மாவலி பதில்கள்!

ra

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்

கொரோனா முதல் அலைக்கும் தற்போது பரவி வரும் இரண்டாவது அலைக்கும் என்ன வேறுபாடு?

"முதல் அலையைவிட இரண்டாவது அலை வேகமாக இருக்கிறது' என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். முதல் அலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பால், இரண்டாவது அலையின் உடல்நல பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் ஆங்காங்கே குவிந்துகொண்டி ருக்கிறார்கள் பொதுமக்கள்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

மேற்குவங்கத் தேர்தல் சமயத்தில், மாநில முதல்வரான மம்தாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்ததே?

மம்தாவை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பது பா.ஜ.க. எண்ணம். அதற்கு தோதாக தேர்தல் ஆணை யத்தின் தடை உத்தரவு. அவருக்கு மட்டும் தடையா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக, லோக்கல் பா.ஜ.க. நிர் வாகிக்கும் அதேபோல தடை விதித்து, தன்னை வெளிக் காட்டிக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.

எஸ்.கீர்த்திவர்மன், பாண்டிச்சேரி

தமிழ் வருடப் பெயர்கள் தூய தமிழில் இல்லையே?

அவை தமிழ் ஆண்டு களாக இருந்தால்த

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்

கொரோனா முதல் அலைக்கும் தற்போது பரவி வரும் இரண்டாவது அலைக்கும் என்ன வேறுபாடு?

"முதல் அலையைவிட இரண்டாவது அலை வேகமாக இருக்கிறது' என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். முதல் அலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பால், இரண்டாவது அலையின் உடல்நல பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் ஆங்காங்கே குவிந்துகொண்டி ருக்கிறார்கள் பொதுமக்கள்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

மேற்குவங்கத் தேர்தல் சமயத்தில், மாநில முதல்வரான மம்தாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்ததே?

மம்தாவை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பது பா.ஜ.க. எண்ணம். அதற்கு தோதாக தேர்தல் ஆணை யத்தின் தடை உத்தரவு. அவருக்கு மட்டும் தடையா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக, லோக்கல் பா.ஜ.க. நிர் வாகிக்கும் அதேபோல தடை விதித்து, தன்னை வெளிக் காட்டிக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.

எஸ்.கீர்த்திவர்மன், பாண்டிச்சேரி

தமிழ் வருடப் பெயர்கள் தூய தமிழில் இல்லையே?

அவை தமிழ் ஆண்டு களாக இருந்தால்தானே தமிழில் இருக்கும்? தமிழ்ப் புத்தாண்டு என்பதைவிட, தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்பவர்கள்தான் அதிகம். அந்த வருஷங்கள் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டவை. அதனைத் தமிழ் என எண்ணி ஏமாந்துகொண்டிருக்கிறோம்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

"லேடீஸ் & ஜென்டில்மேன்'..., "என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே...', "என் ரத்தத்தின் ரத்தங்களே', "என் இனிய தமிழ் மக்களே' -இந்தச் சொற்றொடரில் உங்களுக்குப் பிடித்தது எதுங்க?

எல்லாரும் "லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' என்ற சிகாகோ மாநாட்டில்... ‘"பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்'’ என்று அழைத்த சுவாமி விவேகானந்தரின் அழைப்பு, கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே, நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்‘ (ஒ க்ஷங்ப்ர்ய்ஞ் ற்ர் ற்ட்ங் உழ்ஹஸ்ண்க்ண்ஹய் நற்ர்ஸ்ரீந்) என்று அறிஞர் அண்ணா பேசியது இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ்நாட்டுக்கு வரும் வட இந்தியத் தலைவர்கள், "வணக்கம்...', "நன்றி' ஆகிய சொற்களுடன் திருக்குறளைக் குதறி, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என நினைக்கிறார்கள். "என் ரத்தத்தின் ரத்தங்களே' என்பது எம்.ஜி.ஆரின் வெற்றிக்கான மந்திரச் சொல். ‘"என் உயிரினும் மேலான உடன்பிறப்பு களே'’என்பது கலைஞரின் கம்பீரமான கரகர குரலில் ஒட்டுமொத்த கூட்டத்தைக் கட்டிப்போட்ட சொல் மட்டுமல்ல, ஆண் -பெண் -திருநங்கை என அனைத்துப் பாலினத்தவரையும் "உடன்பிறப்பே'’எனும் ஒற்றை வார்த்தையில் சுட்டிக்காட்டும் தமிழின் சிறப்பையும் எடுத்துக்காட்டிய சொல் ஆகும்.

வாசுதேவன், பெங்களூரு

முடிவு தெரிவதற்கு முன்பே தயார் நிலையில் இருப்பது?

விருப்பம், கனவு, பேராசை, தன்னம்பிக்கை என அவரவர் சாய்ஸைப் பொறுத்தது.

_________________

தேர்தல் களம்!

சி. கார்த்திகேயன், சாத்தூர்

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமான சம்பவம் போல முன்பு நிகழ்ந்துள்ளதா?

ra

வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இத்தகைய இடைவெளி ஏற்படும்போது எதிர்பாராத சோக நிகழ்வுகள் நடைபெற்று விடுகின்றன. வாக்குப்பதிவுக்கு முன்பாக வேட்பாளர் மரணமடைந்தால், தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படுவது வழக்கம். இயற்கையாக மரணம் அடைந்த வேட்பாளர்கள், தற்கொலை செய்துகொண்ட வேட்பாளர்கள், கொலை செய்யப்பட்ட வேட்பாளர்கள் என, பல காரணங்களால் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டது உண்டு. 1984-ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கு சேர்த்து தேர்தல் நடந்தபோது, ஒரு சுயேட்சை வேட்பாளர் மரணத்தால், வடசென்னை எம்.பி. தொகுதி, எழும்பூர்-பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், தள்ளிவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டபோது மூன்று தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு சில மாநிலங்களில், தேர்தலைத் தள்ளி வைக்கும் நோக்கத்திலேயே சுயேட்சை வேட்பாளரைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்குகள் ஏற்பட்டதால், பின்னர் இந்த தேர்தல் தள்ளிவைப்பு முறையில் மாற்றங்கள் பல கொண்டுவரப்பட்டன. மக்கள் ஓட்டுப்போட்ட பிறகு, வேட்பாளர் இறந்து, அந்த வேட்பாளரே வெற்றி பெற்ற அரிய நிகழ்வுகளில் ஒன்று, 1991 எம்.பி. தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ்காந்தியின் வெற்றி. அவரது தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில்தான், தமிழக தேர்தல் களத்திற்கான பிரச்சாரத்திற்கு வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். அனைத்துக்கட்டத் தேர்தலும் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, ராஜீவ் வெற்றி பெற்றார். அதனால் அவரது தொகுதியில் மறுதேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் கேப்டன் சதீஷ் சர்மா களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரியம்பிச்சை, பதவியேற்புக்கு முன்பே மரண மடைந்தார். அதுபோலவே, கடந்தமுறை திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அ.தி.மு.கவின் சீனிவேல் மரணமடைந்த நிலையில், ஜெய லலிதாவின் பதவியேற்பு வைபவம் வரை காத்திருந்து, அதன்பிறகே மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

nkn210421
இதையும் படியுங்கள்
Subscribe