மாவலி பதில்கள்

mavali

உமா சங்கர், மலேஷியா

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைக்குமாம். முதல்வர் யாருனு உங்களுக்கு தெரியுமா?

பா.ஜ.க.வின் கொள்கைகள் தமிழ்நாட்டுக்கே எதிரானது என்பது வாக்காளர்களுக்குத் தெரியும். அதனை உணர்ந்து, இன்றைய முதல்வரும் அவரது கட்சியினரும் வரும் 5 ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். ஜெயலலிதாவைப் போலவே அரசியல் செய்யவேண்டும் என நினைத்த தி.மு.க. 2016-ல் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.வையும் வலிமையாக எதிர்த்த 2021-ல் இரண்டு ஆளுங்கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கொள்கை எதிரியை சமரசமின்றி எதிர்ப்பவர் களுக்குத்தான் தமிழக மக்கள் வாக்களிப்பது வழக்கம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

பிரதமர் மோடி ஊர் சுற்றக் கிளம்பாமல் இருப்ப

உமா சங்கர், மலேஷியா

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைக்குமாம். முதல்வர் யாருனு உங்களுக்கு தெரியுமா?

பா.ஜ.க.வின் கொள்கைகள் தமிழ்நாட்டுக்கே எதிரானது என்பது வாக்காளர்களுக்குத் தெரியும். அதனை உணர்ந்து, இன்றைய முதல்வரும் அவரது கட்சியினரும் வரும் 5 ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். ஜெயலலிதாவைப் போலவே அரசியல் செய்யவேண்டும் என நினைத்த தி.மு.க. 2016-ல் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.வையும் வலிமையாக எதிர்த்த 2021-ல் இரண்டு ஆளுங்கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கொள்கை எதிரியை சமரசமின்றி எதிர்ப்பவர் களுக்குத்தான் தமிழக மக்கள் வாக்களிப்பது வழக்கம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

பிரதமர் மோடி ஊர் சுற்றக் கிளம்பாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய கனவு இல்லம் கட்டப் படுவதாலா..?

கொரோனா பரவல்தான் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங் களை முடக்கிப் போட்டன. கொரோனாவால் மக்கள் பரிதவித்த நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதில் தீவிரம் காட்டியது மோடி அரசு. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமருக்கான இல்லமும் உண்டு என்பதை முன்வைத்து குற்றம் சாட்டுகிறது காங்கிரஸ். வெளிநாடுகளுக்குப் போக முடியாவிட்டாலும், உள்நாட்டுப் பிரச்சினை களிலிருந்து திசை திருப்புவதற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடமும், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகளும் பிரதமருக்கும் அவரது கட்சிக்கும் கைகொடுக்கின்றன.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

"ஹீரோக்கள் நிஜத்தில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது' என நீதிமன்றம் கோபம் கொள்கிறதே?

திரையில் தோன்றுபவர்களின் திறமையைக் கொண்டாடு வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவர் களை அவதார புருஷர்களைப் போல காட்டுவதில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் எனக் காலம்தோறும் ஊடகங்கள் முன்நிற்கின்றன. அரசியல், நீதி, கல்வித்துறை என எல்லாத் துறையினருக்கும் சினிமா ஹீரோக்களின் பிரபலமும் தொடர்பும் தேவைப்படுகிறது. சட்டத்தின் முன் சாதாரண மனிதனும் பெரிய ஹீரோக்களும் ஒன்றுதான் என்ற அளவுகோலே முக்கியம். அது இல்லாதவரை, கண்டனங்கள் எல்லாம் அந்த ஹீரோக்களின் பஞ்ச் டயலாக் போலத்தான் இருக்கும். கண்டனங்களுக்கு எதிரான மேல் முறையீடுகள் தொடரும்.

கே.ஆர். ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

"அ.தி.மு.க.'வை ஓரம் கட்டி"தி.மு.க'வுக்கான எதிர்ப்பு அரசியலை "பா.ஜ.க.' தமிழகத்தில் கையில் எடுக்கிறதா?

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், இந்தக் கோணத்தில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. "அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்தால் அது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை மாற்று சக்தியாக உருவாக்கிவிடாதா?' என்ற கேள்விக்கு, "அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது, பா.ஜ.க. போலவே மாறிவிட்ட அ.தி.மு.க.தான்' என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க.வின் மேலிடத்தில் உள்ள சிலரின் பதவி ஆசைக்காகவும் சுயநலத்திற்காகவும் கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களின் உணர்வுகளும் பட்டுப்போய் விடக்கூடாது. அடுத்த ஆண்டு பொன்விழா காணும் இயக்கமான அ.தி.மு.க. உண்மையாகவே கவலைப்பட வேண்டியது, தன் தோளில் ஏறி சவாரி செய்த பா.ஜ.க குறித்துதான்.

வாசுதேவன், பெங்களூ

பி.எஸ். வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் ஆகிய அந்தக் கால வில்லன்களை இந்தக் கால தமிழ் சினிமா மிஸ் செய்கின்றதா?

அதிரடிச் சிரிப்பால் அதிர வைத்த வில்லன் வீரப்பா. ஒரு தலைமுறையே வெறுக்கும் வகையில் வில்லன் பாத்திரத்தை தனது நடிப்பால் செதுக்கியவர் நம்பியார். மெயின் வில்லனாக இருந்தாலும் -அடியாளாக இருந்தாலும் தனக்கான கதாபாத்திரத்திற்கேற்ப வில்லத்தனத்தில் அசத்தியவர் மனோகர். பஞ்ச் டயலாக்கால் வில்லன்களும் கைத்தட்டல் வாங்க முடியும் என்பதை அந்தக் காலத்திலேயே நிரூபித்தவர் அசோகன். காலமாற்றமும் ரசனை மாற்றமும் தவிர்க்க முடியாதவை. மேடை நாடகத்திற்குப் பழகிய தங்களின் குரல்களால் திரையை அலறவைத்த இந்த வில்லன்கள், மட்டுமல்ல, அலட்டிக்கொள்ளாத வில்லத்தனத்தில் ஹீரோக் களுடன் சரிக்கு சமமாக நின்ற ஆரம்பகால ரஜினி, அதற்கப்புறம் சத்யராஜ், பின்னர் ரகுவரன் உள்ளிட்ட வில்லன்களையும்தான் திரையுலகம் மிஸ் பண்ணுகிறது.

தா. விநாயகம்., ராணிப்பேட்டை.

தமிழ்நாட்டில் சிஸ்டம் இப்போது எப்படி உள்ளது?

அதுபாட்டுக்கு அதன் இடத்தில் இருந்தபடி, சைலன்ட்டாக, தனக்கான வேலையை மட்டும் கவனிப்பது என முடிவெடுத்திருக்கிறது. சுயநலவாதிகள் அதனை தங்கள் சொந்த லாபத்திற்காக இனி சீண்டவேண்டாம் என்றும் சொல்லிவிட்டது.

nkn210721
இதையும் படியுங்கள்
Subscribe