கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த எண்ணெய் கடன் பத்திரங்களே காரணம்' என்று பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டுகிறதே?
"ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்' என 7 ஆண்டுகளுக்கு முன் வாக்குறுதி கொடுத்து, 100 ரூபாய்க்கு கொண்டுசென்று சாதனை படைத்த பா.ஜ.க. அரசு, தன்னுடைய தோல்விகளுக்கெல்லாம் காங்கிரசை தேடுகிறது. கடன் பத்திரங்கள்தான் காரணம் என்றால் அதைக் கண்டுபிடிக்கவே இத்தனை ஆண்டுகள் ஆனதுதான் மோடி அரசின் நிர்வாக லட்சணம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர்தானே கலைஞர் மு.கருணாநிதி?
நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் 80 ஆண்டுகாலத்திற்கு மேலான பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் கலைஞர். அரசியல் தலைவர் -நிர்வாகத் திறன் மிகுந்த ஆட்சியாளர் -ஜன நாயகப் போராளி -எழுத்தாளர்
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த எண்ணெய் கடன் பத்திரங்களே காரணம்' என்று பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டுகிறதே?
"ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்' என 7 ஆண்டுகளுக்கு முன் வாக்குறுதி கொடுத்து, 100 ரூபாய்க்கு கொண்டுசென்று சாதனை படைத்த பா.ஜ.க. அரசு, தன்னுடைய தோல்விகளுக்கெல்லாம் காங்கிரசை தேடுகிறது. கடன் பத்திரங்கள்தான் காரணம் என்றால் அதைக் கண்டுபிடிக்கவே இத்தனை ஆண்டுகள் ஆனதுதான் மோடி அரசின் நிர்வாக லட்சணம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர்தானே கலைஞர் மு.கருணாநிதி?
நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் 80 ஆண்டுகாலத்திற்கு மேலான பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் கலைஞர். அரசியல் தலைவர் -நிர்வாகத் திறன் மிகுந்த ஆட்சியாளர் -ஜன நாயகப் போராளி -எழுத்தாளர் -கவிஞர் -வசனகர்த்தா -படைப்பாளி என பன்முகத்திறமை கொண்டவர். பாரத் ரத்னா என்பது சாதனையாளர் மீது வெளிச்சம் பாய்ச்சும் ஒளிவிளக்கு. கலைஞர், திராவிட சூரியன்.
வாசுதேவன், பெங்களூரு
தமிழக முதல்வர் டெல்லி விஜயத்தின் பொழுது "எளிமையான சைவ உணவு போதும்' என்று கூறியது?
முன்னத்தி ஏர் சரியாக இருந்தால், அதனைத் தொடர்ந்து வரும் ஏர் அனைத்தும் சரியாக அமையக்கூடும். அந்த வகையில், முதல்வரின் முடிவு சரி. அதனை, எளிமையான உணவு என்று அறிவித்தால் போதும். "எளிமையான சைவ உணவு' என்று செய்திக் குறிப்பு வெளியாகும்போது, அசைவ உணவு என்றால் காஸ்ட்லி என்ற தோற்றம் ஏற்படுகிறது. நட்சத்திர ஓட்டலின் பலவகை சைவ உணவுகளைவிட, எளிமையான இறைச்சி உணவு வகைகள் இந்தியாவில் ஏராளமாக உண்டு. அதுதான் ஏழை மக்களுக்குப் புரதச் சத்தைத் தருகிறது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
"தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை' என கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளதே?
கலைஞர் ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இடஒதுக்கீடு என்பதாகும். இதன் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, நியமனங்களை எளிதாக்கி, தமிழ்வழிக் கல்விக்கு, அரசு வேலையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசுக்கு உள்ளது. ஆளுநர் உரை ட்ரைலர் என்ற முதல்வர், மெயின் பிக்சரில் அதனை செயல்படுத்த வேண்டும்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான "சிங்கார சென்னை' திட்டம் இப்போது நிறைவேறுமா?
புத்தாயிரம் எனப்படும் மில்லினியம் ஆண்டின் தேவைக்கேற்ப முன்கூட்டியே சென்னையின் கட்டமைப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தியவர் மேயராக இருந்த மு.க.ஸ்டாலின். நவீன சென்னைக்கேற்ற முகத்தை உருவாக்கி, புதிய முகவரி தந்தவர். இப்போது முதல்வராக, சிங்கார சென்னையை மட்டுமல்ல, தன்னிறைவுத் தமிழகத்தையும் உருவாக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
செந்தில்குமார் எம்., சென்னை-78
எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான், தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததாக தி.மு.க. சொல்கிறதே?
நீட் நுழைந்ததன் பின்னணி நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதனைத் தடுப்பதிலும் தமிழ்நாடு தனித்துவமான செயல்பாடுகளை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசில் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்த நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர். நீட் நுழைவதை நீதிமன்றம் அப்போது தடுத்தது. பா.ஜ.க. அரசின் நீட் திணிப்பை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதிக்க வில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, நீட் நுழைவை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியும் பயனில்லை. தீர்மானம் குப்பைக் கூடைக்குப் போனது. எதிர்த்து நிற்கும் துணிவான முதுகெலும்பு எடப்பாடி அரசுக்கு இல்லை. அ.தி.மு.க அமைச்சராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். வழியிலேயே செயல்படுபவரான மாஃபா பாண்டியராஜன் நீட் நுழைவதற்கேற்ப கையெழுத்துப் போட்டார். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்தது. அனிதாக்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதுதான் நீட்டாக நடந்த கல்விக் கொடுமையின் சுருக்கமான வரலாறு.
தா.வி.நந்தகுமார். ராணிப்பேட்டை
யோகா உருவானது நேபாளத்தில்தான் என்று கே.பி.ஒலி கூறியுள்ளாரே?
‘மதம்’ பிடித்த யானையின் காதில் புகுந்து குடைச்சல் கொடுக்குமாம் எறும்பு. ராமர் பிறந்த இடம் எங்கள் நாட்டில்தான் இருக்கிறது என்று ஒலிக்க ஆரம்பித்தவர்... இப்போது யோகாவுக்கு உரிமை கொண்டாடுகிறார். பா.ஜ.க.வுக்கு இந்தியாவில் சரியான எதிர்க்கட்சி இல்லாத குறையைப் போக்குகிறார் நேபாள பிரதமர்.