மாவலி பதில்கள்!

mavali

ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்

தி.மு.க.வின் ஆட்சி தொடக்கம் எப்படி இருக்கிறதோ... இதே நிலை ஐந்து ஆண்டுகளும் தொடருமா?

தொடக்கம்போல தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. பேரிடர் காலத்தில் முதல்வர் காட்டும் கவனம், அதன்பிறகான காலக்கட்டத்தில் எப்படி இருக்கப்போகிறது, அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த ஓப்பனிங் சிக்ஸர்கள் தொடருமா அல்லது விக்கெட்டுகள் வீழுமா என்பது தெரியும்.

செ.பொன்னுசாமி, சிவகங்கை

தி.மு.க. எப்போதும் கோயில்களுக்கு எதிரானது என்ற பா.ஜ.க. தலைவர் எல்.முருகனின் பேட்டி பற்றி?

மசூதியை இடித்தது, பாதிரியாரைக் கொளுத்தியது, கோவிலுக்குள் சிறுமியை சீரழித்தது இவை எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் சித்தாந்தத்தை கொண்

ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்

தி.மு.க.வின் ஆட்சி தொடக்கம் எப்படி இருக்கிறதோ... இதே நிலை ஐந்து ஆண்டுகளும் தொடருமா?

தொடக்கம்போல தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. பேரிடர் காலத்தில் முதல்வர் காட்டும் கவனம், அதன்பிறகான காலக்கட்டத்தில் எப்படி இருக்கப்போகிறது, அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த ஓப்பனிங் சிக்ஸர்கள் தொடருமா அல்லது விக்கெட்டுகள் வீழுமா என்பது தெரியும்.

செ.பொன்னுசாமி, சிவகங்கை

தி.மு.க. எப்போதும் கோயில்களுக்கு எதிரானது என்ற பா.ஜ.க. தலைவர் எல்.முருகனின் பேட்டி பற்றி?

மசூதியை இடித்தது, பாதிரியாரைக் கொளுத்தியது, கோவிலுக்குள் சிறுமியை சீரழித்தது இவை எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் சித்தாந்தத்தை கொண்ட அரசியல் அமைப்பின் மாநிலத் தலைவர் எல்.முருகன், தங்கள் இயக்கத்தைப் போல பிற இயக்கங்களையும் பார்க்கிறார் போலும்.

mavali

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு -சென்னை

மார்க்கெட் இழந்த நடிகர் சொந்தப் படம் எடுப்பார். அதேபோன்று அரசியலில் பதவி இழந்த அரசியல்வாதி என்ன செய்வார்?

மார்க்கெட் இழந்து சொந்தப் படம் எடுத்தால், கையிருப்பும் காலியாகிவிடும். தன் திறமைக்கேற்ற வாய்ப்பு -கதை அமையாதபோது, தனக்குள்ள மார்க்கெட்டின் அடிப்படையில் சொந்தப் படம் எடுப்பவர்கள்தான் வெற்றிகரமான நாயகர்களாகிறார்கள். மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்கள் மூலமாக மக்களிடம் செல்வாக்கு பெறத்தொடங்கிய எம்.ஜி.ஆர்., தன் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதையமைப்பு கொண்ட "நாடோடி மன்னன்'’ படத்தை சொந்தமாகத் தயாரித்து அவரே இயக்கி, இரு வேடங்களில் நடித்தார். படம் பெரு வெற்றி பெற்றதுடன் அவரை புரட்சி நடிகராக்கியது. முதல் படமான பராசக்தியிலேயே புகழ்பெற்றுவிட்ட சிவாஜி, தனது நடிப்பாற்றலை மற்றொரு கோணத்தில் வெளிப்படுத்தும் வகையில் புதிய பறவை என்ற படத்தை தயாரித்தார். தாதாமிராஸியின் கதையும் இயக்கமும் இன்று வரை அந்தப் படத்தை எவர்க்ரீன் ஸ்க்ரீன்ப் ளேவாக வைத்திருக்கிறது. தன்னை அறிந்தோர் சொந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியில் பதறுவோர் தங்களுக்குத் தாங்களே குழிவெட்டிக் கொள்கிறார்கள்... சினிமா -அரசியல் இரண்டிலும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த கமல்ஹாசனும் சீமானும் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

தோல்வியடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்களா, அதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறதா என்பது அவர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளில்தான் தெரியும்.

அயன்புரம் த.சத்தியநாராயணன்

கொரோனாவை பரவாமல் கட்டுப் படுத்தியதில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரில் யார் நடவடிக்கை சிறப்பானது?

முதல் அலை பரவத் தொடங்கியபோது, கொரோனாவால் தமிழ்நாட்டில் ஒரு உயிர்ப்பலி கூட ஏற்படாது என்று சட்டமன்றத்தில் சவால்விட்டவர் எடப்பாடி பழனிசாமி. மூன்று நாட்களில் கொரோனா ஒழிந்துவிடும் என்ற ஆராய்ச்சி முடிவையும் அவர் வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பே கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகிவிட்டது. அவரது ஆட்சியின் முதல் பணியே ஆக்சிஜன் தட்டுப்பாடு -தடுப்பூசி தட்டுப்பாடு -மருந்து தட்டுப்பாடு இவற்றை சரி செய்யவேண்டிய கடும் சோதனையை எதிர்கொள்கிறது. இவர்கள் இருவரையும்விட கைத்தட்டச் சொல்லியும், விளக்கேற்றச் சொல்லியும் கொரோனாவை விரட்டியடித்த மோடிதான் சிறப்பானவர் என்று அவரது கட்சியினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா சிரிக்கிறது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

தி.மு.க.வினர் தப்பு செய்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் காந்தி கூறியிருப்பது குறித்து?

ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரியானதுதான். அதைவிட, தி.மு.க.வினர் தப்பு செய்யாமல் இருப்பதே மிகச் சரியானது.

சரவணன், கொடைக்கானல்

மத்திய அரசை, மத்திய அரசு என்றே அழைக்க வேண்டும்: எடப்பாடி பேச்சு பற்றி?

மத்திய அரசை மத்திய அரசு என்று அழைக்கவேண்டும். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லவேண்டும்.

nkn90621
இதையும் படியுங்கள்
Subscribe