அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தா போல சிவசங்கர்பாபாவும் நான் ஆண்மையற்றவன் என்று நீதிமன்றத்தில் கூறுகிறாரே?
சர்வ சக்தி கொண்டவர் களாக இமேஜ் பில்டப் பண் ணிக்கொள்ளும் சாமியார்கள், கடைசியில் சாமானிய மனிதர்களுக்குரிய சக்திகூட இல்லாத புஸ்வாணம் நான் என்று சட்டத்தின் முன்னால் பரிதாபமாகக் கதறுகிறார்கள்.
டி ஜெய்சிங், கோயம்புத்தூர்
டெல்லி பல்கலைகழகத் தில் பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட காரணம்?
உரிமைக் குரல்களை அதிகார வர்க்கம் எப்போதும் விரும்புவதில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தில் அண்மைக் காலமாகவே இந்துத்வா சக்திகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. மாணவர் பேரவைத் தேர்தல் உள்பட பலவற்றிலும், முற்போக்கு -சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக் கிறது. கல்வித்துறையை காவிமய மாக்கும் முயற்சிகளை பா.ஜ.க. அரசு ஆட்சியமைக்கும் போதெல்லாம் தீவிரமாக செயல்படுத்தும். அதன் வெளிப்பாடு தான், தமிழ்நாட் டைச் சேர்ந்த எழுத் தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் எழுதிய படைப்புகளின் ஆங்கில மொழியாக்கத்தைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இருவருமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படைப்புகள் மட்டுமின்றி, புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய மகாஸ்வேதா தேவியின் திரௌபதை என்கிற கதையும் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏ.கே.ராமானுஜத் தின் 300 ராமாயணங்கள் என்ற கட்டுரை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட் டது. சிந்தனைக்குரிய வகையில் எழுதப்படும் எந்தவொரு படைப்பையும் அனுமதிப்பதில்லை என்கிற கல்வித் துறையின் போக்கு கண்டனத்திற்குரியது. பட்டியல் இனப் பெண்கள் உள்ளிட்ட படைப்பாளிகளின் எழுத்துகள் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் உயர்வகுப்பைச் சேர்ந்தவரின் பாடங்கள் இடம் பெறுவதிலிருந்து இந்தியாவின் கல்வித்துறை எதை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறது என்பது புரியும். புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தக் கூடிய ஆபத்துகளை யும் உணர்ந்துகொள்ள முடியும்.
வாசுதேவன், பெங்களூரு
பி.டி. உஷாவின் கோச் மறைந்த ஓ.எம். நம்பியார்?
நம்பியார் என்ற பெயர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் வில்லனாகப் பதிந்திருந்த காலத்தில், ஒரு விளையாட்டு நாயகியின் பயிற்றுநராக ஓ.எம்.நம்பியார் கவனத்திற்குரியவரானார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி. உஷா சாதிக்க, நம்பியா ரின் பயிற்சி முறைகள் முக்கிய காரணமாக அமைந்தன. ஆனாலும், ஒலிம்பிக் போட்டிகளில் உஷாவின் பதக்க கனவு நிறைவேற வில்லை. நம்பியார்கள் மூலம் உஷாக்கள் பலர் ஊக்கம் பெற்றதால் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா பல பதக் கங்களை வென்றது. இப்போது மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளிலும் தமிழ்நாட்டின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்த, ஈட்டி எறிதலில் சுமித் அன்ட்டில், துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகரா இரு வரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்திய வீரர்களில் மேலும் சிலரும் பாரா லிம்பிக்கில் பதக்கங்களை வென்றுள்ளனர். முன் பெல்லாம், வழக்கமான ஒலிம்பிக் போட்டிகள் அளவுக்கு, பாராலிம்பிக் போட்டிகள் கவனம் ஈர்க்காது. ஆனால், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், சமூக வலைத்தளங்களின் அதிகரிப்பாலும் மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு சாதனைகள், வழக்கமான ஒலிம்பிக்கிற்கு இணையாக கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவியேற்றுள்ளார்களே?
3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதி பதிகள், உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பணி உயர்த்தப்பட்டு, பதவிப் பொறுப்பு ஏற்றிருப்பது சிறப்பிற் குரியது என்றாலும் இரண்டாண்டு கால தாமதத்திற்குப் பிறகே இது நடந் துள்ளது. கொலிஜீ யத்தின் இந்தத் தேர்வில், சீனியா ரிட்டியில் இரண் டாம் இடத்தில் உள்ள அகில் குரேஷி பெயர் இடம்பெறாதது சட்டத்துறை சார்ந்தவர்களிடம் விவாதப் பொருள் ஆகியுள்ளது. நீதியின் பக்கம் நின்று தீர்ப் பளிப்பவர் குரேஷி. அதனால் அவர் பெயரைப் பட்டியலில் வைத்திருந்தார் உச்சநீதிமன்ற ரோஹிங்டன் நரிமன். அவர் அண்மையில் ஓய்வுபெற்றதால், குரேஷியின் பெயர் இல்லா மல் பட்டியல் வெளியாகி விட்டது. குஜராத்தில் மோடி ஆட்சியில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஷொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் அமித்ஷாவை, சி.பி.ஐ. காவ லில் விசாரிக்க அனுமதி, மோடியின் குஜராத் அரசின் ஊழல்கள் தொடர்பாக ஆளு நர் நியமித்த லோக் அயுக்தா அமைப்புக்கு அனுமதி என நேர்மையான உத்தரவுகளைப் பிறப்பித்தவர் குரேஷி. நேர் மைக்கு ஆளும் வர்க்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுதான் இது.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
கமலஹாசன் இனிவரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறாரே?
மயான சபதம், மதுபான பார்களில் சபதம் என்பது போலதான் அரசியல் சபதங்களும்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
அறுசுவையில் மாவலிக்கு பிடித்த சுவை எது?
அறுசுவைக்கு கட்டுப் பட்ட நாக்குக்கு, போதும் எனக் கட்டுப்பாடு போட முடிந்தால், அதுதான் தனிச் சுவை.