லட்சுமிகாந்தம், வேலூர்(நாமக்கல்)
350 கி.மீ. பயண தூரம், 23 மணி நேரப் பயணம் என சசிகலா படைத்த சாதனை பற்றி?
ஏற்கனவே எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோதும், ஜானகி அம்மையார் அ.தி.மு.க.வின் ஓர் அணிக்குத் தலைமை தாங்கியபோதும் சென்னை டூ மதுரை இத்தகைய பய ணங்கள் மேற்கொள் ளப்பட்டிருக்கின் றன. ம.தி.மு.கவைத் தொடங்கிய வைகோ, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடந்தே வந்தார். அவை யெல்லாம் தங்கள் செல்வாக்கை காட்டு வதற்கான பயணம். பெங்களூருவிலிருந்து சென்னை வரையிலான சசிகலாவின் பயணம், ஊழலுக்கான தண்டனையை தியாகமாக மாற்றும் அரசியல் தந்திரத்திற்கானது.
அ.யாழினி பர்வதம், சென்னை-78
கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு சூட்டப் பட்டிருக்கும் பாஷ்யம் என்பது யார் பெயர்?
மக்கள் யாருக்கும் தெரியாத பெயர். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான கட்டுமானக்காரர் ஒருவரின் பெயர் என்று சர்ச்சை உருவாகியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்கு "அறிஞர் அண்ணா மெட்ரோ' எனப் பெயர் சூட்டப் பட்டது. கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தின் மெட்ரோ ஸ்
லட்சுமிகாந்தம், வேலூர்(நாமக்கல்)
350 கி.மீ. பயண தூரம், 23 மணி நேரப் பயணம் என சசிகலா படைத்த சாதனை பற்றி?
ஏற்கனவே எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோதும், ஜானகி அம்மையார் அ.தி.மு.க.வின் ஓர் அணிக்குத் தலைமை தாங்கியபோதும் சென்னை டூ மதுரை இத்தகைய பய ணங்கள் மேற்கொள் ளப்பட்டிருக்கின் றன. ம.தி.மு.கவைத் தொடங்கிய வைகோ, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடந்தே வந்தார். அவை யெல்லாம் தங்கள் செல்வாக்கை காட்டு வதற்கான பயணம். பெங்களூருவிலிருந்து சென்னை வரையிலான சசிகலாவின் பயணம், ஊழலுக்கான தண்டனையை தியாகமாக மாற்றும் அரசியல் தந்திரத்திற்கானது.
அ.யாழினி பர்வதம், சென்னை-78
கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு சூட்டப் பட்டிருக்கும் பாஷ்யம் என்பது யார் பெயர்?
மக்கள் யாருக்கும் தெரியாத பெயர். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான கட்டுமானக்காரர் ஒருவரின் பெயர் என்று சர்ச்சை உருவாகியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்கு "அறிஞர் அண்ணா மெட்ரோ' எனப் பெயர் சூட்டப் பட்டது. கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தின் மெட்ரோ ஸ்டேஷனுக்கு "டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா மெட்ரோ' எனப் பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணாவும் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால், அவர் பெயரில் அதை விட்டுவிட்டார்கள். "சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் சரிப் படாது-மோனோ ரயிலைக் கொண்டு வருவேன்' என்ற ஜெயலலிதா பெயரை வெட்கமின்றி வைத்திருக்கிறார்கள். சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கு "புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மெட்ரோ' என்று சூட்டியிருக்கிறார்கள். சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரக் காரணமாக இருந்தவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி. அவரது பெயர் வரலாற்றில் பொறிக் கப்பட்டிருக்கிறது.
ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை
விஜய் நடித்த "மாஸ்டர்' படம் தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்திருக்கிறதே?
3 தீபாவளி கண்ட தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸ்', ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய "கரகாட்டக்காரன்', 25 வாரங்கள், 100 நாட்கள் கடந்த பல படங்கள் எனத் திரையுலகம் கொண்டாட்டமாக இருந்த காலம் உண்டு. அதன்பிறகு, இரண்டாவது வாரம் போஸ்டர் ஒட்டுவதே வெற்றியானது. தற்போது, வெற்றிகரமான 2-வது நாள் என விளம்பரம் கொடுக்கிற நிலைமை உருவாகியுள்ளது. எத்தனை நாட்கள் ஓடியது என்பதைவிட எந்தளவு லாபம் கொடுத்துள்ளது என்பதே இன்றைய திரை வணிகம். அத்தகைய சூழலில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு ரிலீசான "மாஸ்டர்', மீண்டும் ரசிகர்களைத் தியேட்டரை நோக்கி ஈர்த்ததும் பெரு நகரங்களில் 50 நாட்களைக் கடந்ததும் சாதனைதான்.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
அரசியலிலும் பாகப் பிரிவினை உண்டா?
எல்லாக் காலத்திலும் உண்டு. லேட்டஸ்ட், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தெலங்கானா மாநிலத்தில் தனக்கான அரசியல் பட்டா போட விரும்புவது.
_____________
தேர்தல்களம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
தலைமைத் தேர்தல் ஆணையர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலான தன்னாட்சி மிக்க அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் தலைமைத் தேர்தல் ஆணையர். இந்தியாவின் நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்கள் (ராஜ்யசபா, சட்ட மேலவை உள்பட) அனைத்தையும் நடத்துகின்ற பொறுப்பும் அதிகாரமும் மிக்கவர். இந்திய குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) தகுதி பெற்றவர்களே இப்பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். மத்திய-மாநில அரசுகளின் தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த அதிகாரிகளை இப்பதவிக்கு பரிந்துரைப்பது வழக்கமாக இருக்கிறது. பணி அனுபவம்-திறமை-தனித்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்குரியவர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்றாலும் அரசியல் அதிகாரம்- ஆட்சியாளர்களின் பார்வை ஆகியவையும் இந்தத் தேர்வில் இருப்பதே நடைமுறை யதார்த்தமாகும். பரிந்துரைக்கப்படுபவரை நியமிப்பவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர். இத்தகைய பொறுப்புமிக்க பதவியில் நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அல்லது நியமிக்கப்படுபவரின் வயது 65ஆகும் வரை பதவியில் இருக்கலாம். இதில் எது முன்கூட்டி நிறைவடைகிறதோ அதுவே, தலைமைத் தேர்தல் ஆணையரின் பணி நிறைவுக் காலமாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட வசதிகள், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்படும். தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் "இம்பீச்மெண்ட்' (பணி நீக்க தீர்மானம்) கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் தனது பணிக்காலத்தில், தேர்தல் நடைமுறைகளில் கடுமை காட்டியதால், அதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆணையர்களை நியமிக்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அடுத்தநிலையில் உள்ள இரண்டு ஆணையர்களும் கூடி ஆலோசித்து, பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தனிப்பட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தாலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவே. மத்திய-மாநில அரசுகளையும் காவல்துறையை யும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதனால் நியமனம் -செயல் பாடு -நடவடிக்கை என எல்லாவற்றிலும் பாரபட்சமான அணுகுமுறைகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை