மாவலி பதில்கள்

mavali

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை- 110.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் திருவள்ளுவர் படம் காவி உடையுடன் இருந்தது கண்டறிப்பட்டு மாற்றப்பட்டுள்ளதே?

தமிழ்நாட்டை காவிகள்தான் கடந்த 4 ஆண்டுகளாக மறைமுக மாக ஆண்டு வந்தார்கள் என்பதைக் காட்டும் நிகழ்வு இது. தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்பவர் திருவள்ளுவர். அவரது சிறப்பை எப்படியாவது சிதைத்து விடவேண்டும் என்பது காவிகளின் திட்டம். காவிக்கொடி பறக்கும் தென்முனையாம் குமரிக்கடலில் வானுயர வள்ளுவர் சிலையைக் கலைஞர் வைத்ததிலிருந்தே காவிகளின் காலித்தனங்கள் மெல்லத் தொடங்கிவிட்டன. தருண் விஜய் என்பவரைக் கொண்டு வந்து திடீர் திருவள்ளுவர் பாசம் காட்டினார்கள். கங்கை கரையில் வள்ளுவர் சிலை வைக்கப்போவதாகச் சொல்லி, வள்ளுவரின் தோற்றத்தையே இழிவு

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை- 110.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் திருவள்ளுவர் படம் காவி உடையுடன் இருந்தது கண்டறிப்பட்டு மாற்றப்பட்டுள்ளதே?

தமிழ்நாட்டை காவிகள்தான் கடந்த 4 ஆண்டுகளாக மறைமுக மாக ஆண்டு வந்தார்கள் என்பதைக் காட்டும் நிகழ்வு இது. தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்பவர் திருவள்ளுவர். அவரது சிறப்பை எப்படியாவது சிதைத்து விடவேண்டும் என்பது காவிகளின் திட்டம். காவிக்கொடி பறக்கும் தென்முனையாம் குமரிக்கடலில் வானுயர வள்ளுவர் சிலையைக் கலைஞர் வைத்ததிலிருந்தே காவிகளின் காலித்தனங்கள் மெல்லத் தொடங்கிவிட்டன. தருண் விஜய் என்பவரைக் கொண்டு வந்து திடீர் திருவள்ளுவர் பாசம் காட்டினார்கள். கங்கை கரையில் வள்ளுவர் சிலை வைக்கப்போவதாகச் சொல்லி, வள்ளுவரின் தோற்றத்தையே இழிவுபடுத்தும் வகையில் சிலை அமைத்து, அதை குப்பை மேட்டில் போட்டார்கள். வள்ளுவர் ஓவியத்தில் உள்ள வெள்ளைத் துணியை காவியாக்கி வம்பிழுத்தார்கள். அதனை மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். ஆட்சி மாறியதால், காட்சி மாறியிருக்கிறது. ஆனாலும், கல்வித்துறையில் ஊடுருவியிருக்கும் காவிமயம் எதிர்காலத் தலைமுறைக்குப் பெரும் அச்சுறுத்தல் தான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

மீண்டும் சரத்பவார்- பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பற்றி?

தனிப்பட்ட சந்திப்பு என்று சொல்லிவிட்டு முதல்முறை இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். அப்போதே இது அரசியல்ரீதியான திட்டமிடல் என்பது தெரிந்துவிட்டது. ஒரு காலத்தில் மராட்டியத்தில் சரத்பவாரும் அவரது தேசியவாத காங்கிரசும் பெரும் செல் வாக்குடன் இருந்தன. காங்கிரசிலிருந்து பிரிந்து அதற்கு மாற்று சக்தியாகவும், பா.ஜ.க- சிவசேனா கூட்டணிக்கு எதிரான வலிமையான அமைப்பாகவும் தேசியவாத காங்கிரஸ் இருந்தது. பின்னர், காலச்சூழலில் காங்கிரசின் நேசக் கட்சியாக தேசியவாத காங்கிரஸ் மாறிவிட்டது. சிவசேனாவோ பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலையைத் தவிர்க்கும் வகையில் சிவசேனா அரசுக்கு காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் ஆதரவளிக்க வேண்டிய சூழலில் மராட்டிய அரசியல் தலைகீழாகியுள்ளது. இது நீண்டகாலப் போக்கில் எந்த லாபத்தையும் தராது என்பது சரத்பவாருக்குத் தெரியும். பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுக்காமல் இந்திய அரசியலில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். மராட்டியத்தில் தொடங்கி, இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்தாக வேண்டிய தேவை உள்ளது. மராட்டியத்தில் தன்னையும் தனது கட்சியையும் மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எல்லாவற்றையும் கணக் கிட்டுத்தான் மூத்த அரசியல் தலைவரான சரத்பவார், வெற்றிகரமான வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை மீண்டும் சந்தித்துள்ளார். அந்த ஆலோசனையின்படி, சரத்பவார் வீட்டில் 8 கட்சிகள் கூடி ஆலோசித்துள்ளன. இது எந்தளவுக்கு வலிமையான அணியாக மாறும் என்பது போகப் போகத் தெரியும்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

"தலைவர்கள் சந்திக்கும்போது பரிசாக தரப்படும் "புத்தகங்களை' சம்பந்தப்பட்டவர்கள் புரட்டிப் பார்ப்பார்களா.?

புத்தகங்களை மட்டுமல்ல, சிறிய துண்டுப் பிரசுரங்களைக்கூட படிப்பது கலைஞரின் வழக்கம். தன்னைக் கவர்ந்த புத்தகங்களை- எழுத்துகளைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். கலைஞரைப் போல ஒரு சில அரசியல் தலைவர்கள் உண்டு. ஒரு சிலர், மு.க.ஸ்டாலினைப் போல தனக்கு வரும் புத்தகங்களை பள்ளிக்கூடங்களுக்கும் நூலகங்களுக்கும் வழங்கி, பலரும் படிப்பதற்கு உதவி செய்வார்கள். ஒரு சிலருக்குப் பரிசளிக்கப்படுவை, பழைய பேப்பர் கடைகளுக்குப் போவதும் உண்டு.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

மக்களுக்கான இயக்கம் என்பதற்கான அடையாளம் எது- அளவுகோல் என்ன?

mm

போராட்டமும் தியாகமுமே பொது வாழ்க்கை என்ற தூய எண்ணத்துடன், எவ்வித அதிகாரத்திற்கும் ஆசைப்படாமல் நூறு வயதை நெருங்கும் நிலையிலும் மக்கள் நலனை நினைத்து செயலாற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான மூத்த தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோரைப் பாருங்கள். புரியும்.

nkn260621
இதையும் படியுங்கள்
Subscribe