மாவலி பதில்கள்

mavali

பி.மணி, குப்பம் -ஆந்திரா மாநிலம்

7 பேர் விடுதலையை தி.மு.க தன் மதிநுட்பத்தால் சாதித்துக் காட்டுமா?

இதில் மதிநுட்பத்தைவிட மன நுட்பம்தான் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை என உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, முதன்முறையாக நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள்தண்டனையாக்கும் சட்டரீதியான முயற்சியை நிறைவேற்றியது தி.மு.க அரசு. அதற்கு சோனியா காந்தியின் இசைவு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது, மற்றவர்களின் மரண தண்டனையையோ ஆயுள் தண்டனையையோ குறைப்பதற்கான காலம் கனியவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியிருந்தன. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தனர். ஒருகட்டத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதியும் குறிக்கப்பட்டது. தமிழுணர்வாளர்களின் போராட்டம் வேகம் எடுத்தது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்

பி.மணி, குப்பம் -ஆந்திரா மாநிலம்

7 பேர் விடுதலையை தி.மு.க தன் மதிநுட்பத்தால் சாதித்துக் காட்டுமா?

இதில் மதிநுட்பத்தைவிட மன நுட்பம்தான் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை என உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, முதன்முறையாக நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள்தண்டனையாக்கும் சட்டரீதியான முயற்சியை நிறைவேற்றியது தி.மு.க அரசு. அதற்கு சோனியா காந்தியின் இசைவு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது, மற்றவர்களின் மரண தண்டனையையோ ஆயுள் தண்டனையையோ குறைப்பதற்கான காலம் கனியவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியிருந்தன. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தனர். ஒருகட்டத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதியும் குறிக்கப்பட்டது. தமிழுணர்வாளர்களின் போராட்டம் வேகம் எடுத்தது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் சொன்ன முதல்வர் ஜெயலலிதா, அடுத்தநாளே, தண்ட னைக் குறைப்புக்கு ஆதரவான நிலையை எடுத்தார். அதன்பிறகு உச்சநீதி மன்றம் மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, மற்ற நால்வர் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து, உரிய அரசு முடி வெடுக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. 7 பேரையும் விடுவிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா அரசு, இதுகுறித்து மத்திய அரசு உடனடி பதில் தர வேண்டும் என்று சட்டச் சிக்கலுக்கு வழிவகுத்தார். உரிய அரசு என்பது மத்திய அரசா-மாநில அரசா என்ற சட்டப் போராட்டம் நடந்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு 7 பேர் விடுதலைக்காகத் தீர்மானத்தை நிறை வேற்றி ஆளுநரிடம் அனுப்பியது. ஆண்டுக்கணக்கில் ராஜ்பவனில் காத் திருந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவ ருக்குத்தான் இருக்கிறது என்றார் ஆளுநர். பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாளுடன் புகைப்படம் எடுத்து, 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆதாயத் துக்குப் பயன்படுத்திய ஜெயலலிதா, உண்மையான அக்கறையுடன் செயல் பட்டிருந்தால் இத்தனை சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது. தி.மு.க. வெளிப் படையான மனதுடன் செயல்படுகிறதா என்பது போகப்போகத் தெரியும்.

mavali

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

எம்.எல்.ஏ. பதவி ஏற்றுக்கொண்ட பிறகுதானே முதல்வர், அமைச்சர், பதவிகளை ஏற்க முடியும்?

முதல்வரும் அமைச்சர்களும் அரசு நிர்வாகத்தை நடத்தவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உடனடியாக அரசு நிர்வாகம் முடுக்கி விடப்படவேண்டும். அரசு நிர்வாகம் சார்ந்த சட்டங்கள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை சட்டமன்றத்தில் நிறைவேறுவதற்கு துணை நிற்க வேண்டியவர்களும்- திருத்தி அமைக்க வேண்டியவர்களும் எம்.எல்.ஏக்கள். அதனால், அமைச்சரவை பொறுப்பேற்புக்குப் பிறகு சட்டமன்றம் கூட்டப்பட்டு, எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

21 தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்பதற்கு அ.ம.மு.க.வும், மற்ற சில இடங்களில் தோற்க நா.த. கட்சியின் ஓட்டுப் பிரிவுகள் காரணமாகவும், தி.மு.க. 10 தொகுதிகளில் தோற்பதற்கு ம.நீ.ம. காரணமாகவும் இருந்திருக்கிறார்களே?

தாங்கள் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் கொண்ட கட்சிகளின் இலக்காக இருக்கும். தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை, இரண்டில் ஒரு கட்சியை இலக்காக வைத்துத் தோற்கடிக்க வேண்டும் என்கிற அரசியல், இருபக்கமும் கூர்மையான கத்தி. பெரிய கட்சிகள் காயத்துடன் தப்பித்துவிடும். கத்தியை எடுத்த கட்சி, உயிர் பிழைப்பது அரிதாகிவிடும்.

சந்திரமோகன், மார்த்தாண்டம்

சீமான் தந்தை இறந்ததற்கு தொலை பேசியில் ஸ்டாலின் ஆறுதல் கூறிய அரசியல் பண்பாடு பற்றி?

கலைஞரின் அம்மா இறந்த செய்தி கேட்டு, அவருக்கு முன்பாகவே அவரது வீட்டுக்கு வந்த பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜியின் மரணத்தின்போது மயானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த தந்தை பெரியார், காமராஜர் மறைந்தபோது இறுதிக் காரியங்களை முன்னின்று நடத்திய கலைஞர் என தமிழக அரசியல் பண்பாட்டிற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு. 1991ல் தொடங்கி 2016 வரை அது சிதைக்கப்பட்டது. அதன்பின், மீண்டும் உருவாகியுள்ளது. அதில் சீமானுக்கு முதல்வர் கூறிய ஆறுதலும் அடக்கம்.

பொன்.யாழினி, சிவகங்கை

டாக்டர் அல்லாத ஒருவரை தமிழக சுகாதாரத் துறைக்கு நியமித்திருப்பது சரியா?

பொதுப்பணித்துறைக்கு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிவில் இன்ஜினியரா? அண்ணா தொடங்கி அனைத்து முதல்வர்களும் காவல்துறைக்குப் பொறுப்பு வகித்தார்களே, அவர்களெல்லாரும் ஐ.பி.எஸ். படித்தவர்களா? படிக்காத மேதை காமராஜர் நல்ல நிர்வாகம் தந்தார் என்று பெருமை பேசுவது, டாக்டருக்குப் படிக்காதவர் மருத்துவம் சார்ந்த மக்கள் நலத்துறைக்கு அமைச்சராகலாமா எனக் குழப்புவது, இது தமிழ்நாட்டு டிசைன்.

எஸ்.வேலாயுதம், கொருக்குப்பேட்டை

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தி.மு.க. அரசின் செயல்பாடு எப்படி?

முன்கள வீரனாக நிற்கிறது. போர்க்களம் கடுமையானது.

nkn190521
இதையும் படியுங்கள்
Subscribe