மாவலி பதில்கள்!

mm

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ஊரடங்கு காலத்தில் மாவலியின் அறிவுரை என்ன?

யாருக்கும் அறிவுரை தேவையில்லை, விழிப்புணர்வே தேவை. அதை உணர்ந்து பொறுத்திருக்க வேண்டியவர்கள் மக்கள். விரைந்து செயல்படவேண்டியது அரசு.

mavali

பி.மணி, குப்பம் -ஆந்திரா

கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறனைப்போல. மு.க.ஸ்டாலினுக்கு மன சாட்சியாகத் திகழ்வாரா சபரீசன்?

கலைஞருக்கேயுரிய இலக்கியத் தமிழ் நடையில் முரசொலி மாறனை தனது மனசாட்சி என்றார். அவ ருடைய உவமை எல்லா ரையும் கவர்ந்தது. உண்மை யில், ஒருவருக்கு இன்னொருவர் மனசாட்சியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர் மனசாட்சி அற்றவராகிவிடுவார். கலைஞரின் மருமகனான முரசொலி மாறன் நேரடி அரசியலில் -பத்திரிகைத் துறையில் -திரைத்துறையில் பங்காற்றியவர். ஸ்டாலின் மருமகன் சபரீசன், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளா மல் செயலாற்றி, வெற்றிக்குத் துணை நின்றிருக்கிறார். அதேபாணியை அவர் கடைப்பிடிப்பது வசதியாக வும் பலமாகவும் இருக்கும். வெளியே தெரியாமல் செயல்படுவதே வேர்களின் இயல்பு. அதற்

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ஊரடங்கு காலத்தில் மாவலியின் அறிவுரை என்ன?

யாருக்கும் அறிவுரை தேவையில்லை, விழிப்புணர்வே தேவை. அதை உணர்ந்து பொறுத்திருக்க வேண்டியவர்கள் மக்கள். விரைந்து செயல்படவேண்டியது அரசு.

mavali

பி.மணி, குப்பம் -ஆந்திரா

கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறனைப்போல. மு.க.ஸ்டாலினுக்கு மன சாட்சியாகத் திகழ்வாரா சபரீசன்?

கலைஞருக்கேயுரிய இலக்கியத் தமிழ் நடையில் முரசொலி மாறனை தனது மனசாட்சி என்றார். அவ ருடைய உவமை எல்லா ரையும் கவர்ந்தது. உண்மை யில், ஒருவருக்கு இன்னொருவர் மனசாட்சியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர் மனசாட்சி அற்றவராகிவிடுவார். கலைஞரின் மருமகனான முரசொலி மாறன் நேரடி அரசியலில் -பத்திரிகைத் துறையில் -திரைத்துறையில் பங்காற்றியவர். ஸ்டாலின் மருமகன் சபரீசன், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளா மல் செயலாற்றி, வெற்றிக்குத் துணை நின்றிருக்கிறார். அதேபாணியை அவர் கடைப்பிடிப்பது வசதியாக வும் பலமாகவும் இருக்கும். வெளியே தெரியாமல் செயல்படுவதே வேர்களின் இயல்பு. அதற்கு மாறாக, முன்னிலைக்கு வந்தால் அது மரத்துக்கு நல்லதல்ல.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

வரலாறு காணாத வகையில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கிறாரே மாநில நிதி அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன்?

முந்தைய ஆட் சியாளர்களால் தமிழ்நாடு அரசின் கஜானா நிலவரம் என்ன என்பது எல்லா ருக்கும் தெரிந்தது தான். கடன்சுமை பெரும்சுமை என்றால், வாங்கிய கடனுக்கும் செய்யப்பட்ட செலவு களுக்கும் ஒத்துப் போகவில்லை என்றும் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்திருக் கிறார். பொதுவாக, முதல்வரோ அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரோ வகித்துவந்த நிதித் துறையை இளையவரான பழனிவேல் தியாகராஜனிடம் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். திறமைக்கு கிடைத்த இந்தப் பொறுப்பு, தமிழகத்தை மீட்டெடுக்கும் கடமையை ஆற்றட்டும்.

செ.பொன்னுசாமி, சிவகங்கை

புதிய சபாநாயகராக அப்பாவு தேர்வானது சரியா?

சட்டமன்றத்தில் நுழைய முடியாதபடி கடந்த தேர்தல் அவரைப் பாடாய்படுத்தியது. இப்போது அந்த சட்டமன்றத்தையே அவர் நடத்துகின்ற வாய்ப்பு அமைந்திருக்கிறது. காலம் தரும் பரிசாக அப்பாவுக்கு பேரவைத் தலைவர் பொறுப்பைத் தந்திருக்கிறது தி.மு.க. அரசு.

தன்சிகா எத்திராஜுலு, விருகம்பாக்கம்

புதிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்குவாரா?

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது ஈஷாவுக்கு மிகவும் பொருத்தமானது. 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் அதன்பிறகு இருமுறை அமைந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. தயவிலும் கொடிகட்டிப் பறக்கிறது ஈஷா. அதற்கு கடிவாளம் போடும் வலிமை புதிய அரசுக்கும் அதன் அறநிலையத்துறை அமைச்சருக்கும் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

சௌந்தர்ராஜன், கொடைக்கானல்

உதயநிதி அமைச்சரவையில் இடம் பெறாத மர்மம் என்ன?

ஒற்றை செங்கல்லால் கோட்டை கட்டியவர். அதை உருவிட வேண்டாம் என நினைத்திருக்கலாம்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராகவும் மாறிக்கொண்டார்களே?

தமிழில் எப்போதும் முதல் எழுத்து ஒரே சீராக வரும்போது அது மக்களின் மனதை ஈர்க்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் -எதிர்க்கட் சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பது அப்படித்தான் இருக்கிறது. கடந்த நான்காண்டு களாக இது தலைகீழாக இருந்தது. தமிழகமும் அப்படித்தான். இனியாவது நிமிரட்டும்.

நித்திலா, தேவதானப்பட்டி

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கௌரியம்மாள்?

,m

பொதுவுடைமைவாதிகள் தங்களுக்கென வாழ்வதில்லை. மக்களின் நலனுக்காகவே வாழ்பவர்கள். கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் பிறந்தவரான கௌரியம்மாள், திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் 1956ல் கேரளா உருவாகிறது. 1957 பொதுத்தேர்தலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட கௌரியம்மாள், உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சரானார். நிலச்சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் என அவர் மேற்கொண்ட முயற்சிகள் புரட்சிகரமானவை. அதே அமைச்சரவையில் அவரது காதல் கணவரான டி.வி.தாமஸூம் பங்கேற்றிருந் தார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டபோது, கௌரியம்மாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டிலும் அவரது கணவர் இந்திய கம்யூனிஸ்ட்டிலுமாகப் பிரிந்தனர். இந்தப் பிரிவு அவர்களின் வாழ்க்கையிலும் பிரிவானது. 1987ல் கௌரியம்மாளை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம்கண்டது மார்க்சிஸ்ட் கட்சி. எனினும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஈ.கே.நாயனார் முதல்வரானார். கௌரியம்மாளின் செல்வாக்கு குறைக்கப்பட்டு, 1994-ல் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். எனினும், அவர் கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். "ஜனாதிபத்திய சம்ரக் ஷன சமிதி' என்ற கட்சியைத் தொடங்கி தேர்தல் களத்தையும் எதிர்கொண்டார். எளிமையான வாழ்வுடன் பொது வாழ்க்கைப் பணியைத் தொடர்ந்தார். கேரள சட்டமன்றப் பொன்விழாவில் கௌரவிக்கப்பட்டார். தோழர்கள் அவரைத் தொடர்ந்து சந்தித்து வாழ்த்துப் பெற்றுவந்தனர். 102 வயதான கௌரியம்மாள் மே 11-ந் தேதி மறைந் தாலும், கேரள அரசியல் வரலாற்றில் நூற்றாண்டு களுக்கு அவர் பெயர் நிலைத்திருக்கும்.

nkn150521
இதையும் படியுங்கள்
Subscribe