லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
பெண்களிடம் சின்னம்மாமீது ஓர் அனுதாப அலை வந்துவிட்டதே?
எந்த சின்னம்மா? ஓ... சசிகலாவா! எந்தப் பெண்கள்? இளவரசி, அனுராதா, கிருஷ்ணப்ரியா போன்ற உறவுப் பெண்களிடமா?
அ.யாழினி பர்வதம், சென்னை-78
மியான்மரில் அரசுக்கு எதிராகப் போராடினால் 20 ஆண்டுகள் சிறை என்ற ராணுவ அறிவிப்பு பற்றி?
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் மியான்மரில்கூட அறிவித்துவிட்டு சிறைப்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் ஆட்சியில், ட்விட்டரில் பதிவிட்டாலேகூட ‘அர்பன் நக்சல், ‘ஆன்ட்டி இன்டியன்’ என்று முத்திரை குத்தி சிறைப்படுத்தி விடுகிறார்கள். வரவராவ் தொடங்கி திஷாரவி வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிலருக்கு ஆண்டுக்கணக்கில் ஜாமீன் கிடைக்காத அவலமும் தொடர்கிறது.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
கிரண்பேடி-தமிழிசை என்ன வித்தியாசம்?
பா.ஜ.க.வின் இலக்குக்கான ரன்களை கொஞ்சம் கொஞ்சமாக சே
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
பெண்களிடம் சின்னம்மாமீது ஓர் அனுதாப அலை வந்துவிட்டதே?
எந்த சின்னம்மா? ஓ... சசிகலாவா! எந்தப் பெண்கள்? இளவரசி, அனுராதா, கிருஷ்ணப்ரியா போன்ற உறவுப் பெண்களிடமா?
அ.யாழினி பர்வதம், சென்னை-78
மியான்மரில் அரசுக்கு எதிராகப் போராடினால் 20 ஆண்டுகள் சிறை என்ற ராணுவ அறிவிப்பு பற்றி?
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் மியான்மரில்கூட அறிவித்துவிட்டு சிறைப்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் ஆட்சியில், ட்விட்டரில் பதிவிட்டாலேகூட ‘அர்பன் நக்சல், ‘ஆன்ட்டி இன்டியன்’ என்று முத்திரை குத்தி சிறைப்படுத்தி விடுகிறார்கள். வரவராவ் தொடங்கி திஷாரவி வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிலருக்கு ஆண்டுக்கணக்கில் ஜாமீன் கிடைக்காத அவலமும் தொடர்கிறது.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
கிரண்பேடி-தமிழிசை என்ன வித்தியாசம்?
பா.ஜ.க.வின் இலக்குக்கான ரன்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தார் கிரண்பேடி. வின்னிங் ஷாட் அடித்தார் தமிழிசை.
த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்
அரசியல் ராஜதந்திரம் என்றார் யார் பெயர் நினைவுக்கு வரும்?
ராஜதந்திரம், சாணக்கியத்தனம் போன்றவை மன்னராட்சி காலத்து வார்த்தைகள். அதை அப்படியே ஜனநாயக அரசியலிலும் பயன்படுத்துகிறோம். தன் வலிமையைவிட எதிரியின் பலம் அதிகமாக இருப்பதை நன்றாக அறிந்தும், அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து, வெற்றி பெறுவதே ராஜதந்திரம் எனப்படுகிறது. அந்த வகையில், தேர்தல் அரசியலுக்காக மட்டும் ராஜதந்திரம் வகுத்த தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், கொள்கை அரசியலை முன்னிறுத்தி, அதனை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை யிலும் முழங்கி, அதற்காகப் பிரி வினை தடைச் சட்டத்தை எதிர் கொண்டு, அத னால் தனிநாடு கோரிக்கையைக் கைவிடு வது எனக் களத்தில் ஓரடி பின்வாங்கி, மொழி-இன-மாநில உரிமை சார்ந்தவற்றை முன்னெடுத்து-மக்களின் பேராதவுரடன் தேர்தல் களத்தில் வெற்றி பெற்று-இந்தியா வில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியை அரியணை ஏற்றி- தனது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி- அதற்கு இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலையும் பெற்ற அறிஞர் அண்ணாதான் ஜனநாயக அரசியலில் ராஜதந்திரி.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பா.ஜ.கவில் சேரக் காரணம் என்ன?
திரையில் தன் அப்பா வெளிப்படுத்திய அத்தனை நடிப்பு நுணுக்கங்களையும், அரசியலில் பலவித கெட்டப்புகளுடன் வெளிப்படுத்தும் மோடி மீதான ஈர்ப்பாக இருக்கலாம்.
____________
தேர்தல் களம்
நித்திலா, தேவதானப்பட்டி
ஏப்ரல் 6 வாக்குப்பதிவு- மே 2 வாக்கு எண்ணிக்கை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்பதே வேகமாக செயல்படத்தானே, பிறகெதற்கு ஏறத்தாழ ஒரு மாத இடைவெளி?
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. கேரளா, புதுச்சேரியிலும் அதுபோலத்தான் ஒரே கட்ட தேர்தல். தமிழகத்தைவிட 60 தொகுதிகள் அதிகமுள்ள மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைவிட ஏறத்தாழ பாதியளவு தொகுதிகளே கொண்ட அசாமில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அந்த மாநிலங்களின் அரசியல் தட்பவெப்பம் அப்படி. வாக்குப்பதிவு நாட்களில் வன்முறை நிகழலாம் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக தனித்தனி கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. 5 மாநில சட்டமன்றங்களுக்கு தனித்தனிக் கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தாலும், வாக்கு எண்ணிக்கையை ஒரே நாளில் நடத்துவது என்பதை நெடுங்காலமாக தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. இல்லையென்றால், முன்கூட்டி வாக்குப்பதிவு நடந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், அடுத்த கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் அனைத்துக் கட்ட வாக்குப்பதிவும் முடிந்தபிறகு, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழக வாக்காளர்களும் அரசியல் தலைவர்களும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. 1996ல் ஏறத்தாழ 15 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2011ல் கிட்டதட்ட இதே போல ஒரு மாதம் கழித்துதான் தேர்தல் முடிவுகள் வெளியாயின. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் இத்தகைய கால இடைவெளியைக் குறைக்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவின்போதோ, அதற்கு முந்தைய கட்ட வாக்குப்பதிவின்போதோ, ஒரு கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குப்பதிவை நடத்தினால், காத்திருப்பு காலம் குறைந்துவிடும். ஒரு கட்ட தேர்தலை ஆணையத்திடம் வலியுறுத்திய அரசியல்கட்சிகள், இந்தக் கால இடைவெளி பற்றியும் வலியுறுத்தியாக வேண்டும். அத்துடன், மின்னணு வாக்குப் பதிவு மீதான பொதுமக்களின் சந்தேகத்தைப் போக்கி, நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.