மாவலி பதில்கள்

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

இந்தியாவை இனி மாநில கட்சிகள்தான் வழிநடத்தும் எங்களை யாராலும் தடுக்க முடியாது என்கிறாரே மம்தா பானர்ஜி?

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் உரிமையையும் கொண்டு, கூட்டாட்சித்தன்மையை நோக்கி நகரும்போது, அதில் மாநிலக் கட்சிகள் அதன் அரசுகளின் பங்கு முக்கியமானதாக அமையும். அது ஒன்றிய அரசிலும் எதிரொலிக்கும். இதற்கு முன் அமைந்தவை எல்லாம் கூட்டணி ஆட்சி. அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து, கூட்டாட்சியாக மாறவேண்டும். மம்தா நினைப்பதுபோல மாயாவதி, அகிலேஷ்யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் எல்லாரும் நினைக்க வேண்டும். இந்திய ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி வழியே கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்த்த கலைஞரின் மகன் மு.க..ஸ்டாலின் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

வாசுதேவன், பெங்களூரு

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது எதைக் குறிக்கின்றது?

கொரோனா காலத்த

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

இந்தியாவை இனி மாநில கட்சிகள்தான் வழிநடத்தும் எங்களை யாராலும் தடுக்க முடியாது என்கிறாரே மம்தா பானர்ஜி?

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் உரிமையையும் கொண்டு, கூட்டாட்சித்தன்மையை நோக்கி நகரும்போது, அதில் மாநிலக் கட்சிகள் அதன் அரசுகளின் பங்கு முக்கியமானதாக அமையும். அது ஒன்றிய அரசிலும் எதிரொலிக்கும். இதற்கு முன் அமைந்தவை எல்லாம் கூட்டணி ஆட்சி. அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து, கூட்டாட்சியாக மாறவேண்டும். மம்தா நினைப்பதுபோல மாயாவதி, அகிலேஷ்யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் எல்லாரும் நினைக்க வேண்டும். இந்திய ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி வழியே கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்த்த கலைஞரின் மகன் மு.க..ஸ்டாலின் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

வாசுதேவன், பெங்களூரு

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது எதைக் குறிக்கின்றது?

கொரோனா காலத்தின் சமூக -பொருளாதாரத் தாக்கத்தைக் குறிக்கிறது. அரசுப் பள்ளிகள் இருக்கும் பக்கத்தை திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்றிருந்தவர்கள், இப்போது அரசுப் பள்ளிகளைத் தேடிச் சென்று தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறையின் அதிகாரிகள், பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆகியோர் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடத்திட்டமும் உள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அரசின் கல்வித் தொலைக்காட்சி வழியே நடத்தப்படும் பாடங்கள் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து, அரசுப் பள்ளிக்கு மாறிய மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. கல்வி தொலைக்காட்சியில், ஆங்கில வழிப் பாடங் களுக்கும் நேரம் ஒதுக்கி ஒளிபரப்பு செய்தால், அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்குப் பயன் தரும். அரசுப் பள்ளியை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

mavalianswers

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.

தமிழக திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் "அர்ச்சனை' என்பதை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறாரே?

இந்துவிரோதக் கட்சி என தி.மு.க.வை பா.ஜ.க. மட்டுமின்றி, அ.தி.மு.க.வில் அமைச்சர் களாக இருந்தவர்களே விமர்சித்த நிலையில், இந்து திருக்கோயில்களின் வளர்ச்சியிலும் பண்பாட்டு மலர்ச்சியிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க அரசு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, "அன்னைத் தமிழில் அர்ச்சனை' என தமிழகத்தின் பெரிய கோவில்கள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ் வழிபாடு. மயிலை கபாலீசுவரர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் இதுவரை "நமஹ... நமஹ...' என்று மட்டுமே கேட்ட மந்திரங்கள் மாறி, "போற்றி... போற்றி' என தாய்மொழியாம் தமிழில் ஒலிப்பது கடவுளுக்கும் பக்தர்களுக்குமான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. "திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, அதில் கல்லூரிகள் கட்டப்படும்' என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது நூறாண்டு கால அறநிலை யச் சட்டத்தின் பயனையும் வலிமையையும் காட்டு கிறது.

ம.ரம்யாமணி, குப்பம் ஆந்திரா

பிரதமர், ஜனாதிபதி இருவரும் தமிழில் கொஞ்சும் அழகு எப்படி இருக்கிறது?

ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும் காலம் ஒன்று இருந்தது. அப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்குமான புதிய ரயில்கள், ரயில்பாதைகள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி அறிவிப்புகள் வெளியாகும். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் பற்றிய எதிர்பார்ப்புடன் நமது எம்.பி.க்கள் காத்திருப்பார்கள். ரயில்வே அமைச்சர், வணக்கம் எனத் கொஞ்சு தமிழில் சொல்வார். மக்களவையில் உள்ள தமிழக எம்.பி.க்கள் மேசையைத் தட்டி மகிழ்வார்கள். அந்த இடைவெளியில், ரயில்வே அமைச்சர் அடுத்த மாநிலத்திற்கான திட்டங்களுக்கு சென்றுவிடுவார். ரயில் நிற்காத ஸ்டேஷன் போல தமிழ்நாடு ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் தவிக்கும். நமது மாநிலத்திற்கான ரயில்வே திட்டங்களையும் புதிய ரயில்களையும் போராடித்தான் பெற வேண்டியிருந்தது. அதனால் ஜனாதிபதி, பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், கொஞ்சு தமிழில் எப்படி பேசுகிறார்கள் என்பதைவிட, அந்தப் பேச்சுக்குப் பிறகு அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியமானது.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

27% இட ஒதுக்கீட்டினை ஒவ்வொரு கட்சியும் தங்களின் வெற்றியாக விளம்பரங்கள் செய்கின்றனவே?

1979-ல் இந்திய அரசிடம் வழங்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கை, 10 ஆண்டுகளாகப் பரணில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 1989-ல் தேசிய முன்னணி அரசு அமைந்தபோது அதனை எடுக்கச் செய்து, தூசு தட்டச் செய்தவர்கள் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள். அதனை நடைமுறைக்கு கொண்டுவந்து தன் ஆட்சியையே விலையாகக் கொடுத்தவர் அன்றைய பிரதமர் வி.பி.சிங். இன்று பல கட்சிகளும் வெற்றி விளம்பரங்கள் செய்வதற்கு காரணம், அந்த சமூகநீதிக் காவலர்தான்.

nkn110821
இதையும் படியுங்கள்
Subscribe