Advertisment

மாவலி பதில்கள்!

mavali

அ.யாழினி பர்வதம், சென்னை 78

மக்கள் பாதை அமைப்பிலிருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். நீக்கப்பட்டிருக்கிறாரே?

ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்தே விலகியவருக்கு, தன்னை ஒரு அமைப்பிலிருந்து நீக்கியது பெரிய பாதிப்பாக இருக்காது. இனி எந்த மக்களுக்காக எந்தவித பாதையில் அவர் பயணிக்கப் போகிறார் என்பதுதான் கவனிக்கப்படும். அதிகாரியாக பெயர் எடுத்தவரை, அரசியல் விளம்பரங்கள் சுழற்றி அடிக்கின்றன.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

தமிழகமே "தலைகுனி'யும் விதத்தில் முதல்வராவதற்கு முன்பு "முட்டி கால் போட்டு ஊர்ந்து சென்று கும்பிடும்' செயலையே சகித்துக்கொண்டவர்கள், அதைப்பற்றிய "விமர்சனத்தை' மட்டும் சகித்துக்கொள்ள முடியாதது பற்றி.?

Advertisment

பதவி எப்படி வந்தது என்பதைவிட, அதை எப்படி தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதே அரசியல் ராஜதந்திரமாக கவனிக்கப்படுகிறது. அந்த ராஜதந்திரத்தை, "தலை நிமிரும் தமிழகம்' என விளம்பரம் செய்து கொண்டாடுவதை விமர்சனம் செய்தால் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

mavali

மு.செ.மு.புகாரி, சித்தா

அ.யாழினி பர்வதம், சென்னை 78

மக்கள் பாதை அமைப்பிலிருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். நீக்கப்பட்டிருக்கிறாரே?

ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்தே விலகியவருக்கு, தன்னை ஒரு அமைப்பிலிருந்து நீக்கியது பெரிய பாதிப்பாக இருக்காது. இனி எந்த மக்களுக்காக எந்தவித பாதையில் அவர் பயணிக்கப் போகிறார் என்பதுதான் கவனிக்கப்படும். அதிகாரியாக பெயர் எடுத்தவரை, அரசியல் விளம்பரங்கள் சுழற்றி அடிக்கின்றன.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

தமிழகமே "தலைகுனி'யும் விதத்தில் முதல்வராவதற்கு முன்பு "முட்டி கால் போட்டு ஊர்ந்து சென்று கும்பிடும்' செயலையே சகித்துக்கொண்டவர்கள், அதைப்பற்றிய "விமர்சனத்தை' மட்டும் சகித்துக்கொள்ள முடியாதது பற்றி.?

Advertisment

பதவி எப்படி வந்தது என்பதைவிட, அதை எப்படி தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதே அரசியல் ராஜதந்திரமாக கவனிக்கப்படுகிறது. அந்த ராஜதந்திரத்தை, "தலை நிமிரும் தமிழகம்' என விளம்பரம் செய்து கொண்டாடுவதை விமர்சனம் செய்தால் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

mavali

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

கொள்ளையர்களை எதிர்த்து தர்மப்போர் நடத்துகிறேன் என்கிறாரே கமலஹாசன்?

கமலின் தந்தை சீனிவாசன், காங்கிரஸ்காரர். நேர்மையான தலைவர்கள் வாழ்ந்தார்கள் என சொல்லப்பட்ட அந்தக் காலத்திலேயே காங்கிரஸ் ஆட்சி மீது "முந்த்ரா ஊழல், ஜீப் ஊழல்' குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. "எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்தவன்' என்கிறார் கமல். அந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் எரிசாராய ஊழல், சாராய பாட்டிலிங் ஊழல் எனப் பலவும் வெளிப்பட்டன. "மலைக்கள்ளன்' போன்ற கொள்ளையர்கள் காலத்திற்கேற்ப "ஜென்டில்மேன்'களாகிவிடுகிறார்கள் என்பதை "குரு'வான கமல் அறியாமல் இருக்க மாட்டார்.

எஸ்.மோகன், கோவில்பட்டி

கொரோனாவால் நிறைய வார -மாத இதழ்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே?

ஆண்ட்ராய்டு போன் -ஜியோ சிம் இவையிரண்டும்தான் வார -மாத இதழ்கள் மீது தாக்குதல் நடத்திய கொரோனாக்கள். பேரிடர் காலத்திற்கு முன்பே இந்த தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. கொரோனா காலத்தில் அதன் உச்சகட்ட பாதிப்பு தெரிந்தது. ஆனாலும், வாசகர்கள் எனும் தடுப்பு மருந்து இருந்ததால், ஆபத்து காலத்தைக் கடந்து சவாலான பயணத்தை நம்பிக்கையோடு மேற்கொள்கின்றன பல இதழ்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

தமிழக கோவில்களை பக்தர்களே நிர்வாகிக்க வேண்டும் என்கிறாரே ஜக்கி வாசுதேவ்?

அதே வழியில், தமிழக காடுகளை யார் நிர்வாகிக்க வேண்டும் என்பதையும் அவர் சொன்னால் நன்றாக இருக்கும்.

_________

தேர்தல் களம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்ற முறை எப்படி வந்தது?

ஜனநாயகம் என்பது மக்களே தங்களுக்கான நிர்வாகப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதாகும். மன்னராட்சி நடைபெற்ற காலத்தில்கூட கிராம நிர்வாகம் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களே தேர்வு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் சங்க காலத் தமிழர் வாழ்க்கை முறையில் உள்ளது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ஐம்பெருங்குழு- எண்பேராயம் போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் செயல்பட்டதை அறியமுடிகிறது. உள்ளாட்சி நிர்வாகத்திற்கானத் தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கு குடவோலை முறை பயன் படுத்தப்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டு காட்டுகிறது. ரோமானிய நாட்டிலும் பழங்காலத்தி லேயே மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக் கப்படும் முறைகள் இருந்ததை அப்போது வெளியிடப்பட்ட நாணயங்களிலிருந்து அறிய முடிகிறது. சிறுசிறு பகுதிகளுக்கான ராஜாக்களை அந்தந்த ஊர் மக்களே தேர்ந்தெடுத்தனர் என்பதைக் காட்டும் குறிப்புகள் இந்திய வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. பேரரசர்களும் அவர்களின் சாம்ராஜ்ஜியத்திலும் மன்னர் வாழும் காலம் வரை ஆட்சியில் இருந்துவிட்டு, அவருக்குப் பிறகு அவரது வாரிசுக்கு முடிசூட்டுவது வழக்கம் என்றாலும், ஜனநாயகம் என்பது அத்தகைய நடைமுறையை அனுமதிப்பதில்லை. நவீன கால ஜனநாயகத்தில் இங்கிலாந்து முன்னோடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஜனநாயக வழி அரசுகள் அமைந்தன. தங்கள் நாட்டை ஆள் பவர்களை அந்நாட்டு மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறையே இன்றைய ஜனநாயகம். வாக்களிக்கும் உரிமையாருக்கு உண்டு எனத் தீர்மானிப்பதிலும், வெற்றியைத் தீர்மானிப்பது எப்படி என்பதை முடிவு செய்வதிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோலவே, ஆட்சிக்காலத்தை நிர்ணயிக்க வேண்டியதும் கட்டாயமாகும். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்கள் நலனுக்கேற்ப செயல்படுகிறார்களா-மாற்றுப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா என்பதே தேர்தலின் நோக்கமாகும். அதற்கான கால அளவு என்பது ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் நியாயமான அளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு லீப் வருடத்தின் நவம்பர் மாதத்திலும் தேர்தல் நடைபெற்று, அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அதிபர் பொறுப்பேற்பது அங்கே வழக்கம். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தியாவின் சட்டங்கள் பலவும் பிரிட்டிஷ் ஆட்சியை ஒட்டியே அமைந்திருப்பதால், தேர்தலுக்கான கால இடைவெளி என்பது 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் குதிரை பேரங்கள்-ஆட்சிக் கவிழ்ப்புகள் முன் கூட்டியே நடந்த தேர்தல்களும் நிறைய உண்டு.

nkn230121
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe