மாவலி பதில்கள்!

mavalianswers

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை 6

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் சொன்ன அதிசயம்- அற்புதம் தமிழ்நாட்டில் நடக்குமா?

அதிசயம் -தமிழருவி மணியன். அற்புதம் -அர்ஜூனமூர்த்தி. இருவரும் நன்றாக நடக்கத் தானே செய்கிறார்கள்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)

""விவசாயம் பற்றி மு.க. ஸ்டாலினுக்கு என்ன தெரியும்'' என முதல்வர் கேட்கிறாரே?

அதானே, கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் வரை தெரிந்திருக்கிறார் முதல்வர். இயேசுவை சுட்ட கோட்சேவை பற்றி தெரிந்திருக்கிறார் அமைச்சர். அந்தளவு ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா என்பது நியாயமான கேள்விதான். ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து, 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை பதவியேற்பு மேடையி லேயே ரத்து செய்து கையெழுத்திட்ட கட்சியின் தலைவராக இருக்கும் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

அழ.கருப்பையா, மன்னார்குடி

"அ.தி.மு..க.வை நிராகரிப்போம்' என தி.மு.க. கூட்டங்களில் தலைவர்க

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை 6

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் சொன்ன அதிசயம்- அற்புதம் தமிழ்நாட்டில் நடக்குமா?

அதிசயம் -தமிழருவி மணியன். அற்புதம் -அர்ஜூனமூர்த்தி. இருவரும் நன்றாக நடக்கத் தானே செய்கிறார்கள்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)

""விவசாயம் பற்றி மு.க. ஸ்டாலினுக்கு என்ன தெரியும்'' என முதல்வர் கேட்கிறாரே?

அதானே, கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் வரை தெரிந்திருக்கிறார் முதல்வர். இயேசுவை சுட்ட கோட்சேவை பற்றி தெரிந்திருக்கிறார் அமைச்சர். அந்தளவு ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா என்பது நியாயமான கேள்விதான். ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து, 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை பதவியேற்பு மேடையி லேயே ரத்து செய்து கையெழுத்திட்ட கட்சியின் தலைவராக இருக்கும் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

அழ.கருப்பையா, மன்னார்குடி

"அ.தி.மு..க.வை நிராகரிப்போம்' என தி.மு.க. கூட்டங்களில் தலைவர்கள் -தொண்டர்கள் சொல்வது மனோதத்துவ ரீதியாக அ.தி.மு.க.வுக்கு சாதகம்தானே, கலைஞர் இருந்தால் ஒரு முறைகூட அ.தி.முக. என்ற சொல்லை பயன்படுத்தமாட்டார். சரிதானே?

அண்ணா தி.மு.க. என்றுதான் பலரும் ஆரம்பத்தில் சொல்லி வந்தார்கள். கலைஞரோ அ.தி.மு.க. என்றுதான் சொல்வார். நீதி -அநீதி, நியாயம் -அநியாயம், சிங்கம் -அசிங்கம் என்பதுபோல தி.மு.க. -அ.தி.மு.க. என்று விளக்கமும் சொன்னவர் கலைஞர். அது கலைஞர் கால அரசியல். அவர் கொடுத்த விளக்கத்தின் படியான "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' எனத் தீர்மானம் நிறைவேற்றுவது, கலைஞர் இல்லாத இந்தக் காலத்து அரசியல்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தைப்பூசம் திருநாளுக்கு எடப்பாடி அரசு பொது விடுமுறை அளித்துள்ளதே?

பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி இதனை வலியுறுத்தியது. வேல் யாத்திரை நடத்திய பா.ஜ.க. திடீரென வலியுறுத்தியது. இரண்டு கட்சிகளும் "இது தங்கள் கோரிக்கைக்கு வெற்றி' என்கின்றன. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இது வெற்றி தருமா என்பதே எடப்பாடியின் கணக்கு.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

என்றுமே இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகள் திடீரென வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் அவரது படத்திற்கு மரியாதை செய்துள்ளார்களே?

தேர்தல் ஆண்டு என்றால் இதுவரை கவனத்தில் வராதவைகூட கவனத்தில் வரும். வீரபாண்டிய கட்டபொம்மனின் துணிச்சல்மிக்க தியாகமும் அப்படித்தான் அரசியல் கட்சிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்ல, கட்டபொம்மன் பெயரை வைத்து அரசியல் நடத்த அதிகாரிகளும் களமிறங்கியிருப்பதை முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் படம் போட்ட போஸ்டர் அப்பட்டமாகக் காட்டுகிறது.

_______________

தேர்தல்களம்

mavalianswers

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

நடிகர் திலகமாகத் திகழ்ந்தும் தேர்தலில் சிவாஜிகணேசன் படுதோல்வியை சந்தித்ததேன்?

நடிகர் திலகத்தின் கலை ஆற்றல் ஈடு இணையற்றது. தமிழில் அவர் நடித்த படங்கள் உலக அரங்கில் புகழ் பெற்றிருக் கின்றன. தமிழக மக்களிடம் நிரந்தர செல்வாக்கு உண்டு. அவரது கலையுலக ஆற்றலும் செல்வாக்கும் அரசியல் களத்தில் பலருக்கும் பயன்பட்டது. வி.சி.கணேசனாக இருந்த அவருக்கு ‘"சிவாஜி'’என்ற பட்டத்தை வழங்கியவர் பெரியார். அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் அந்தப் பட்டம். சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான "பராசக்தி'க்கு திரைக் கதை- வசனம், கலைஞர். இப்படி திராவிட இயக்கத் தொடர்புடன் தி.மு.க.வுக்கு பிரச்சார நாட கங்களில் நடித்து வந்த சிவாஜியின் அரசியல் தொடர்பு, பின்னர் எம்.ஜி.ஆரின் வருகைக்குப் பிறகு மாற்றம் கண்டது. திருப்பதிக்கு சிவாஜி சென்று வந்தது அந்நாளில் பெரும் சர்ச்சையானதால்... அவர் தி.மு.கவிலிருந்து ஒதுங்கி, காங்கிரஸ் பக்கம் சென்றார். காங்கிரசில் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக, பின்னர் இந்திராகாந்தியின் ஆதரவாளராக சிவாஜியின் அரசியல் பயணம் தொடர்ந்தது. பாதயாத்திரை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி 1977 எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. சிவாஜி பிரச்சாரம் செய்தார். அந்தக் கூட்டணி வென்றது. 1980-ல் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைந்தது. அப்போதும் அந்தக் கூட்டணிக்கு சிவாஜி பிரச்சாரம் செய்தார். வெற்றி கிடைத்தது. 1984-ல் அவரது ரசிகர் மன்றத்தினருக்கு உரியளவில் சீட் தரப்படவில்லை என்பதால் தனித்துப் போட்டியிட மனு செய்தனர். மேலிடத்தின் சமாதானத்தால் அந்த முடிவை வாபஸ் பெற்றார் சிவாஜி. ஆனாலும் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இந் நிலையில்தான், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ல் நடைபெற்ற தேர்தலில் "தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை தொடங்கி அ.தி.மு.க.வின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டார் சிவாஜி. காலம் கடந்த முடிவு, செல்வாக்கில்லாத கட்சியுடன் கூட்டணி, தேர்தல் நுட்பங்களில் தேர்ச்சி இல்லாதது இவையே சிவாஜியால் அரசியலில் வெற்றிபெற முடியாமல் போனதற்கான காரணங்கள். ஆனாலும் அவர் எப்போதும் ஹீரோதான்.

nkn160121
இதையும் படியுங்கள்
Subscribe