மாவலி பதில்கள்!

mavali

லட்சுமிதாரா பவானி, வேலூர்

ஒரு தேர்தல் ஜோக்?

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்துப் பாருங்கள். மின் கட்டணம், கல்விக் கடன், சி.ஏ.ஏ. உள்பட பலவற்றிலும் தாங்கள்தான் இத்தனை காலமாக ஆட்சியில் இருக்கிறோம் என்ப தைக்கூட உணராமல் வாக்குறுதிகளாக பல ஜோக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

சுதந்திரத்திற்கு முன்பு தமிழகத்தை நீதிக்கட்சி 17 ஆண்டுகள் ஆட்சி செய்ததாமே, அப்போது தேர்தலில் போட்டியிட வேறு கட்சிகள் இல்லையா?

இந்தியாவின் பல மாகாணங்களிலும் தேர்தலை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. "காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கும்' என அறிவித்தார் காந்தி. அதனால், பல மாகாணங்களில் தேர்தல் நடைபெறவில்லை. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கொள்கைக்கு நேரெதிரான நீதிக்கட்சி தேர்தலை சந்தித்தது. ஆட்சியையும் பிடித்தது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இருந்த சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுயராஜ்ஜிய கட்சி, ஹோம்ர

லட்சுமிதாரா பவானி, வேலூர்

ஒரு தேர்தல் ஜோக்?

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்துப் பாருங்கள். மின் கட்டணம், கல்விக் கடன், சி.ஏ.ஏ. உள்பட பலவற்றிலும் தாங்கள்தான் இத்தனை காலமாக ஆட்சியில் இருக்கிறோம் என்ப தைக்கூட உணராமல் வாக்குறுதிகளாக பல ஜோக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

சுதந்திரத்திற்கு முன்பு தமிழகத்தை நீதிக்கட்சி 17 ஆண்டுகள் ஆட்சி செய்ததாமே, அப்போது தேர்தலில் போட்டியிட வேறு கட்சிகள் இல்லையா?

இந்தியாவின் பல மாகாணங்களிலும் தேர்தலை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. "காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கும்' என அறிவித்தார் காந்தி. அதனால், பல மாகாணங்களில் தேர்தல் நடைபெறவில்லை. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கொள்கைக்கு நேரெதிரான நீதிக்கட்சி தேர்தலை சந்தித்தது. ஆட்சியையும் பிடித்தது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இருந்த சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுயராஜ்ஜிய கட்சி, ஹோம்ரூல் இயக்கம் போன்ற பிற அமைப்புகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களாக சென்னை மாகாண சட்டமன்றத்தில் இடம்பெற்றனர். சீட்டுக்காக கட்சி மாறி களம் காண்பது திடீரென வந்ததல்ல.

அயன்புரம் த.சத்தியநாராயணன், செ.-72

நிரந்தர வாக்கு வங்கி உள்ள கட்சி தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

இரண்டு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவிலான வாக்குகள் உண்டு. அதைத் தாண்டி அதிக வாக்குகளை இரண்டில் எது பெறுகிறதோ அதுவே ஆட்சி அமைக்கும். அந்த வகையில் தி.மு.க. -அ.தி.மு.க.விடம் இருப்பது வாக்கு வங்கி. அதில் 5 ஆண்டுகளுக்கொரு முறை ஓட்டுகளை டெபாசிட் செய்யும் வாக்காளர்கள்தான் நிரந்தர செல்வாக்கு உள்ளவர்கள்.

கே.சுந்தரம், வத்திராயிருப்பு

ராதாபுரம் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மறுவாக்கு எண்ணிக்கை நடந்ததே? முடிவு எப்போது வெளியாகும்?

2016 தேர்தல் முடிவுகளே இன்னும் உறுதியாக்கப்படாத நிலையில், 2021 தேர்தல் வந்துவிட்டது. மறுவாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வெற்றிச் சான்றிதழ் பெற்றவர் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவிட்டார். அவரே அதே கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரோடு மல்லுக்கட்டி, தீர்ப்பு கிடைக்காமல் போனவரே மீண்டும் எதிர்த்து நிற் கிறார். ஜனநாயகம் என்ற வார்த்தை யைக் கேட்டால் வாக்காளர்கள் சிரிக்கிறார்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

சசிகலா ஒதுங்கிய நிலையில், அவரது தம்பி திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் தனித்துப் போட்டியிடுவது எதற்காக?

நீங்கள் இப்படிக் கேள்வி கேட்டு, அது நக்கீரனில் வெளியாகிறதே! இது போன்ற விளம்பரங்களுக்காகத் தான்.

____________

தேர்தல் களம்

mavalianswers

பா.சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை

வேட்புமனு தாக்கலின் போது தலைவர்கள் -நடிகர்கள் -பிரபலங்கள் காட்டும் சொத்து மதிப்பைப் பார்க்கும்போது தேர்தலில் நிற்கும் எல்லாருமே காமராஜர் -கக்கன்தானோ என நினைக்கத் தோன்றுகிறதே?

மு.க.ஸ்டாலினின் அசையா சொத்துகளின் மதிப்பு 2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 ரூபாய். அதாவது, சென்னையில் பெரிய அப்பார்ட்மெண்ட்டில் ஒரு ஃப்ளாட் விலைக்கான மதிப்பு. ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதி. அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி சினிமா தயாரிப்பாளர் -நடிகர் என்பதால் அவரது அசையா சொத்து மதிப்பு 6 கோடிக்கு மேல். அசையும் சொத்து மதிப்பு 21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650. உலக நாயகனாகப் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு 177 கோடிக்கு சொத்து இருக்கிறது. 50 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு இல்லை. மனையோ, விளைநிலமோ இல்லை என வேட்புமனுவில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. விவசாயி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்பவருக்கு நிலம் இல்லையா எனக் கேட்கக்கூடாது. அவரது குடும்பச் சொத்தாக 22 ஏக்கர் நிலமும் 2 ஆயிரத்து 700 சதுர அடியில் வீடும் உள்ளது. பாகப்பிரிவினை செய்யாததால், அது எடப்பாடி பழனிசாமியின் பெயரில் வராது. அதே நேரத்தில், அவரது மனைவி பெயரிலான சொத்துகள் கணக்கு காட்டப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலில் தனது சொத்து, மனைவி சொத்து, குடும்ப சொத்து ஆகியவற்றைக் குறிப்பிடுவது வழக்கம். தங்கள் பெயரில் சொத்து சேர்க்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் விவரமறியாதவர்கள் அல்ல. வேட்புமனு மூலம் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்படும் சொத்து விவரத்தைவிட, வருமானவரித்துறை -அமலாக்கத்துறையினர் கண்டுபிடிக்கும் சொத்துகள் பல மடங்கு அதிகமாகும். முன்பு கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு கார் இல்லை என வேட்புமனு விவரம் வெளியானது. அவர்கள் கட்டைவண்டியிலா பிரச்சாரம் செய்தார்கள்? கட்சிப் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ கார் பதிவாகியிருக்கும். ஜெயலலிதா தன்னுடைய தொழில் ‘விவசாயம்’ என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சீமானும் விவசாயி என்கிறார். முதல்வர்களும் முதல்வர் வேட்பாளர்களும் விவசாயிகளாக இருப்பது சிறப்புதான். ஆனால், உண்மையான விவசாயிகள் எப்போதும் வாக்காளர்களாகவே இருக்கிறார்கள்.

nkn200321
இதையும் படியுங்கள்
Subscribe