மாவலி பதில்கள்

ff

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

மோடியின் அமெரிக்கா பயணம்?

கொரோனாவுக்கு முன் அவர் பார்க்காத நாடுகள் இல்லை. கொரோனா வந்ததால், இந்தியாவை விட்டு பறக்கவே முடியவில்லை. மக்கள் படும் துயரத்தைத் தாங்க முடியாமல் பிரதமர் தாடி வளர்க்கிறார் என்று பா.ஜ.க. தலைவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இந் திய மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டதால், ஐ.நா. நிகழ்ச்சியில் பங்கேற்க பிர தமர் அமெரிக்காவுக்கு பறக்கிறார் போலும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அனைத்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக்கூறும் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறாமல் மௌனம் சாதிப்பது ஏன் என கேட்கிறாரே வானதி சீனிவாசன்?

அனைத்து மதத்தினரும் அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு உரிமை உண்டு. அதனை மு.க. ஸ்டாலின் அரசாலும் தடுக்க முடியாது. கொரோனா காலத்திலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி யைக் கொண்டாடலாம்

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

மோடியின் அமெரிக்கா பயணம்?

கொரோனாவுக்கு முன் அவர் பார்க்காத நாடுகள் இல்லை. கொரோனா வந்ததால், இந்தியாவை விட்டு பறக்கவே முடியவில்லை. மக்கள் படும் துயரத்தைத் தாங்க முடியாமல் பிரதமர் தாடி வளர்க்கிறார் என்று பா.ஜ.க. தலைவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இந் திய மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டதால், ஐ.நா. நிகழ்ச்சியில் பங்கேற்க பிர தமர் அமெரிக்காவுக்கு பறக்கிறார் போலும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அனைத்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக்கூறும் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறாமல் மௌனம் சாதிப்பது ஏன் என கேட்கிறாரே வானதி சீனிவாசன்?

அனைத்து மதத்தினரும் அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு உரிமை உண்டு. அதனை மு.க. ஸ்டாலின் அரசாலும் தடுக்க முடியாது. கொரோனா காலத்திலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி யைக் கொண்டாடலாம் என்பது தான் முதல்வரின் அறிவிப்பாகும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகியவற்றுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாததன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக் கிறார் வானதி சீனிவாசன். மற்ற மதங்களில் ஒரு மனிதன் பிறப்பி னால் உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்கப்படுவ தில்லை. அந்த மதங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் வேறுவேறு காரணங்களால் அமைந்துள்ளன. இந்து மதம் கடைப்பிடிக்கும் சனாதன -வருணாசிரமத்தில் தான் ஒருவர் பிறப்பினாலேயே உயர்ந்த சாதியா -தாழ்த்தப்பட்ட சாதியா என தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே சமுதா யத்தில் அவருடைய வாழ்க்கை அமைகிறது. தொல் தமிழர்களி டம் இத்தகைய பேதங்கள் கிடையாது. சாதிகள் கிடையாது. ஆரியப் பண்பாட்டின் தாக்கமே இப்படி பேதம் பிரித்தது என் பதே திராவிடக் கட்சிகளின் பார்வையாகும். தமிழ்நாட்டில் இருந்த சைவம் -வைணவம் -ஆசீவகம் -கௌமாரம் உள்ளிட்ட மதங்களை விழுங்கி, இந்து என்ற பொதுப் பெயரில் அழைக்கப் படுவதையும், விநாயகர் சதுர்த்தி -சரஸ்வதி பூஜை -தீபாவளி போன்ற பண்டிகைகள் தமிழ் நாட்டின் மீதான பண்பாட்டுத் திணிப்பு என்பதையும் திராவிட இயக்கம் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. பிறப்பால் பேதம் பார்க்காமல், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர்கள் முதல் அறிவியல் ஆய்வாளர்கள் வரை ஆகலாம் என்ற நிலையை நோக்கி நகரும்போது, எல்லா மதங்களைப் போல இந்து மதப் பண்டிகைகளுக்கும் திராவிட இயக்கம் வாழ்த்து தெரிவிக்கும் காலம் அமையும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77,

ஒரு அரசியல்வாதி, ஆளுநராக ஆவதும்.... ஒரு அதிகாரி ஆளுநராக ஆவதற்கும் உள்ள வித்தியாசம். என்ன?

ஆளுநர்கள் எல்லாருமே மாநில அரசு பற்றி ஒன்றிய அரசுக்கு அறிக்கைகளை அனுப்ப வேண்டிய அதிகாரிகள்தான். அந்த அடிப்படையில், முன்பெல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகளானார்கள். இப்போது அதிகாரிகள் அரசியல் செய்ய வருகிறார்கள்.

செந்தில்குமார்.எம், சென்னை-78

ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் போய் ரத்த அபிஷேகமாமே?

ரசனை என்பது மற்றவர் களையும் ரசிக்க வைக்கும் அள வில் இருக்க வேண்டும். ரஜினியே வெறுக்கும் அளவில் இப்படி சில ரசிகர்களும் இருக்கிறார்கள்.

பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

"அமைச்சர்களின் செயல் பாட்டை கண்காணிப்பேன்' என் கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?

அமைச்சர்களைக் கண்காணிக்க வேண்டும். கட்சிக்காரர்களைக் கவனிக்க வேண்டும். முதல்வரின் இரண்டு தோள்களிலும் இரண்டு பளு.

தேவராஜ், திருவள்ளுவர் நகர், கோவை

"உழைப்பே உயர்வு' என்று சொன்னவர் யார்?

திட்டமிட்டு உழைத்து வெற்றி பெற்ற ஒருவர் சொல்லி யிருப்பார். இலக்கு இல்லாத -திட்டமிடாத உழைப்பு உயர்வைத் தராது, அயர்வைத்தான் தரும்.

mm

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

நடிகர் வடிவேலு எனக்கு எண்ட் கார்டே கிடையாது என்கிறாரே?

10 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்குப் படங்கள் இல்லை. எதிர்த்தவர்கள் கெடுத்தார்கள். நம்பியவர்களும் கைவிட்டார்கள். எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. பெரிய திரையில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டுக் கூடத்திலும் -ஒவ்வொரு வரின் உள்ளங்கையிலும் நகைச் சுவை ராஜாங்கம் நடத்தியவர் அந்த இனிய இம்சை அரசன் தானே! எண்ட் கார்டு இல்லாத எவர்க்ரீன் நகைச்சுவை மன்ன ருக்கு பெரிய திரையின் இரண் டாவது இன்னிங்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

மாவலியாரே, "தலைவி' படம் எப்படி இருக்கிறது?

மேக்-அப் நன்றாக இருக்கிறது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

கட்சிகூட சினிமா மாதிரிதான். ஹீரோ வேணும், வில்லன் வேணும், ஒரு ஜோக்கர் வேணும் என்று வைகோ மகன் துரைவைகோ கூறியுள்ளாரே?

இத்தனை நாள் நேரடியாக எந்தப் பதவிக்கும் வராமல் இருந்திருந்தாலும், அப்பாவுக்குத் துணையாக இருந்து அரசியலை நன்றாகவே கவனித்திருக்கிறார் துரைவைகோ எனப் பெயர் கொண் டிருக்கும் துரை.வையாபுரி.

nkn180921
இதையும் படியுங்கள்
Subscribe