மாவலி பதில்கள்

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

முதல்வர் ஆனபின் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதை மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டாரே?

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் சுட்டிக்காட்ட வேண்டும். முதல்வர் என்பவர் செயல்படுத்த வேண்டும். அந்தப் பக்குவமும் மாற்றமும் மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படு கிறது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக்காலத் தில் நடந்த முறைகேடுகள் மீதும், அதைச் செய்தவர் கள் மீதும் சட்டப்படியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து முதல்வராகியுள்ள மு.க.ஸ்டா லினுக்கு இருக்கிறது.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

மத்திய, மாநில அரசுகள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக எழும் புகார் நிலை குறித்து?

மக்களிடம் பீதியை உண்டாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குறைக்கப்படும் எண்ணிக்கையும் உண்டு. ஆட்சியின் லட்சணம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்று மறைக் கப்படும் எண்ணிக்கையும் உண்டு. இரண்டாவது வகை யில், அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை கணக்கும் மாநகராட்ச

சி. கார்த்திகேயன், சாத்தூர்

முதல்வர் ஆனபின் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதை மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டாரே?

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் சுட்டிக்காட்ட வேண்டும். முதல்வர் என்பவர் செயல்படுத்த வேண்டும். அந்தப் பக்குவமும் மாற்றமும் மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படு கிறது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக்காலத் தில் நடந்த முறைகேடுகள் மீதும், அதைச் செய்தவர் கள் மீதும் சட்டப்படியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து முதல்வராகியுள்ள மு.க.ஸ்டா லினுக்கு இருக்கிறது.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

மத்திய, மாநில அரசுகள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக எழும் புகார் நிலை குறித்து?

மக்களிடம் பீதியை உண்டாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குறைக்கப்படும் எண்ணிக்கையும் உண்டு. ஆட்சியின் லட்சணம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்று மறைக் கப்படும் எண்ணிக்கையும் உண்டு. இரண்டாவது வகை யில், அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை கணக்கும் மாநகராட்சி மயானக் கணக்கும் மாறுபட்டிருந்து அம்பலமானதே அதற்கு சாட்சி. கங்கையில் மிதந்து வரும் பிணங்கள் இந்திய அளவிலான கொடூரம். கொரோனா மரணங்கள் கணக்கெடுப்பு என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இறப்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. கொரோனா பரிசோதனை செய்யப்படாமல், கொரோனா தாக்கு தலால் இறந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படுவ தில்லை. எனவே, அரசாங்க கணக்குகளைவிட கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நித்திலா, தேவதானப்பட்டி

அண்மையில் மறைந்த முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்த கிருஷ்ணன் பற்றிய நினைவலைகள்?

mm

ஒற்றைச் சாளர முறையில் பொறி யியல் கல்லூரி சீட்டை மாணவர்களுக்கு வெளிப்படையாகக் கிடைக்கச் செய்தவர். தனது ஆய்வறிக்கை வாயிலாக பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றத் துணை நின்று, கிராமப்புற ஏழை மாணவர்களை டாக்டர்களாகவும் இன்ஜினியர்களாகவும் ஆக்கியவர். கணிணியில் தமிழை வளர்த்த வர். இத்தனையும் தி.மு.க. ஆட்சியின் துணையோடு செய்த அவரை, அ.தி.மு.க. ஆட்சியில் ஆட்டோவில் அடியாட்கள் அனுப்பி தாக்கியதுதான் அவருக்கு ஜெயலலிதா தந்த பரிசு.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

நாம் தமிழர் கட்சி, சட்டபேரவை தேர்தலில் 3-வது இடம் வந்துவிட்டதாக கூறுவது ஒரு மாயத்தோற்றம். அ.ம.மு.க.வும், ம.நீ.ம. கட்சிகள்கூட அனைத்து தொகுதிகளிலும் தனித்தனியாக நின்றிருந்தால், அவர்களுடைய வாக்கு சதவீதம் இன்னும் அதிக மாகி, அவர்களும் 3-வது இடத்திற்கு போட்டி போட்டிருப்பார்கள் என்பதுதானே உண்மை?

இப்படி போட்டியிருந்தால் அப்படிப் போட்டியிருந்தால் என்பது கணக்கில் கொள்ளப் படாது. வெளியான முடிவுகளின் அடிப்படையில் யார் முதலிடம், யார் இரண்டாவது இடம், யார் மூன்றாவது இடம் என்பதுதான் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில், முதல் இரண்டு இடங் களில் உள்ள தி.மு.க.வும் அ.தி.மு.க வும் நெருக்கமான வித்தியாசத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி வெகு தொலைவில் உள்ளது. ஆனால், ஓட்டு எண்ணிக் கைப்படி அதற்குத் தான் முதல் இடம். நாடாளுமன்ற மாநிலங் களவையில் பா.ஜ.க. ஆளுங்கட்சியாக பெரும் மெஜா ரிட்டியுடன் உள்ளது. இரண்டா வது இடத்தில் உள்ள காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் இடங்களைப் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமல் உள்ளது. 27 எம்.பி.க்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இதுதான் கணக்கில் கொள் ளப்படும். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை முதலிடம், தி.முக. இரண்டாவது இடம், அ.தி.மு.க. மூன்றாவது இடம், காங்கிரஸ். இதைப் பலரும் பேசுவதில்லை.

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

சீதை -பாஞ்சாலி -அகல்யா -சந்திரமதி -தமயந்தி -கண்ணகி இவர்களில் பதிபக்தியில் மிஞ்சியது யார்?

m

ராமன் இருக்கும் இடமே அயோத்தி என்றவர் சீதை. கணவனின் சொல்லால் தீக்குளித்து தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. பாண்டவர் களுடன் வனவாசம் சென்றவர் பாஞ் சாலி. அவர்கள் முன்னிலையிலேயே கௌரவர் அவையில் அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அகல்யா, சந்திரமதி, தமயந்தி ஆகியோரும் கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்தவர் கள். தங்களுக் கான இன்பத்தை -உரிமையைவிட கணவனின் விருப்பமே முதன்மையானது என்று வாழ்ந்தவர்கள். கண்ணகியும் கணவனே எல்லாமும் என வாழ்ந்தவர். கணவன் தன்னைவிட்டு இன்னொரு பெண்ணைத் தேடிச் சென்றபோதும் அது பற்றி கேள்வி கேட்காதவர். ஆனால், தன் கணவனுக்கு அநீதி நிகழ்ந்து விட்டது என்றதும் ‘"பொறுத்தது போதும்... பொங்கி எழு'’ என்பது போல அரசவைக் குள் நுழைந்து, ‘"தேரா மன்னா...'’என அரசனிடம் நேருக்கு நேராக கேள்வி எழுப்பி, தன் நியாயத்தை எடுத்துரைத்த பெண்ணு ரிமைப் போராளி. சிலப்பதி காரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அந்தக் கண்ணகி யின் சாயலைத்தான், இதி காசங்கள் காட்டாத பாஞ் சாலிக்குத் தனது பாஞ்சாலி சபதத்தில் படைத்திருந்தார் மகாகவி பாரதி.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

கொரோனா குறித்த அரசின் வழிகாட்டுதல்கள், மற்றும் தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரம் செய்யும். யோக குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பாயாதது ஏன்?

ஆட்சியாளர்கள் எனும் பரமசிவன் கழுத்து பாம்புகளாக கார்ப்பரேட் சாமியார்கள் இருக்கிறார்கள். வடக்கே பாபா ராம்தேவ்... தெற்கே ஈஷா ஜக்கி... நடுவில் இன்னும் பலர்.

nkn010621
இதையும் படியுங்கள்
Subscribe