கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் திறக்கிறார்களே?

பல்கலையில், காலில் விழும் கலைக்கே முதலிடமாக இருக்குமோ!

mavalianswers

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சசிகலாவும் தினகரனும் தி.மு.கவின் "பி' டீம்' என்கிறாரே ஜெயக்குமார்?

பழனிசாமி அரசை அ.ம.மு.க. எதிர்த்தால் அது தி.மு.க.வுக்கே சாதகமாகும் என்ற கோணத்தில் சொல்கிறார். அதன்படி பார்த்தால், ஜானகி அம்மையார் ஆட்சியைக் கவிழ்த்து, அ.தி.மு.க.வை உடைத்து, வாக்குகளை சிதறடித்து, 1989-ல் தி.மு.க. ஆட்சி அமைக்கத் துணை யாக இருந்த ஜெயலலிதாதான் தி.மு.க.வின் "முதல் பி டீம் கேப்டன்' என்கிறாரோ அமைச்சர் ஜெயக்குமார். பாவம், மெயின்ரோட்டில் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டவர் போல இருக்கிறது அவரது நிலை.

Advertisment

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்

ஜெ. சமாதி மூடல், கட்சி அலுவலகத்துக்கு காவல், சசிகலா மீது அமைச்சர்கள் புகார்- என்னாச்சு அ.தி.மு.க.வுக்கு?

பாம்பின் கால் பாம்பறியும். தோட்டத்தில் பெரியம்மாவைவிட, சின்னம்மா கட்டளைக்கே அதிகம் கீழ்ப்படிந்த எடப்பாடி பழனிசாமி யும் அறிவார். அந்த பயம்தான்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

ஊழல் வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை பெற்றவர், ரிலீசாகி வருவதற்கு நேரலை போன்ற அலப்பறைகள் அவசியமா?

அடாவடி, மோசடி, அத்து மீறல், வன்முறை, ஊழல் இவற்றுக்குப் புரட்சிப் பட்டம் தந்தோம்... மாவீரன் என்றோம். அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்தோம். அதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் தியாகத் தலைமையாகிறார்கள்.

பி.மணி, குப்பம், ஆந்திரா

"ஊழலில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மக்கள் உதவியுடன் மீட்பேன்' என்கிறாரே மு.க.ஸ்டாலின்?

ஊழலில் மட்டுமல்ல, உரிமைகளை இழப்பதிலும் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, முதலீடு, கல்வி உள்பட பலவற்றிலும் நிலைமை சீர்கெட்டுள்ளது. இதனை மாற்றவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான வாய்ப்பு, தி.மு.க.வுக்கு கிடைக் கும் சூழல் உள்ளது. ஒவ்வொரு தொகுதியாக நேரில்சென்று மக்களிடம் மனுக்கள் வாங்கும் தி.மு.க. தலைவர், அவற்றைத்தான் முன்னிறுத்தவேண்டும். அமைச்சர்கள் எல்லாரும் ஜெயிலுக்குப் போவார்கள் என்பதையே அதிகமாகப் பேசினால், ஆளுந்தரப்பு உஷாராகும். அதிகாரிகளும்கூட அவர்களுக்கே ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆட்சியும் அதிகாரமும் தேர்தல் களத்தில் எதையும் சாதிக்கும் என்பதை கடந்தமுறை வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந் தவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர், திருச்சி

விரோதம்-குரோதம் என்ன வேறுபாடு?

ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இருப்பது விரோதம். சசிகலாவுக்கும் பழனிசாமிக்கும் இருப்பது குரோதம்.

________

தேர்தல் களம்

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

அறிஞர் அண்ணா எத்தனை முறை தேர்தல் களம் கண்டிருக்கிறார்?

நீதிக்கட்சி காலத்தில் 1930-களில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு முதன்முதலில் போட்டியிட்டார் அண்ணா. அப்போது அவர் சாதாரண சி.என்.அண்ணாதுரைதான். முதன்முதலாகக் களம்கண்ட அந்த தேர்தலில் அண்ணாவுக்குத் தோல்விதான் கிடைத்தது. அதன்பிறகு, பெரியாரை சந்தித்த அண்ணா, தேர்தல் அரசியலில் பங்கேற்காத சமூக சீர்திருத்த இயக்கமான சுயமரியாதை இயக்கம் -திராவிடர் கழகம் எனப் பயணித்தார். 1949-ல் பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கிய பிறகு நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1952) தேர்தல் களத்தை சந்திக்கவில்லை. 1957 பொதுத்தேர்தலில்தான் முதன்முதலில் தேர்தல் களத்தை தி.மு.க சந்தித்தது. அதில் வெற்றிபெற்ற 15 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அறிஞர் அண்ணாவும் ஒருவர். சட்டமன்ற தி.மு.க. தலைவராக அவர் பேரவைக்குள் நுழைந்தார். 1962 தேர்தலில் தி.மு.க. சார்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றபோதும், அதே காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா தோற்கடிக்கப்பட்டார். எனினும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலத்தால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் அவரது முதல் பேச்சு, இந்தியாவின் பிற எம்.பி.க்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘I belong to the Dravidian Stock’ (நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்) எனத் தொடங்கி அண்ணா பேசிய உரை, இந்தியாவின் தென் மாநிலங்களின் உரிமைக் குரலாக அமைந்தது. அதன்பின், 1967-ல் நடந்த பொதுத் தேர்தலின்போது, அண்ணா வின் கழகத் தம்பிகள் பலரும் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டபோது, அவர் நாடாளுமன்றத் தொகுதியான தென் சென்னையில் போட்டியிட்டார். நாடாளுமன் றத்திற்கும் சட்டமன் றத்திற்கும் சேர்ந்து நடைபெற்ற அந்த பொதுத்தேர்தலில், சட்டமன்றத்தில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றி பெற்றது. தென்சென்னையிலிருந்து மக்களவைக்கு அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதற்காக சட்டமேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) ஆனார். தென்சென்னை எம்.பி. பதவியி லிருந்து விலகினார். அதனால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முரசொலி மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.