மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
‘பத்ம’ பட்டங்களை (பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்டவை) ஏன் கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கவில்லை?
பட்டங்களைக் கடந்து முடிசூடா மன்னனாக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய திரைப்பாடல்கள் எளிய மக்களின் உதடுகளில் உட்கார்ந்திருந்தது. அவர்களின் மனதை ஆட்டிப்படைத்தது. இன்பமான நேரங்களில் இனிப் பாகவும், துன்பப் பொழுதுகளில் மருந்தாகவும் இருந்தது. பகலில் ஊக்கமாகவும், இரவில் தலையணையாகவும் அமைந்தது. அதுதான் கண்ணதாசன் பாடல்களுக்கு இன்றளவிலும் உள்ள சிறப்பு. பத்மஸ்ரீ பட்டங்களைப் பெறுவதற்கு அரசியல் அடையாளம் தெரியாமல் அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணதாசன், அரசியலுக்குப் பொருந்தாமல் பல அரசியல் கட்சிகளின் அடையாளத்துடன் இருந்தவர்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கேரளாவில் யாரையும் "டா'... "டி'... போட்டு போலீசார் அழைக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதே?
"காவல்துறை உங்கள் நண்பன்' என்று தமிழ்நாட்டில் நெடுங்காலமாக
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
‘பத்ம’ பட்டங்களை (பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்டவை) ஏன் கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கவில்லை?
பட்டங்களைக் கடந்து முடிசூடா மன்னனாக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய திரைப்பாடல்கள் எளிய மக்களின் உதடுகளில் உட்கார்ந்திருந்தது. அவர்களின் மனதை ஆட்டிப்படைத்தது. இன்பமான நேரங்களில் இனிப் பாகவும், துன்பப் பொழுதுகளில் மருந்தாகவும் இருந்தது. பகலில் ஊக்கமாகவும், இரவில் தலையணையாகவும் அமைந்தது. அதுதான் கண்ணதாசன் பாடல்களுக்கு இன்றளவிலும் உள்ள சிறப்பு. பத்மஸ்ரீ பட்டங்களைப் பெறுவதற்கு அரசியல் அடையாளம் தெரியாமல் அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணதாசன், அரசியலுக்குப் பொருந்தாமல் பல அரசியல் கட்சிகளின் அடையாளத்துடன் இருந்தவர்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கேரளாவில் யாரையும் "டா'... "டி'... போட்டு போலீசார் அழைக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதே?
"காவல்துறை உங்கள் நண்பன்' என்று தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சொல்லப் படுகிறது. சாத்தான்குளத்தில் காவல்துறை எந்தளவு நண்பனாக இருந்தது என்பதை ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிர்பறிப்பு நிரூபித்தது. கடுமையின் கூடாரமாக மட்டு மில்லாமல், மனித உரிமைக்கான அலுவலக மாகவும் காவல்துறை இயங்க வேண்டிய காலம் இது. குற்றம்சாட்டப்பட்டவர்களை மட்டுமின்றி, அவர்களின் உறவினர்கள் -நண்பர்களையும்கூட டா... டி... போடுவதும் ஒருமையில் மிரட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. இதை மாற்றச் சொல்கிறது நீதிமன்றம். நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்பது இனி மேல்தான் தெரியும். இதற் கிடையே, வடக்கு கேரளாவில் உள்ள மாத்தூர் பஞ்சாயத்தில் இனி மக்கள் பிரநிதிகளையோ -அதிகாரிகளையோ வெள் ளைக்காரர்கள் பாணியில் "சார்.. மேடம்' என்று அழைப்பதைக் கைவிட்டு, "சேட்டன்' (அண்ணா), "சேச்சி' (அக்கா) என்று அழைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதுபோல, மனு எழுதும்போது பணிவுடன் வேண்டுகிறோம் என்பது போன்ற வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என அந்தப் பஞ்சாயத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "அண்ணா' என்கிற குடும்ப உறவுச் சொல்லையே அரசியல் உறவுச் சொல்லாக்கி ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா நினைவுக்கு வருகிறார்.
எஸ்.மோகன், கோவில்பட்டி
நீட் தேர்வு ரத்து போன்ற நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது ஏன்?
நிறைவேற்றவே முடியாத வாக்குறுதி அல்ல. ஒரே நாளில் நிறைவேற்றிவிட முடியாத வாக்குறுதி அது. மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் துறைகளில், நிதி நிலை மைக்கேற்ப உடனடியாக திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும். மாநில அரசின் அதி காரத்தில் இருந்த கல்வி என்பது எமர்ஜென்சி காலத்தில் மத்திய-மாநில அரசுகளின் பொதுப் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. அதனால், ஒன்றிய அரசு இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதால், அவற்றை எதிர்கொள் ளும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றுவதுடன், நீதிமன்றத்திலும் அது குறித்துப் போராட வேண்டிய சூழல் உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பு, பொது நுழைவுத்தேர்வு என ஒன்று இருந்தது. அதனை நீக்குவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தபோது, அதனை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. கலைஞர் அரசு, முறையான குழு அமைத்து, ஆய்வறிக்கை பெற்று, நுழைவுத் தேர்வு ரத்து என்ற சட்டத்தை நிறைவேற்றி, நீதிமன்றத் தடைகள் ஏதுமின்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று பொது நுழைவுத்தேர்வை முழுமையாக ரத்து செய்தது. நீட் விலக்கு அல்லது ரத்து என்பதும் நெடிய நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. இழந்ததை மீண்டும் பெற வேண்டுமென்றால் போராடாமல் எதுவும் பெறமுடியாது.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
கடந்த 7 ஆண்டுகளில் பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை என்றும், மோடி அரசைக் கண்டு தீவிரவாதிகள் பயப்படுகின்றனர் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகிறாரே?
தீவிரவாதிகளிடமும் சீன ராணுவத் திடமும் பலியான இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பாதுகாப்பு அமைச்சர் எந்தக் கணக்கில் சேர்க்கிறார் என்று தெரியவில்லை. மோடி அரசைக் கண்டு தீவிரவாதிகள் பயந்தால் அது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால், தீவிரவாதிகள் மட்டுமில்லாமல், மோடியை வெற்றிபெற வைத்த பொதுமக்களும் பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்கள் -தலித் -சிறுபான்மையினர் என பலரும் அச்ச உணர்வுக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். எல்லையில் பாதுகாப்பை பலப் படுத்திவிட்டு, உள்நாட்டில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கனிமவள வியாபாரத்தை அரசே நேரடியாக கையில் எடுத்து, ஊழல் முறைகேடுகளின்றி நிர்வகிப்பதன் மூலம் அரசு வருமானத்தைப் பல மடங்கு பெருக்கமுடியும் என்று தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகிறாரே?
அரசே நேரடியாகக் கையில் எடுக்கலாம். ஊழல் -முறைகேடுகளின்றி அதை நடத்த வேண்டிய அதிகாரிகள் சரியாக இருந்தால் மட்டுமே வருமானத்தைப் பல மடங்கு பெருக்கலாம். 1991-96 ஜெயலலிதா ஆட்சியில் கனிமவள நிறுவனமான டாமின் சேர்மனாக இருந்த தியானேஸ்வரன் மீதான ஊழல் வழக்குகள் ஓர் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை உணர்வுடன் மு.க.ஸ்டாலின் அரசு செயல்பட்டால் வருமானம் பெருக வாய்ப்புள்ளது.