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள நாட்டில், அதிவிரைவாக செயல்படுகிறார் கள் குற்றவாளிகள் எனும் கசப்பான உண்மையை.
பரிபூரணன், கும்பகோணம்
பா.ம.க. பிரமுகர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறாராமே?
பதவி பத்தும் செய்யும்.