செந்தில்குமார். எம், சென்னை - 78

கூட்டணி கட்சிகளை முடிவு செய்திருந்தேன், கட்சி தொடங்கி இருந்தால் ஆட்சியை பிடித்திருப்பேன் எனும் ரஜினியின் பேச்சு?

Advertisment

பக்கத்து வீட்டு +2 பையன்கூட, இந்த முறை பொதுத்தேர்வு நடத்தியிருந்தால் நான்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். கொரோனா காலத்தில் எல்லாவற்றையும்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

உமா சங்கர், மலேஷியா

பல வருடங்கள் கழித்து மக்களாட்சி நடைபெறுகிறது. இதனை எப்படியாவது சீர்குலைக்கும் நினைக்கும் சில கட்சிகளால் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க முடியுமா?

தேர்தல் அரசியல் மூலம் மலரும் மக்களாட்சியில் எல்லா அதிகாரங்களும் மக்களிடமே இருப்பதில்லை. அதிகாரத்தை ருசித்தவர்களாலும் ருசிப்பவர்களாலும் சும்மா இருக்க முடிவதில்லை. பணத்தை விதைத்து அதிகாரத்தை அறுவடை செய்யும் தேர்தல் அரசியல் முறையில் மாற்றம் ஏற்பட்டால்தான் உண்மையான மக்களாட்சி மலரும். இல்லையென் றால், மலர முயற்சிக்கும் நல்லாட்சி யையும் கெடுக்க நினைக்கும் கட்சிகளின் ஆட்டம்தான் தொடரும்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

பல கோடி விலையுள்ள உயர்ந்த ரக கார் இறக்குமதி செய்து வரி செலுத்த தயங்குவது ஏன்?

200 ரூபாய்க்கு காய்கறி வாங்கிவிட்டு, கறிவேப்பிலை- கொத்துமல்லி கொசுறாக கிடைக்கும் என எதிர்பார்ப்பதும், பெட்ரோல் விற்கிற விலையில் பைக் டேங்கை ஃபில் பண்ணிவிட்டு, ஏர் செக்கிங்கிற்கு சில்லறை கொடுக்க யோசிப்பதும் நமக்கு இயல்பாகி விட்டது. இதில் ஹீரோ- ரசிகர் என்ற பேதம் கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் உயர்ந்த ரக கார் ஒன்றை இறக்குமதி செய்த சசிகலா கணவர் நடராஜன், அது தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டார். உதய நிதி வாங்கிய உயர்ந்த ரக கார் தொடர்பாக மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடந்தது. அரசிய லுக்கு வந்தவர்களுக்கு மட்டு மல்ல, அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கும் கார் மூலம் சிக்கல் வருவது வழக்கமாகி விட்டது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.613 006.

ஒரு நாலு சட்டமன்றத் தொகுதியில் ஜெயித்தவுடன் பா.ஜ.க. தமிழகத்தை துண்டாக்க நினைக்கிறதே?

Advertisment

தனக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் மற்ற கட்சிகளைத் துண்டாடுவது, மற்ற கட்சிகள் செல்வாக்காக உள்ள மாநிலங்களில் தன்னால் செல்வாக்காக வளர முடியாவிட்டால் மாநிலத்தையே துண்டாக்கிவிடுவது என்பதுதான் பா.ஜ.க.வின் அரசியல். ஒரே தேசம் என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக, மக்களைத் துண்டாடும் பா.ஜ.க.வின் செயல்பாடு, ஜம்மு- காஷ்மீரில் தொடங்கி தமிழ்நாடு வரை தொடர நினைக்கிறது. நடுவில் புதுச்சேரியைப் பதம் பார்த்தது. மற்ற கட்சிகள் தங்கள் சுயநலத்தைத் தவிர்த்து ஒன்று சேராவிட்டால், இந்தியாவின் மாநிலங்களை தாலுகா- பஞ்சாயத்து லெவலுக்கு கொண்டுவந்து விடும் மோடி அரசு.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை, "சிவப்பு கம்பளம் விரித்து'' வரவேற்கும். தி.மு.க... ... அவர்களுக்கு. முக்கியத்துவமும். கொடுப்பதால் தி.மு.க.வில். நெடுங்காலமாக உள்ள சீனியர்கள் வருத்தப் படுவது பற்றி?

ஆளுங்கட்சி என்பது நீர் உள்ள குளம். அதனை சரணா லயமாக நினைத்து தேடி வரும் மற்ற இடத்துப் பறவைகள் அதிகம். ஆனால், குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அங்கேயே இருப்பவை மீன்கள். சரணாலயத்திற்கு வரும் பறவைகளுக்கு எப்போதுமே செல்வாக்கு உண்டு. ஒரு சில பறவைகள் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி விடுவதும் உண்டு. எப்படி இருந்தாலும் பறவைகளுக்கு மீன்கள் இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குளத்தின் பொறுப்பு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கலைஞரையே ஓரங் கட்டினோம்; ஸ்டாலின் எம்மாத்திரம் என்கிறாரே எஸ்.பி. வேலுமணி?

mavali

அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக விளங்கியவர் கலைஞர். சக்கர நாற்காலியில் இருந்தபடியே இந்திய அரசியலையும் சுழல வைத்தவர். மரணத்திலும் தனக்கான இடத்தை சட்டரீதியாகப் பெற்றவர்.

b

அவரை ஓரங்கட்ட ஒருவராலும் முடியவில்லை என்பது வரலாறு. இரும்பு பெண்மணி எனச் சொல்லப்பட்ட சொந்தக் கட்சியின் தலைவியையே ஒரு துரும்புபோல 75 நாட்கள் மருத்துவமனையில் படுக்கவைத்து, அவரது மரணத்தின் பின்னணியைக் கட்சித் தொண்டர்கள்கூட அறியமுடியாதபடி செய்த சாதனைதான் வேலுமணி கூட்டத்தாருடையது.