மாவலி பதில்கள்

MA

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

பா.ஜ.க. தலைமை இ.பி.எஸ் பக்கமா? ஓ.பி.எஸ். பக்கமா? சசிகலா பக்கமா?

எல்லா பக்கத்தையும் ஒன்றுசேர்த்து, அ.தி.மு.க.வை தன் பக்கமாகக் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே பா.ஜ.க. தலைமையின் இலக்கு.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சினிமாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள் யாரேனும் தமிழ்நாட்டின் முதல்வர்களாகியிருக்கிறார்களா?

mm

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்து, 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல்வரானவர் ராஜாஜி. அவர் எழுதிய கதை "திக்கற்ற பார்வதி'’என்ற திரைப்படமாக வெளியானது. அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி', "ஓர் இரவு' திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத் தியவை. கலைஞரின் வசனங்கள் திரையுல கின் திருப்புமுனை. எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் சக்கர வர்த்தி. எம்.ஜி.ஆர். பாப்புலர் ஹீரோ ஆவதற்கு முன்பே, ஹீரோயினாக இருந் தவர் வி.என். ஜானகி. எம்.ஜி. ஆருடன் அதிகப் படங்களில் ஜோடியாக ந

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

பா.ஜ.க. தலைமை இ.பி.எஸ் பக்கமா? ஓ.பி.எஸ். பக்கமா? சசிகலா பக்கமா?

எல்லா பக்கத்தையும் ஒன்றுசேர்த்து, அ.தி.மு.க.வை தன் பக்கமாகக் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே பா.ஜ.க. தலைமையின் இலக்கு.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சினிமாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள் யாரேனும் தமிழ்நாட்டின் முதல்வர்களாகியிருக்கிறார்களா?

mm

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்து, 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல்வரானவர் ராஜாஜி. அவர் எழுதிய கதை "திக்கற்ற பார்வதி'’என்ற திரைப்படமாக வெளியானது. அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி', "ஓர் இரவு' திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத் தியவை. கலைஞரின் வசனங்கள் திரையுல கின் திருப்புமுனை. எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் சக்கர வர்த்தி. எம்.ஜி.ஆர். பாப்புலர் ஹீரோ ஆவதற்கு முன்பே, ஹீரோயினாக இருந் தவர் வி.என். ஜானகி. எம்.ஜி. ஆருடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. மு.க.ஸ்டாலின், தன் அப்பா கதை-வசனத்தில் உருவான "ஒரே ரத்தம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வர். "மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியிலும் வருவார். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இரு வரும் தங்களை எம்.ஜி.ஆர். ரசிகர்களாக பெருமையுடன் சொல்லிக்கொள்பவர்கள். 70 ஆண்டு காலத்தில் காமராஜரும் பக்தவத்சலமும்தான் திரைத்துறையுடன் நேரடித் தொடர்பில்லாத தமிழ்நாட்டு முதல்வர்கள். ஆனால், அவர்கள் காலத்திலும் அவர்களின் கட்சிக்கு சினிமாக்காரர்களின் பிரச்சார பலம் தேவைப்பட்டது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் இருக்கிறது' என்கிறதே வெள்ளை அறிக்கை?

தமிழ்நாடு வாங் கிய கடனை ஒவ்வொரு வீடு வாங்கிய கடனாகப் பகிர்ந்தால், ஒவ்வொருவர் குடும்பத்தின் மீதும் என்பதை இந்தளவு கடன் சுமை இருக்கும் என்கிறது நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை. பொதுவாக முந்தைய தலைமுறையில் ஒரு குடும்பம் வாங்கிய கடன், அடுத்த தலை முறையின் தலையில் ஏறிவிடும். அதுபோல, முந்தைய ஆட்சியாளர்களின் கடன் சுமையை இன்றைய ஆட்சியாளர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள், குடும்பத் தலைவர்களைப் போல. மக்கள் எல்லாரும் குடும்ப உறுப்பினர்கள். கடன் சுமையை இறக்க வழிதேட வேண்டியது குடும்பத் தலைவர்தான். பொறுப்புள்ள குடும்பத் தலைவர், தனது முன்னோரைக் கரித்துக்கொட்டினாலும், கடனை அடைப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பார். பிள்ளைகள் தலையில் கடன்சுமையை ஏற்றமாட்டார். நிதியமைச்சரும் பொறுப்பானவராக இருப்பார் என எதிர்பார்ப்போம்.

வாசுதேவன், பெங்களூரு

தனது பயிற்சிக்கு உதவிய லாரி ஓட்டுனர்களுக்கு விருந்தளித்து -பரிசு வழங்கி நன்றி செலுத்திய இந்தியாவின் வெள்ளிப் பதக்க ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் ச்சானூவின் செயல் எப்படி?

இந்தியாவின் பிற பகுதிகளைப் போன்ற கட்ட மைப்பு வசதிகளைப் பெறாத வடகிழக்கு மாநிலத்தி லிருந்து பளு தூக்கும் போட்டிக்குத் தயாராகி, டோக்கியோ வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் மீராபாய் ச்சானு. கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் விறகு கட்டு சுமந்து வளர்ந்தவர். தனது பயிற்சிக் காலத்தில் அவர் செல்ல வேண் டிய இடத்திற்குச் செல்ல உதவியவர்கள் லாரி ஓட்டு நர்கள்தான். அவர்களின் உதவியை மறக்காமல், வெள்ளி வென்று தாயகம் திரும்பிய பிறகு, மரியாதை செலுத்தியிருக்கிறார். இதுபோலவே, டோக்கியோவில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்க வேண்டிய ஒரு வீரர், ஸ்டேடியம் செல்ல வழி தெரியாமல் தவிக்க... அங்கிருந்த தன்னார்வலர் பெண் ஒருவர் தன் செலவில் கால்டாக்சி பிடித்து அவரை உரிய நேரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். போட்டியில் தங்கம் வென்ற அந்த வீரர், அந்தப் பெண்ணைத் தேடிவந்து நன்றி செலுத்தியிருக்கிறார். விளையாட்டுக்களம் என்பது மனிதநேயத்தின் விளைநிலம்.

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்

"மாநிலத்தின் வளர்ச்சிக்காகத்தான் இவ்வளவு கடன் வாங்கினோம்' என்கிறாரே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

அப்படி எந்தெந்த துறைகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாடு தனித்துவமாக வளர்ந்தது என்பதையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

நிதிச்சுமையைக் குறைக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50% குறைத்தால் என்ன?

அரசு நிர்வாகம் பயணிப்பது அரசு ஊழியர்கள் என்ற வாகனத்தில்தான். அந்த வாகனத்தின் ஓட்டுநர், முதல்வர். பயணிகள், மக்கள். பயணம் செய்யவேண்டிய தூரத்திற்கேற்ப டீசல் போடாமல், பாதியளவு மட்டும் போட்டால் வாகனம் பாதி வழியில் நின்றுவிடும். அவதிப்படப் போகிறவர் ஓட்டுநரும் பயணிகளும்தான்.

தே.மாதவராஜ், கோவை 45

10 ஆண்டுகள் சொகு சாக வாழ்ந்து பழகிய அதிகாரி கள், தற்போதைய அரசுக்கு ஒத்து ழைப்பாக இல்லையாமே?

இப்போதும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பாக இருக் கிறார்கள் பல அதி காரிகள். அத்துடன், இப்போதைய ஆட்சி அதிகாரத்தில் உள்ள சிலரும் முந்தையவர் களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்.

nkn180821
இதையும் படியுங்கள்
Subscribe