மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை தொடர்கிறதே நீட் தேர்வுக்கு எதிரான தற்கொலைகள்?

அரியலூர் கனிமொழிக்குப் பிறகும் நீட் மரணம் நிகழ்ந்திருக் கிறது. ஒரு தவறை செய்வதற்கான நேரம் குறைவு. அதனை சரி செய்வதற்கான நேரமும் காலமும் அதிகம். அதுவரை அனிதாக் களோ கனிமொழிகளோ உயிரை மாய்த்துக் கொள்ளாமல் பாது காக்க வேண்டிய வழிமுறை களைக் கையாள வேண்டியது காலத்தின் தேவை. நீட் என்பது சட்டத்தின் வழியாகத் திணிக்கப் பட்டது. அதனை சட்டத்தின் வழி யிலேயே அகற்றியாக வேண்டும்.

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

Advertisment

உலகளவில் இந்தியா மிகச்சிறந்த ஜனநாயக நாடாக திகழ்வதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேச்சு?

உண்மைதான்... உலகளவில் போகவேண்டாம். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை மட்டும் கவனிப்போம். சீனாவில் ஒரு கட்சி -கம்யூனிஸ்ட் ஆட்சி. அங்கே ஜனநாயகம் என்பது கொரோனா போல! மியான்மரில் ராணுவம் அதிகாரம் செலுத்து கிறது. ஆப்கானிஸ்தான் தாலி பான் கைகளில் அடங்கியிருக் கிறது. பாகிஸ்தானும் பங்களா தேஷும் எப்போது ஜனநாயக மேக்கப் போடும், எப்போது ராணுவ ஆட்சியின் கீழ் வரும் என பரிசுப் போட்டியே வைக்க லாம். நேபாளம் -பூடான் நாடு களின் ஜனநாயகத்தை வரை யறுக்க முடியாது. பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே அதுபோலத்தான் ஜனநாயகத் தோல் போர்த்திய இனவாத -எதேச்சதிகார நாடாக இருக் கிறது இலங்கை. இத்தனை நாடு களுக்கு நடுவில், 75 ஆண்டுகளாக ஜனநாயகக் காற்று தொடர்ந்து வீசுவது இந்தியாவில்தான். நடு வில் அந்தக் காற்றுக்கு எமர்ஜென்சி மூலம் தடை போட்டவர் இந்திரா காந்தி. கடந்த 7 ஆண்டுகளாக கருத்துரிமை -மத உரிமை -உணவு உரிமை -மாநில உரிமை உள்ளிட்ட ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு வேட்டு வைக்கிறது மோடி அரசு. மிகச்சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்வது வெங்கையா நாயுடுவின் கட்சித் தலைமையின் கையில் உள்ளது. ஏனென்றால், ஜனநாயகப் பூமாலை அதன் கையில் சிக்கியிருக்கிறது.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

Advertisment

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளெல்லாம் கலகலத்து போய் பல கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள் ளது பற்றி?

சட்டமன்ற -நாடாளு மன்றத் தேர்தல்கள் கட்சிகளின் பலம் -கூட்டணி பலத்தைப் பொறுத்தவை. உள்ளாட்சித் தேர்தல்களில் தனிமனித செல் வாக்கு -சாதி பலம் -உள்ளூர் காரணங்கள் ஆகியவை அதிக மாக முன்னிற்கும். கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பெரிய கட்சி கள், தமது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குப் போதுமான இடங் களைத் தர யோசிக்கும், பம்பர் ப்ரைஸ் போல ஜெயிக்க நினைக் கும். இந்த சந்தர்ப்பத்தை விட் டால், வேறு தேர்தல் களத்தில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடு வதற்கான வாய்ப்பு கிடைக்காது என்பதாலும், சொந்த பலத்தை வைத்து ஒரு கை பார்த்துவிட லாம் என்றும் கூட்டணியில் உள்ள கட்சிகள் கணக்குப் போடுகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கணக்கு.

வாசுதேவன், பெங்களூரு

அன்று புகழ்பெற்று விளங்கிய சபையர், ப்ளூ டைமண்ட் மற்றும் எம்ரால்டு திரை அரங்குகளில் கண்டு களித்த மூன்று சினிமா படங்கள்?

எத்தனையோ படங்கள் அந்தத் திரையரங்குகளில் திரை யிடப்பட்டுள்ளன. அவை மூடப்படுவதற்கு முன் சஃபையர் தியேட்டரில் சக்கைப் போடு போட்ட படங்களில் ஒன்றில், மம்மூட்டி நடித்த மலையாளப் படங்களில் ஒன்றான "அய்யர் தி கிரேட்'. அப்போது மண்டல் கமிஷன் விவகாரம் பெரிதாக இருந்ததால், தியேட்டர் வாசலில் இருந்த பேனரில் "அய்யர்' என்ற பெயர் மறைக்கப்பட்டு, "தி கிரேட்' என்று மட்டும் இருக்கும். பார்த் திபன் எடுக்கவிருந்த "கருப்பண்ண சாமி' படத்திற்காக தியேட்டர் வாசலில் "பாகுபலி' பாணியில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலை அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மூன்று தியேட்டர்களில் ப்ளூ டைமண்ட் அரங்கில் ஒரே படம் தொடர்ச்சியான காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போக லாம். படத்தின் எந்த காட்சியி லிருந்தும் பார்க்கலாம். அடுத்த ஷோவில் மீண்டும் அந்தக் காட்சி வரும் வரையிலோ, அதன் பிறகும் கூட படம் பார்த்துவிட்டுத் திரும்பலாம். ஒருநாள் பயணமாக சென்னைக்கு வந்து, தங்கள் வேலையை முடித்துவிட்டு, பஸ் அல்லது ரயிலுக்கு செல்ல நேரம் இருப்பவர் களின் சாய்ஸாக இந்த அரங்கம் இருந்தது. பின் னர், வெவ்வேறு காரணங் களுக்கான ஜோடி சேருபவர் களின் அரங்கமாக மாறிவிட்டது. மூன்று தியேட்டர்கள் கொண்ட சஃபையர் காம்ப் ளக்ஸ் மீது ஜெ-சசி என்ற இருவரின் கண் பட்டது. அது தரைமட்ட மானது. இப்போதும் சென்னை அண்ணா சாலையில் அது கட்டாந்தரை யாகக் கிடக்கிறது.

dd

சு.வெங்கடேஷ், கோட்டயம்

சமூகநீதி நாள் எப்படி இருந்தது?

எங்கெங்கும், எல்லா தலை முறையினரிடமும் ஊக்கம் தரும் நாளாக அமைந்தது. திரைக்கலை ஞர் பொன்வண்ணன் கைவண் ணத்தில் உருவான பெரியார் ஓவியங்கள் சமூக நீதி நாளை வண்ணமயமாக்கின.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறதாமே?

குடிமக்கள் அத்தனை சீக்கிரமாக திருந்திவிட் டார்களா என்ன? உண்மையிலேயே நஷ்டம் என்றால், டாஸ்மாக் சில்லறை விற்பனையை அர சாங்கம் கைவிட்டுவிடலாம். இல்லையென்றால்... நிர்வாகத்தில் வேறு ஏதோ தள்ளாட்டம்.