பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர் -தேனி

"உங்களுடைய மதம் எது என்று யாரும் கேட்காத ஒரு இந்தியாவாக மாறவேண்டும் என்பது தான் என்னுடைய இலட்சியம்' என்று காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கூறியுள்ளது குறித்து?

priyanka

பிரியங்காவின் கொள்ளுத் தாத்தாவான இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, பகுத்தறிவுச் சிந்தனையாளர், மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். அவரிடம் கோவில்கள் பற்றிக் கேட்டபோது, தனது ஆட்சியில் வேளாண் வளர்ச்சிக்காக கட்டப்பட்ட பக்ராநங்கல், ஹிராகுட் போன்ற அணை களைக் குறிப்பிட்டு, "அவைதான் நான் வணங்கும் கோயில்கள்' என்றார். பிரியங்கா காந்தியிடம் பாட்டியின் முகச்சாயலும், கொள்ளுத்தாத்தாவின் மனப்பக்குவமும் வெளிப்படுகிறது.

புத்தொளி, மதுரை

வக்கீல்கள் போல டாக்டர்கள் அதிகம் அரசியலுக்கு வர விரும்பாதது ஏன்?

குற்றமும் சட்டமும் அர சியலில் பின் னிப் பிணைந் திருக்கின்றன. வக்கீல்கள் அதி கம் இருப்பது, கட்சிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். பொய் வழக்குகளை நொறுக்கலாம், சட்டத்தின் சந்து பொந்துகளைக் கண்டறிந்து... கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கலாம். இவையெல்லாம் அரசியல் சார்ந்த வக்கீல்களுக்கு வசதி. இப்போது டாக்டர்களும் தேர்தல் களம்வரை வந்துவிட்டார்கள். கட்சி அரசியலை ஆட்டிப் படைக்கும் நோய்கள் பற்றி அவர்களுக்கும் தெரிந்துவிட்டது போலும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை 6

உலகச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் "ஹீரோ ஸ்பார்டகஸ்' பற்றி?

வர்க்க அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியும் பொதுவுடைமை தத்துவத்தை அறிவியல்பூர்வமாக வழங்கியவர் கார்ல் மார்க்ஸ். அவர் உலக வரலாறுகளை ஊன்றிப் படித்தார். இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் உள்ளிட்டவற்றின் சாரத்தை உணர்ந்திருந்தார். எல்லாவற்றிலும் வர்க்கபேதமே முன்னிறுத்தப்படுவதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்த மார்க்சுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இருந்தது, ஸ்பார்டகஸ். ரோமப் பேரரசில் அடிமை முறை இருந்த காலத்தில், திரேஸ் நாட்டி லிருந்து பிடிபட்டு ரோமாபுரிக்கு கொண்டு வரப் பட்டவன்தான் ஸ்பார்டகஸ். அடிமைகள் அரண்மனை வேலைக்காரர்களாகவும் இருப்பார்கள். போர்ப்பயிற்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பயிற்சி பெற்ற அடிமைகளை ஒரு மைதானத்தில் மோதவிட்டு, அவர்கள் ரத்தம் கொட்ட கொட்ட மோதிச் சாவதை ஆட்சியாளர்கள் ரசித்துப் பார்த்து மகிழ்வது வழக்கம். ஸ்பார்டகஸும் பிற அடிமைகளுடன் மோதுவதற்காகக் களமிறக்கப்பட்டான். ஆனால், சக அடிமைகளைத் தாக்க அவன் விரும்பவில்லை. அவர்களை துணை சேர்த்துக்கொண்டு தப்பினான். உரிய பயிற்சி அளித்து, ரோமாபுரிக்கு எதிராகப் போர் தொடுத்தான். 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இந்தப் போர். ஸ்பார்டகஸ் சிம்ம சொப்பனமாக விளங்கினான். இறுதியில், ரோமாபுரியின் செல்வந்தர்கள் புதிய படையை உருவாக்கி, ஸ்பார்டகஸின் படையை வென்றனர். போர்க் களத்தில் மரணம் நெருங்கியபோதும் அஞ்சாமல் போராடியவன் ஸ்பார்டகஸ். அடிமை விலங்குகளை நொறுக்கும் துணிச்ச லான மனம் கொண்டவனே, மானுடத்தின் விடுதலைக்கு அடித்தளமிடுவான் என்பதால் கார்ல் மார்க்ஸ் மனதைக் கவர்ந்த கதாபாத்திரமானான் ஸ்பார்டகஸ்.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்டதால் மராட்டிய அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறி 24 கொரோனா நோயாளிகள் ப-யான சம்பவத்திற்கு யார் பொறுப்பு?

மராட்டியத்தில் மட்டுமல்ல, டெல்லி உள்பட பல இடங்களிலும் ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்ட தாலோ, ஆக்ஸிஜனே இல்லாமலோ பலர் உயிரிழந்துள்ளனர். இதில் அந்தந்த மாநில ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பு உண்டு. பேரிடர் காலத்தில் அதைவிட அதிக பொறுப்பு மத்திய ஆட்சியாளர்களுக்கே உரியது. அதிலும் "பி.எம். கேர்ஸ்' என்று பெரிய அளவில் நிதி திரட்டிவிட்டு, எது பற்றியும் டோன்ட் கேர் மாஸ்டராக இருப்பவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

Advertisment

m

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

Advertisment

அண்மையில் நெகிழ வைத்த நிகழ்வு?

அரசியல்வாதிகள் பொதுவான பிரச்சினைகளுக்காக தங்களை முன்னிறுத்த வேண்டும். தனிப்பட்ட பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக்கக் கூடாது. இதை பெரும்பாலோர் கடைப்பிடிப்பதில்லை. கொரோனா எனும் பொதுமக்களை பாதிக்கும் பெரும்பிரச்சினைக்காக மத்திய அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது மகன் ஆசிஷ், கொரோனாவால் உயிரிழந்த நிலையில்... அது பற்றி அரசு மீதோ, மருத்துவமனை நிர்வாகம் மீதோ குறை எதுவும் சொல்லாமல், தனது மகனுக்கு சிகிச்சையளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிகழ்வு, நெகிழ வைத்து விட்டது.