வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அர்ஜூன மூர்த்தி "இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' தொடங்கியுள்ளாரே?
தனது முன்னேற்றத்திற் கான வியூகத்தை இந்திய மக்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் பெரிய மனது அவருக்கு இருக்கிறது.
எஸ்.மோகன் கோவில்பட்டி
வட்டிக்கு வட்டி வசூலிப்பதை வங்கிகள் கை விட்டுவிட்டதா?
"விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்த அரசாங்கம், அதே விவசாயிகள் -ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக வீட்டுவசதி கடன் சங்கங்களில் வாங்கிய கடனுக்கு வட்டி, அபராத வட்டி, தவணை தவறிய வட்டி, கட்டாத வட்டியை அசலுடன் சேர்த்து வட்டி எனக் கசச்கிப் பிழிகிறதே, அதையும் முதல்வர் தள்ளுபடி செய்வாரா' எனக் கேட்டிருக்கிறார் சென்னை அம்பத்தூர் எஸ்.சங்கர். கூட்டுறவு சங்கங்களிலேயே இந்த நிலை என்றால், வங்கி களில்?
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
"தமிழகத்தில் சினிமா நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எழுத்தாளர்களுக்கு அளிப்பதில்லை' என்று நாஞ்சில் நாடன் வேதனை தெரிவித் திருக்கிறாரே?
சினிமா அளவுக்கு புத
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அர்ஜூன மூர்த்தி "இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' தொடங்கியுள்ளாரே?
தனது முன்னேற்றத்திற் கான வியூகத்தை இந்திய மக்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் பெரிய மனது அவருக்கு இருக்கிறது.
எஸ்.மோகன் கோவில்பட்டி
வட்டிக்கு வட்டி வசூலிப்பதை வங்கிகள் கை விட்டுவிட்டதா?
"விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்த அரசாங்கம், அதே விவசாயிகள் -ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக வீட்டுவசதி கடன் சங்கங்களில் வாங்கிய கடனுக்கு வட்டி, அபராத வட்டி, தவணை தவறிய வட்டி, கட்டாத வட்டியை அசலுடன் சேர்த்து வட்டி எனக் கசச்கிப் பிழிகிறதே, அதையும் முதல்வர் தள்ளுபடி செய்வாரா' எனக் கேட்டிருக்கிறார் சென்னை அம்பத்தூர் எஸ்.சங்கர். கூட்டுறவு சங்கங்களிலேயே இந்த நிலை என்றால், வங்கி களில்?
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
"தமிழகத்தில் சினிமா நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எழுத்தாளர்களுக்கு அளிப்பதில்லை' என்று நாஞ்சில் நாடன் வேதனை தெரிவித் திருக்கிறாரே?
சினிமா அளவுக்கு புத்தகங்களும் மக்களிடம் சென்று சேரும் காலம் அமையும் போது எழுத்தாளர்களின் மதிப்பு உணரப் பட்டு முக்கியத்துவம் கிடைக்கும். விடுமுறை நாட்களில் மட்டும் மக்கள் கூட்டம் அலைமோதும் புத்தகக் காட்சிகள், எல்லா நாட்களும் நிரம்பி வழியும் காலம் உருவாக வேண்டும்.
த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்
கட்சிக் கட்டமைப்பை நம்பாமல் தேர்தல் வியூக வகுப்பாளர்களை தி.மு.க.வும் அ.தி.மு.கவும் நம்பிக்கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?
காலம் ரொம்ப வேகமாக மாறிவிட்டது என்பதைக் காட்டு கிறது. "சிங்கிள் டீ குடித்துவிட்டு விடிய விடிய வேலை பார்க்கிறவர்கள் தி.மு.க. வினர்' என எதிர்க்கட்சியினர் பாராட்டிய காலம் போய், "பூத் காசு ஒழுங்கா வரலை' என்று புலம்பும் உடன்பிறப்புகளின் காலம் இது. எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்ய வருகிறார் என விடிய விடிய காத்திருந்தும் அவர் வராமல், அடுத்தநாள் இரவு வரும்வரை கூட்டம் கலையாத அ.தி.மு.க.வின் காலம் போய், எடப்பாடி மீட்டிங்காக இருந்தாலும் ஆ-2 சசியை வரவேற்கும் கூட்டமாக இருந்தாலும், காசு கொடுத்து ஆள் சேர்க்கும் காலம் இது. கொடுக்கிற காசு வீணாகாமல் ஓட்டுகளாக மாற்றுவது எப்படி என்பதற்காக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து, தேர்தல் வியூக வகுப்பாளர்களை நியமிக்கின்றன கழகங்கள்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
மு.க.ஸ்டாலினின் நாற்காலி கனவு உறுதி செய்யப்பட்டுவிட்டதா?
கனவு காண்பது தலைவர்களின் இயல்பு. உறுதி செய்வது வாக்காளர்களின் மனது. மனதுக்கு நெருக்கமாகிவிட்டால் கனவு நனவாகும்.
___________
தேர்தல் களம்
அயன்புரம் த.சத்தியநாராயணன்.
தேர்தலில் தோற்ற செல்வாக்குள்ள தலைவர்கள் யார்? யார்?
தேர்தல் களம் எத்தனையோ ஜாம்பவான்களை சறுக்கிவிழ வைத்திருக்கிறது. எமர்ஜென்சிக்குப் பிறகு 1977-ல் நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய்காந்தியும் தோற்கடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 1996 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை சுகவனம் என்ற அறிமுகமில்லாத வேட்பாளர் தோற்கடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. அறிஞர் அண்ணா, வாஜ்பாய், வைகோ, என்.டி.ராமராவ், விஜயகாந்த் எனப் பெயரும் செல்வாக்கும் உள்ள பல தலைவர்கள் வெற்றியைப் போலவே தோல்வியையும் எதிர்கொண்டவர்கள்தான். எனினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டதுதான் இன்றளவும் அதிர்ச்சி கலந்த வேதனையுடன் விவாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார் காமராஜர். மத்தியில் ஆட்சி செய்த பிரதமர் நேரு தலைமையிலான அரசிடம், வட மாநிலங்கள் அளவுக்கு தென் மாநிலங்களில் வளர்ச்சி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முன்வைத்து பிரச்சாரம் செய்வதை எடுத்துரைத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்கினார். எனினும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சூழல்களால், மூத்த தலைவர்கள் பதவி விலகி, அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்கிற ‘கே ப்ளான்’ காமராஜரால் முன்மொழியப்பட்டது. (கே ப்ளான்=காமராஜர் ப்ளான்). அதற்கு எடுத்துக்காட்டாக, அவரும் தன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார். நேரு மறைவுக்குப் பின் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி அரசு, இந்தி மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதில் தீவிரம் காட்டியது. தமிழகத்தில் மொழிப்போர் தொடங்கியது. பக்தவத்சலம் அரசின் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டது. இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய்மொழி காப்பதற்காக தீக்குளித்து உயிர் விட்டனர் தீரமிக்க இளைஞர்கள். இது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், அரிசி விலை உயர்வு, உணவுப் பஞ்சம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளும் மக்களை வதைத்தன. ஒட்டுமொத்த காங்கிரசுக்கு எதிராகவும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களித்தனர். அந்தப் பேரலையில் பெருந்தலைவர் காமராஜரும் தோற்றுப் போனார். அது, அவர் மீதான தனிப்பட்ட கோபத்தினாலோ வெறுப்பினாலோ ஏற்பட்ட தோல்வியல்ல. அதனால்தான், 1968-ல் நடந்த நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜரை மகத்தான வெற்றி பெறச்செய்து டெல்லிக்கு அனுப்பியது தமிழகம்.