ம.ராகவ்மணி, குப்பம் -ஆந்திரா.
முதல்வரின் டெல்லிபயணம் அவருக்கு வெற்றியா?
மாநில அரசின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய அரசின் பிரதமரை சந்திப்பது என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமல்ல... மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைத்து நிதி கோருவது, மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்க்கும் சந்திப்பாகும். 25 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமரை முதல்வர் சந்தித்திருப்பது, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் தன்மையை ஒன்றிய அரசின் பிரதமர் காப்பாற்றுகிறாரா என்பதில் இருக்கிறது பயணத்தின் வெற்றி.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தற்போதைய சூழலில் வேட்டைக்காரன், தாய் மீது சத்தியம் போன்று விலங்குகளை முக்கியமாக காண்பிக்கும் படங்கள் எடுக்க முடியாதுதானே?
நிஜ விலங்குகளைத் துன்புறுத்தி -கஷ்டப்படுத்தி படம் எடுப்பதை தணிக்கைத்துறை அனுமதிக்காது. அதையே கிராஃபிக்ஸ் உதவியுடன் எடுத்தால் அனுமதி கிடைக்
ம.ராகவ்மணி, குப்பம் -ஆந்திரா.
முதல்வரின் டெல்லிபயணம் அவருக்கு வெற்றியா?
மாநில அரசின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய அரசின் பிரதமரை சந்திப்பது என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமல்ல... மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைத்து நிதி கோருவது, மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்க்கும் சந்திப்பாகும். 25 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமரை முதல்வர் சந்தித்திருப்பது, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் தன்மையை ஒன்றிய அரசின் பிரதமர் காப்பாற்றுகிறாரா என்பதில் இருக்கிறது பயணத்தின் வெற்றி.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தற்போதைய சூழலில் வேட்டைக்காரன், தாய் மீது சத்தியம் போன்று விலங்குகளை முக்கியமாக காண்பிக்கும் படங்கள் எடுக்க முடியாதுதானே?
நிஜ விலங்குகளைத் துன்புறுத்தி -கஷ்டப்படுத்தி படம் எடுப்பதை தணிக்கைத்துறை அனுமதிக்காது. அதையே கிராஃபிக்ஸ் உதவியுடன் எடுத்தால் அனுமதி கிடைக்கும். "வேட்டைக்காரன்' எம்.ஜி.ஆருக்கும் "தாய் மீது சத்தியம்' ரஜினிக்கும் அந்தக் காலத்தில் சில காட்சிகளில் டூப் போட்டிருப்பார்கள். அதுபோல விலங்குகளுக்கும் கிராஃபிக்ஸ் மூலம் இந்தக் காலத்தில் டூப் போடவேண்டும்.
வாசுதேவன், பெங்களூரு
திருக்குறள் அடைந்த புகழை ஆத்திசூடி அடையாதது ஏன்?
தமிழின் நீதி நூல்கள் அனைத்துக்குமே தனி சிறப்பு உண்டு. ஆத்திசூடிக்கும் அந்த சிறப்பு உண்டு. திருக்குறள் கூடுதல் சிறப்பு பெற்றதற்கு காரணம், உலகின் உயர்ந்த தத்துவங்கள் அனைத்தையும் தனது முப்பாலில் முழுமையாக எடுத்துரைப்பதாகும். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த ஜி.யூ. போப், எல்லீஸ் போன்றவர்களையும் அது ஈர்த்தது. அதுமட்டுமின்றி, இலக்கியம் என்றாலே கம்பராமாயணம், பெரியபுராணம் என்று புலவர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில்... பெரியாரும் திராவிட இயக்கமும் தமிழறிஞர் களும் திருக்குறளை முன்னெடுத்தனர். திருக்குறளுக்காக பல மாநாடுகளை நடத்தி யிருக்கிறார் பெரியார். சொன்ன கருத்துகளும் -அதைச் சொன்ன முறையும் திருக்குறளை பிற நூல்களைவிட முன்னிலையில் நிறுத்துகிறது.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
தரமான இலவச மளிகைப்பொருட்கள் வழங்கி யிருக்கும் முதல்வருக்கு இல்லத் தரசிகளின் பாராட்டு குவிகிறதே..?
எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களுக்கு வழங்கப்படுவது மக்களின் வரிப் பணத்திலிருந்துதான். அதை சரியாகவும் தரமாகவும் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி யில் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டுள்ள மளிகைப்பொருட் களில் தரம் நிறைந்திருப்பதுடன். அந்தப் பொருட்கள் அடங்கிய பையில் யாருடைய மூஞ்சியும் இல்லாமல், தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்ன மும், மளிகைப் பொருட் களின் விவர மும் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது கூடுதல் பாராட்டைப் பெற்றுள்ளது.
சு. தாமரைச்செல்வன், பெருந்துறை.
தற்போது சாமியார் என்ற பெயரில் போலி ஆசாமிகள் அதிகமாக உருவாகி விட்டார்களே?
இப்போதுதானா போலி சாமியார்கள் உருவாகியிருக்கிறார்கள்? “ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே.. ருத்ராட்சப் பூனைகளாய் வாழுறீங்க?” என்று எம்.ஜி.ஆர். காலத்திலேயே பாட்டு வந்துவிட்டது. பிரேமானாந்தா, நித்தியானந்தா உள்ளிட்ட சாமியார்களின் மோசடிகளை நக்கீரன் புகைப்பட ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. லோககுரு எனப்பட்ட சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் செய்த மோசடிகளை நக்கீரன் அம்பலப்படுத்தியபோது, அவரால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் அனுராதாரமணன் அதனை வெளிப்படையாக எழுதினார். தற்போது சிக்கியிருக்கும் சிவசங்கர பாபாவை 20 ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியது நக்கீரன். கல்கி சாமியார் உள்பட சாமியார்களின் மோசடித்தனங்களையும் தோலுரித்திருக் கிறது. காவி மோசடிகள் காலந்தோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
இந்திரா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி... இவர்களெல்லாம் தலைக்கனம் மிக்கவர்கள் என்ற கருத்து சரியா?
பெண் அரசியல்வாதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகளின் அடிப்படையில் இப்படிப்பட்ட பார்வை வெளிப்படுகிறது. அந்த அதிரடி முடிவுகள் நாட்டுநலன் சார்ந்ததா, தனிப்பட்ட ஆதாயத்திற்கா என்பதைக் கவனிக்கவேண்டும். பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்தபோது இந்திராகாந்தியை "துர்காதேவி' என்று பாராட்டினார் வாஜ்பாய். அதே இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டுவந்து அரசியல் தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தபோது வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அவரைக் கண்டித்தனர். ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி உள்ளிட்டவர்களின் செயல்பாடுகளில் நாட்டுநலன் அதிகமா, சுயலாபம் அதிகமா என்பதை அந்தந்த மாநில மக்கள் அறிவார்கள்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் குறித்து?
கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் பசியாற்றிய கோவில் அன்ன தானத் திட்டம் -பெண் அர்ச்சகர் பயிற்சி -அனைத்து சாதியினரும் அர்ச்சகர் -தமிழில் வழிபாடு என ஆன்மிகத்தில் திராவிட வெளிச்சம் பாய்ச்சுகிறார் அறநிலையத் துறை அமைச்சர்.