எம்.சண்முகம், கொங்கணாபுரம்
"தனித்துதான் போட்டியிடுவோம்' என்று சில தலைவர்கள் முடிவெடுத்து டெபாசிட் கூட பெறமுடியாத அளவுக்குத் தோற்றுப் போய்விடு கிறார்களே?
அரசியலில் வெற்றி மட்டும் லாபம் தருவதல்ல. அடுத்த வரை வெற்றி பெறவிடாமல் தடுப்பதிலும் லாபம் இருக்கிறது. அதற்காக, பல கோடிகள் லாபம் கிடைக்கும்போது, தன்னுடைய டெபாசிட் தொகை பறிபோவது பற்றி அத்தகையவர்கள் கவலைப்படுவதில்லை.
அயன்புரம் த.சத்தியநாராயணன்,சென்னை
கொரோனாவுக்கு ஆவி பிடிக்கும் வைத்தியம் எப்படி?
தலையில், மூக்கில் நீர் சேர்ந்திருக்கும்போது, நொச்சி- யூக்கலிப்டஸ் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது முதற்கட்ட நிவா ரணத்தைத் தரும். அதுவே நெஞ்சுப் பகுதியில் நீர் கோர்த் தால் மரபுவழி சிகிச்சைகளில் வேறு முறைகளே கடைப்பிடிக் கப்படுகின்றன.
கொரோனா இரண்டா வது அலையின் முக்கிய தாக்குதல் பகுதியாக இருப்பது நெ
எம்.சண்முகம், கொங்கணாபுரம்
"தனித்துதான் போட்டியிடுவோம்' என்று சில தலைவர்கள் முடிவெடுத்து டெபாசிட் கூட பெறமுடியாத அளவுக்குத் தோற்றுப் போய்விடு கிறார்களே?
அரசியலில் வெற்றி மட்டும் லாபம் தருவதல்ல. அடுத்த வரை வெற்றி பெறவிடாமல் தடுப்பதிலும் லாபம் இருக்கிறது. அதற்காக, பல கோடிகள் லாபம் கிடைக்கும்போது, தன்னுடைய டெபாசிட் தொகை பறிபோவது பற்றி அத்தகையவர்கள் கவலைப்படுவதில்லை.
அயன்புரம் த.சத்தியநாராயணன்,சென்னை
கொரோனாவுக்கு ஆவி பிடிக்கும் வைத்தியம் எப்படி?
தலையில், மூக்கில் நீர் சேர்ந்திருக்கும்போது, நொச்சி- யூக்கலிப்டஸ் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது முதற்கட்ட நிவா ரணத்தைத் தரும். அதுவே நெஞ்சுப் பகுதியில் நீர் கோர்த் தால் மரபுவழி சிகிச்சைகளில் வேறு முறைகளே கடைப்பிடிக் கப்படுகின்றன.
கொரோனா இரண்டா வது அலையின் முக்கிய தாக்குதல் பகுதியாக இருப்பது நெஞ்சகத்தில் உள்ள நுரை யீரல்தான். அதற்கு, ஆவி பிடித்தல் என்பது குறைந்தபட்ச நிவாரணமேயின்றி முழுமை யான சிகிச்சை அல்ல என்பதை சித்த மருத்துவ வல்லுநர்கள் உள்பட பலரும் தெரிவிக்கின் றனர். வீட்டில் -மருத்துவ மனையில் நோயாளிகள் தனித் தனியாக ஆவி பிடிப்பதற்கும், பொதுஇடத்தில் புகை போட்டு, ஒருவர் மாற்றி ஒருவர் ஆவி பிடிப்பதற்கும் உள்ள வேறு பாட்டை விளக்கி, இப்படிச் செய்வ தால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்தியலிங்கமும் எம்.பி. பதவியை விடுத்து, எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்பட்டது ஏன்?
மாநில அளவில் பதவி என்பதை விட, மாவட்டச் செயலாளர் பதவி தான் வலிமையானது என்பது அ.தி.முக.-தி.மு.க. இரண்டு கட்சி களிலும் உள்ளவர்கள் அறிவார்கள். அதுபோல, டெல்லியில் எம்.பி.யாக இருப்பதைவிட, தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பதே பலன் தரும் என்பது தொலைநோக்குத் திட்டம்.
வண்ணை கணேசன், பொன்னி யம்மன்மேடு
அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினரான தொண்டன் கூட முதல்வர் ஆகலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினாரே, அப்படி எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் முதல்வர் ஆகி இருக்கிறார்?
எடப்பாடி பழனிச்சாமி தன்னைத்தான் அப்படிச் சொன்னார். பெரியளவில் பிரபலமில்லாத தன்னை கட்சித் தலைமை முதலமைச்சராக் கியதைத்தான் அவர் அப்படிச் சொன்னார். அவரை முதலமைச்சராக் கியவர், சசிகலா. அந்த சசிகலா, கட்சியில் செல்வாக்கு செலுத்தக் காரணம் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதா அரசியல் பக்கம் வராமல் சினிமா துறையில் இருந்தபோது, அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். 1977, 1980 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகே அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் விருப்பப்படி கட்சியில் உறுப்பினரான ஜெயலலிதாவுக்கு உடனடியாக கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கிடைத்தது. அதே வேகத்தில், ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது. சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் பொறுப்பும் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அ.தி.மு.க.வின் ஓர் அணிக்கு பொதுச்செயலாளராகவும் ஆனார். 1989-ல் எதிர்க்கட்சித் தலைவராகி 1991-ல் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். ஜெயலலி தாவைப் போல அ.தி.மு.கவில் மிகவேகமாகப் பல பதவிகளைப் பெற்ற அடிப்படை உறுப்பினர் வேறு எவரும் கிடையாது.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
இன்னும் மனிதம் உயிர்ப்புடன் உள்ளது என்பதற்கு ஒரு சான்று?
ஒன்றல்ல பல சான்றுகளை இந்த கொரோனா பேரிடர் காலத்தில் காண முடிகிறது. இயக்குநர் வசந்தபாலனுக்குத் தொற்று ஏற்பட்ட நேரத்தில் உதவிய அவரது நண்பர், வசந்த பாலனை கவச உடையுடன் சந்தித்து ஊக்க மளித்த இயக்குநர் லிங்குசாமி, திரைக்கலைஞர் ரோகிணி பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்த த.மு.எ.க.ச. தோழர்கள், கொரோனாவால் மனைவி இறந்த நிலையில், அதே பாதிப்புக்குள்ளான அவரது கணவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கவச உடையில் இறுதிச் சடங்கை நிறைவேற்ற வந்தபோது, பக்கத்தில் நின்று தோள் தொட்டு ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்... இப்படி பிரபலங்களின் மனிதத்தன்மை உடனுக்குடன் ஊடகங்களில் வெளிப்பட் டுள்ளது. இதைக்கடந்து, வெளியே முகம் காட்டாமல் மக்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள், இறந்தவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்யும் பணியை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனத்தார், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு உயிரையும் காக்க ஓயாமல் போராடும் மருத்துவர்கள் -செவிலியர்கள் -மருத்துவமனைப் பணியாளர் கள் என பல இடங்களிலும் மனிதம் உயிர்த்திருக்கிறது. இந்தச் சூழலிலும் ஆங்காங்கே சில புல்லுருவிகளும் கருங்காலிகளும் தென்படுகின்றனர்.