செந்தில்குமார். எம், சென்னை - 78.

""என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது"" என எடப்பாடியார் ஆவேசமாக கூறுகிறாரே?

Advertisment

அப்படியே, வாக்காளர்களை வாங்குவதற்கு அவர் என்ன விலை வைத்திருக்கிறார் என்பதையும் சட்டுபுட்டுன்னு சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்.

mavali

ஜெயப்பிரகாஷ், அண்மனைப்புதூர், தேனி - 625531

""மு.க. ஸ்டாலின் வேலினை கையில் ஏந்தியதே அ.தி.மு.க.வை சூரசம்ஹாரம் செய்யத்தான்'' துரைமுருகனின் கூற்று பற்றி?

Advertisment

வேலுடன் யாத்திரை போனார் பா.ஜ.க முருகன். தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இவர் களுக்கெல்லாம் முன்பாக, முப்பாட்டன் முருகனைக் கொண்டாடி வேலை எடுத்தார் சீமான். அரசியல் களத்தில் பலவிதங்களிலும் பயணித்த வேல், ஸ்டா லின் கைக்கு தேர்தல் நேரத்தில் வந்திருக்கிறது. யாரை யார் சம்ஹாரம் செய்கிறார்கள் என்பதை மக்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டு எனும் வேல் தீர்மானிக்கும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.

சசிகலா...?...! .இதில் எந்த குறி?

சமாதியில் சபதம் செய்து ஆச்சரியக்குறியாக சிறை சென்றவர், எப்படி- எப்போது வெளியே வருவார் என்ற கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறார்.

பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்

யானையை தீ வைத்து கொன்ற இரக்கமற்றவர்களை என்னவென்று திட்டுவது?

நீங்கதான்டா நிஜ மிருகம் என்கின்றன காட்டில் வாழும் உயிரினங்கள். ஒரு யானை வலம் வரும் தூரம், அது சாப்பிடும் உணவு, அருந்தும் தண்ணீர், அதன்பின் அது வெளியேற்றும் கழிவு இவையனைத்தும் காட்டின் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாப்பவை. உண்மையில் இயற்கைக்கும் மனிதனுக்கும் யானை அற்புதமான தோழன். அதற்கு தீ வைத்தவன், மனிதன் என்ற போர்வை யில் வாழும் மிருகம்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

தி.மு.க.வை வெளியேற்றுவதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப் பட்டது என்றும் இரும்புக்கோட்டை போல உள்ள அ.தி. மு.க.வை எந்த கொம்ப னாலும் அசைக்க முடி யாது என்றும் சொல்கிறாரே ஓ.பி.எஸ்.?

50 ஆண்டு காலத்தை நெருங்கும் அ.தி.மு.கவால் தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. அதேநேரத்தில் வாக்குப் பலம் குறைந்தாலும் ஆட்சியை இழக்கவில்லை. அரசியல் கண்ணாமூச்சி தொடர்கிறது.

___________

தேர்தல் களம்

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்,

மின்னணு வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்படுவதாக பொதுவான சந்தேகம் இந்தியளவில் நிலவுகிறதே? தேர்தல் ஆணையம் சரியான விளக்கத்தை தந்து சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது எளிமையான அமைப்பு. ஒரு மின்னணு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்க முடியும். அந்த வகையில், 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இணைத்து 64 வேட்பாளர்கள் வரை ஒரு தொகுதியில் போட்டியிட முடியும். மின்னணு இயந்திரத்தில், வாக்காளர்களின் பார்வைக்கு சின்னம் தெரிந்தாலும், இயந்திரத்தின் உள்ளே அது நேரடியான சின்னமாக இருக்காது. 1, 2, 3 என்ற வேட்பாளரின் வரிசைப்படிதான் அது கணக்கிடும். வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு விடுகின்றன. அதனால், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் பெயர் முதலில் இருக்கும், அவருடைய சின்னம் என்ன, அடுத்தடுத்த வேட்பாளர்கள் யார், அவருடைய சின்னங்கள் என்ன என்பது போன்றவற்றை முன்கூட்டியே கணித்து, இயந்திரத்திற்குள் ஊடுருவ முடியாது. வேட்புமனு தாக்கல்- பரிசீலனை- வாபஸ் எல்லாம் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் உறுதியான பிறகே, இயந்திரத்தில் யாருடைய பெயர் எந்த இடத்தில் இருக்கும் என்பது தெரியவரும். இவையெல்லாம் மின்னணு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை- பாதுகாப்பு இவற்றை மையப்படுத்தி ஏற்படுத்தப்பட்டவை. எந்த வேட்பாளரின் பெயர்- சின்னம் ஆகியவற்றுக்கு நேர் அருகில் உள்ள பொத்தானை வாக்காளர்கள் அழுத்துகிறார்களோ அதற்கான விளக்கு பீப் ஒலியுடன் எரிந்து அணையும். அந்த வேட்பாளருக்கு வாக்குப் பதிவாகும். அதனடிப்படையில் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இத்தனை ஏற்பாடுகள் இருந்தாலும், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவின் போது இயந்திரங்கள் கோளாறு செய்து, புது இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக ஒரு சில இடங்களில் கொத்துக் கொத்தாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்படுகின்றன. இவையெல் லாம்தான் தேர்தல் முடிவுகளின் மீது சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இன்னும் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான மின்னணு இயந்திரங்களை நிறுத்தி வைத்தால் என்ன என்பதுதான் வாக்காளர்களின் கேள்வி. அமெரிக்காவைவிட பல மடங்கு வாக்காளர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஆனாலும், அதற்கேற்ற வகையில், ஆள்பலத்தைப் பெருக்கி, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரலாமே என்கிறார்கள். காலதாமதமாகும் என்கிறது தேர்தல் ஆணையம். 5 ஆண்டுகாலம் ஆளப்போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிக்க ஐந்தாறு நாட்களோ வாரங்களோ காத்திருந்தால் குடியா முழுகிப் போய்விடும் என்கிறார்கள் மக்கள்.