செந்தில்குமார் எம்., சென்னை-78
கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளி யேறிய நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக கமல் சொல்கிறாரே?
பிரமுகர்கள் விலகிய நிலையில், மக்களாவது விலகாமல் இருக்கிறார்களா என்பதை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "விக்ரம் 2' ஷூட்டிங்கிற்கு போகலாம் என கமல் நினைக்கலாம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
விழா கொண்டாடுவதற்காக வரலாற்றை மாற்றுவதா எனக் கேட்கிறாரே ஜெயக்குமார்?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவைத் தி.மு.க அரசு நடத்தியதையும், அதில் கலைஞர் படத்தை கவர்னர் தலைமையில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததையும் ஆதரிக்க முடியாமல், விழாவைத் தவிர்ப்பதற்காக ஜெயக்குமார்தான் வரலாற்றை மாற்றுகிறார். 12-1-1921-ல் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை மாகாண முதல் சட்டமன்றம் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் மிகக் குறைந்த அதிகாரத்தைக் கொண்ட அந்த சட்டமன்றத்தில்தான் நீதிக்கட்சி ஆட்சியில் சமூகந
செந்தில்குமார் எம்., சென்னை-78
கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளி யேறிய நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக கமல் சொல்கிறாரே?
பிரமுகர்கள் விலகிய நிலையில், மக்களாவது விலகாமல் இருக்கிறார்களா என்பதை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "விக்ரம் 2' ஷூட்டிங்கிற்கு போகலாம் என கமல் நினைக்கலாம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
விழா கொண்டாடுவதற்காக வரலாற்றை மாற்றுவதா எனக் கேட்கிறாரே ஜெயக்குமார்?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவைத் தி.மு.க அரசு நடத்தியதையும், அதில் கலைஞர் படத்தை கவர்னர் தலைமையில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததையும் ஆதரிக்க முடியாமல், விழாவைத் தவிர்ப்பதற்காக ஜெயக்குமார்தான் வரலாற்றை மாற்றுகிறார். 12-1-1921-ல் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை மாகாண முதல் சட்டமன்றம் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் மிகக் குறைந்த அதிகாரத்தைக் கொண்ட அந்த சட்டமன்றத்தில்தான் நீதிக்கட்சி ஆட்சியில் சமூகநீதிக் கொள்கைக் கான சட்டங்களுக்கு அடித்தளமிடப் பட்டன. அதன்பின், அதே பிரிட்டிஷ் ஆட்சியில் 1937-ல் நடந்த தேர்தலில் கூடுதல் அதிகாரத் துடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, சென்னை மாகாண சட்டப்பேரவை அமைந்தது. 1952-ல் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. 1967-ல் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு சென்னை மாகாணத்திற்கு (மாநிலம்) "தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப் பட்டது. "தமிழ்நாடு' என்ற பெயர் பெறுவதற்கு முன்பே பெருமை மிகு சட்டமன்ற வரலாற்றைக் கொண்டது நமது மாநிலம்.
வாசுதேவன், பெங்களூரு
ஒ-ம்பிக்ஸ் கற்றுத் தரும் பாடம்?
டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் இறுதிக்கட்டத்தை அடைந்த இரண்டு பேரில் ஒருவர் இத்தாலி நாட்டின் தம்பேரி. இன்னொருவர், கத்தார் நாட்டின் பார்ஷிம். இருவரும் 2.37 மீட்டர் என சம உயரத்தைத் தாண்டி யிருந்தார்கள். அடுத்ததாக, 2.39 மீட்டர் தாண்டும் முயற்சியில் இருவருக்குமே வெற்றி கிடைக்கவில்லை. இத்தாலி நாட்டவர் காயம்பட்டிருந்த நிலையில், இருவரில் யாருக்கு தங்கப்பதக்கம் என்பதற்காக கடைசியாக ஒரு தாண்டுதலுக்கான ஏற்பாடுகளில் நடுவர் இருந்தார். அவரிடம் பார்ஷிம், "தங்கப்பதக்கத்தைப் பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?'’என்று கேட்டார். "இருக்கிறது.. இருவருமே கடைசி தாண்டுதலைத் தவிர்த்தால் தங்கம் கிடைக்கும்’'’ என்று நடுவர் சொன்னதும், தனக்கு வெற்றி உறுதி என்ற நிலையிலும், தங்கப்பதக்கத்தைப் இருவருக்கும் தர ஏற்பாடு செய்யும்படி சொன்னார் பார்ஷிம். நடுவரும் சம்மதிக்க... அதைக் கேட்ட இத்தாலி வீரர் தம்பேரி துள்ளிக் குதித்து வந்து பார்ஷிமைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இருவரும் தங்கம் வென்று, தத்தமது நாட்டுக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்தனர். பார்ஷிமும் தம்பேரியும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விளையாட்டுக் களத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். பார்ஷிமின் வெற்றிப் பயணத்திற்காக பல கட்டத்தில் துணைநின்றிருக்கிறார் தம்பேரி. நாடு கடந்த நட்பு, ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைக் காக்கா கடிக்குள்ளாக்கி, இருவருக்கும் தங்கப் பதக்கம் கிடைக்கச்செய்துள்ளது. சிறு வயதில் காக்கா கடி கடித்து மிட்டாயைப் பங்கிட்டுக் கொள்ளும் ‘விளையாட்டுப் பிள்ளைகள் போல இருவரும் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைப் பங்கிட்டுக் கொண்டு, இருவருக்கும் இழப்பின்றி வெற்றியை நிலைநாட்டினர். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏதோ கடுமையான யுத்தம் போல கருதிக் கதறுபவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும். வல்லரசு வாத்தியார்களாக நினைத்துக்கொள்ளும் உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்த விளையாட்டுப் பிள்ளைகளின் ‘காக்காக் கடி’ சில பாடங்களை சொல்லியிருக்கிறது.
உமா சங்கர், மலேஷியா
இட ஒதுக்கீடு கோரி தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தன. இதன் பிறகு தானே மத்திய அரசு இடஒதுக் கீடு வழங்கியது. ஆனால் ஒதுக்கீடு விரும்பாத கட்சிகள் இப்பொழுது வெற்றி விழா கொண்டாடி சிலரை வாழ்த்தி விளம்பரம் தேடுகின்றனவே?
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.
தமிழக திருக்கோயில்களில் இனி, அன்னைத் தமிழில் "அர்ச்சனை' என தமிழக அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளது பற்றி?
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் -தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே' என்பது திருமூலரின் திருமந்திரம். அது, தமிழ்க் கோவில்களில் ஒலிப்பதுதானே சரியான வழிபாட்டு முறை. அதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
"மேகதாது அணை கட்டுவேன்' என்கிறாரே பசவராஜ் பொம்மை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை "கட்டக்கூடாது' என்கிறாரே?
அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார். ஒருவேளை, பசவராஜ் பொம்மை தமிழ்நாட்டில் அரசியல் செய்தால் மாற்றிப் பேசக்கூடும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
மீண்டும் கொரோனா அச்சுறுத்த தொடங்கிவிட்டதே?
கொரோனா ஒரு போர்க்களம். தடுப்பூசி -முககவசம் -கட்டுப்பாடுகள் ஆகியவை வாளும் கேடயங்களுமாகும்.