Advertisment

மாவலி பதில்கள்!

dd

ஸ்ரீ.பூவராகவன், காங்கேயம்

ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க யாரும் தயாராக இல்லையே? எப்படி நேர்மையான ஆட்சியை தர முடியும்?

Advertisment

ஆட்சியாளர்கள் கைசுத்தமாக இருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் தங்களைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்போது ஓட்டுக்குப் பணம் என்ற எதிர்பார்ப்பிலிருந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள். அந்நாள் எந்நாளோ!

Advertisment

mm

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி மாவட்டம்

""ஜெயலலிதா இறந்ததற்கு கருணாநிதியும், ஸ்டாலினும்தான் காரணம்'' -என்று முதல்வர் பழனிசாமி கூறியது சரியா?

ஜெயலலிதாவைப் பெற்ற வர் சந்தியா. ஜெ.வின் விருப் பத்தை மீறி சினிமாவுக்கு கொண்டு வந்தவரும் சந்தியா தான். சினிமாவுக்கு வந்ததால் தான் ஜெ.வுக்கு எம்.ஜி.ஆர். அறிமுகமானார். அந்த அறி முகம்தான் எம்.ஜி.ஆரின் கட்சிக்கு ஜெ.வைக் கொண்டு வந்தது. அந்தக் கட்சிக்குத் தலைவராகி ஆட்சியைப் பிடித்தார். சொத்துக் குவித்தார். அதனால் தி.மு.க. ஆட்சியில் வழக்குப் போடப்பட்டது. அது குன்ஹா கோ

ஸ்ரீ.பூவராகவன், காங்கேயம்

ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க யாரும் தயாராக இல்லையே? எப்படி நேர்மையான ஆட்சியை தர முடியும்?

Advertisment

ஆட்சியாளர்கள் கைசுத்தமாக இருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் தங்களைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்போது ஓட்டுக்குப் பணம் என்ற எதிர்பார்ப்பிலிருந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள். அந்நாள் எந்நாளோ!

Advertisment

mm

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி மாவட்டம்

""ஜெயலலிதா இறந்ததற்கு கருணாநிதியும், ஸ்டாலினும்தான் காரணம்'' -என்று முதல்வர் பழனிசாமி கூறியது சரியா?

ஜெயலலிதாவைப் பெற்ற வர் சந்தியா. ஜெ.வின் விருப் பத்தை மீறி சினிமாவுக்கு கொண்டு வந்தவரும் சந்தியா தான். சினிமாவுக்கு வந்ததால் தான் ஜெ.வுக்கு எம்.ஜி.ஆர். அறிமுகமானார். அந்த அறி முகம்தான் எம்.ஜி.ஆரின் கட்சிக்கு ஜெ.வைக் கொண்டு வந்தது. அந்தக் கட்சிக்குத் தலைவராகி ஆட்சியைப் பிடித்தார். சொத்துக் குவித்தார். அதனால் தி.மு.க. ஆட்சியில் வழக்குப் போடப்பட்டது. அது குன்ஹா கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை உறுதியானது. ஜெ.வை சந்தியா பெற்றிருக்கா விட்டால் இத்தனையும் நிகழ்ந் திருக்குமா என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, ஜெ. மரணத்துக்கு கலைஞரும் ஸ்டாலினும் காரணம் என்று எடப்பாடி சொல்வது. இரும்புப் பெண் மணி என எதிர்க்கட்சிகளாலும் பாராட்டப்பட்டவரை இத்தனை பலவீனமானவர் என அம்பலப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கே.ஆர்.உபேந்திரன், என்.கே.ரோடு .தஞ்சாவூர்

"குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' - தமிழகத்தில் சாத்தியமா?

காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. புதிய பணியிடங்கள் உரு வாக்கப்படவில்லை. ஓய்வு பெறும்வயது 58 என்பது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரிடையர்டானவர்களுக்கான ஓய்வூதிய பலன்களும் கிடைக்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பதும், கேப்பையில் நெய் வடிகிறது என்பதும் ஒன்றுதான்.

ம.ராகவ்மணி, குப்பம் ஆந்திரா

"நாட்டின் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது தப்பில்லை' என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

இந்தளவு கடனில் இருப்பதால் நாடு எந்தளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் முதல்வர் வெளிப்படையாக சொல்வதில் தப்பில்லையே!

டாக்டர். எஸ். கணேஷ் குமார் சென்னை - 110

தி.மு.க.-அ.தி.மு.க. தவிர வேறு கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் ஊடகங்களின் பங்கு அதிகம் இருக்கிறதா... இல்லையா?

எம்.எஸ்.உதயமூர்த்தி, வைகோ, விஜயகாந்த், சீமான், கமல், சகாயம் என மாற்று சக்திகளாக பலரையும் முன்மொழிந்தவை ஊடகங்கள்தான். அரசியலுக்கு வரமாட்டேன் என்ற ரஜினியையும் கால்நூற்றாண்டு காலம் அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு மாற்றாக முன்னிறுத்தியதும் ஊடகங்கள்தான்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது கூறப்படும் சொத்து விவரங்கள் பின்னாளில் தவறானது என நிரூபிக்கப் பட்டால், சம்பந்தப்பட்டவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா?

முடியும். ஆனால், அதற்கான வழக்கு முடிவதற்குள் பல தேர்தல்கள் முடிந்து விடும்.

_______________

தேர்தல் களம்

சாரங்கன், கும்பகோணம்

டம்மி வேட்பாளர் என்பவர் யார்? அவர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதா?

அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனு ஏதேனும் குறைபாடுகள் காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் சார்பில் அங்கு போட்டியிட ஆள் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணைய விதிமுறைகள் படி மாற்று வேட்பாளர்களான டம்மி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்கிறார்கள். ஒரிஜினல் வேட்பாளர் என்பவர் கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவார். மாற்று வேட்பாளரை ஒரிஜினல் வேட்பாளரே தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது கட்சி சார்பிலும் பரிந்துரைக்கலாம். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அப்போதைய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின் மனைவி. வேட்புமனு பரிசீலனையின்போது, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதனால், மாற்று வேட்பாளர் மனு ஏற்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தவர் வேறுயாருமல்ல, தங்கபாலுவேதான். நேரடியாக, வேட்பாளராக களமிறங்கினால் கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் தங்களுக்கும் சீட் கேட்பார்கள் என்பதால் இப்படி ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். 1984 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூரில் அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார் அய்யாறு வாண்டையார். அப்போது காங்கிரசில் செல்வாக்காக இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர் மன்றத்தினருக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற அதிருப்தி வெளிப்பட்டது. சிவாஜிக்கு ஆதரவாக அய்யாறு வாண்டையார் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரானார் டம்மி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில், சிவாஜியை காங்கிரஸின் டெல்லி மேலிடம் சமாதானப்படுத்திவிட்டது. அவரும் காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். வேட்புமனுவை வாபஸ் பெற்ற அய்யாறுவாண்டையார், தனது கட்சியின் மாற்று வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் நிலை உருவானது. டம்மி வேட்பாளராக களமிறங்கிய கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆனார் என்பது தேர்தல் வரலாறு.

nkn240321
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe