மாவலி பதில்கள்!

mavali

செந்தில்குமார் எம்., சென்னை - 78

சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ மாயமானது, வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டதே?

திருடனிடமே கொத்துச் சாவியைக் கொடுப்பதுபோல, கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட இடத்திலேயே இருந்த லாக்கரில் அதைப் பாதுகாப்பாக வைத்ததாக சி.பி.ஐ. சொல்வதுதான் செம ட்விஸ்ட்.

mavali

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

சூத்திரர்களை சூத்ரா என்று அழைத்தால் அதை அவமானமாக கருதுகிறார்கள் எனில் அது அவர்களின் அறியாமையே என்கிறாரே சர்ச்சைக்குரிய எம்.பி பிரக்யா தாகூர்?

மனுதர்மத்தின் எட்டாவது அத்தியாயம், 415 ஆவது சுலோகத்தின்படி சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவர், பக்தியினால் வேலை செய்கிறவர், தன்னுடைய தாசியின் மகன், விலைக்கு வாங்கப்பட்டவர், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவர், ஒருவனால் கொடுக்கப்பட்டவர், குற்றத்திற்காக வேலை செய்கிறவர் என ஏழு வகையாகப் பிரிக்கிறது. அத்தனையும் அடிமைத்தனத்தின்

செந்தில்குமார் எம்., சென்னை - 78

சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ மாயமானது, வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டதே?

திருடனிடமே கொத்துச் சாவியைக் கொடுப்பதுபோல, கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட இடத்திலேயே இருந்த லாக்கரில் அதைப் பாதுகாப்பாக வைத்ததாக சி.பி.ஐ. சொல்வதுதான் செம ட்விஸ்ட்.

mavali

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

சூத்திரர்களை சூத்ரா என்று அழைத்தால் அதை அவமானமாக கருதுகிறார்கள் எனில் அது அவர்களின் அறியாமையே என்கிறாரே சர்ச்சைக்குரிய எம்.பி பிரக்யா தாகூர்?

மனுதர்மத்தின் எட்டாவது அத்தியாயம், 415 ஆவது சுலோகத்தின்படி சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவர், பக்தியினால் வேலை செய்கிறவர், தன்னுடைய தாசியின் மகன், விலைக்கு வாங்கப்பட்டவர், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவர், ஒருவனால் கொடுக்கப்பட்டவர், குற்றத்திற்காக வேலை செய்கிறவர் என ஏழு வகையாகப் பிரிக்கிறது. அத்தனையும் அடிமைத்தனத்தின் அடையாளம் என்கிறது அடுத்த ஸ்லோகம். அதற்கடுத்த ஸ்லோகமோ, இவர்களின் உடைமை மீது பிராமணர்கள் எவ்வித உரிமையும் கொள்ளலாம் என்கிறது.

மீ.யூசுப் ஜாகீர், வந்தவாசி

வருட இறுதியில் மக்களுக்கு மாவலியின் அறிவுரை என்ன?

கொரோனா கொடுங்காலத்தையே எதிர்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் மக்கள். அறிவுரைகளைவிட அனுபவங்களே வாழ்க்கைக்கு சிறந்த பாடம். அந்தப் பாடத்தைப் படிக்க வேண்டி யவர்கள் ஆட்சியாளர்கள். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை பிரித்தாளும் சூழ்ச்சியால் தகர்த்துவிட நினைக்கிறது மோடி அரசு. ஆனால், சர்தார்ஹகம்சிங் என்பவர் உள்பட பல விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தில் பணியாற்றிய பஞ்சாப் வீரர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதன்பிறகும் மனிதாபிமானம் இல்லாமல் மமதையுடன் செயல்படும் மத்திய அரசுக்கு என்ன அறிவுரை சொல்வது?

ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்

இந்திய அரசியல் அமைப்பு சட் டம் வகுத்துள்ளபடி மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றனவா?

India that is Bharat shall be a union of states என்கிறது இந்திய அரசியல் சாசனம். இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம். இதனை மத்திய ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை. மாநிலத்தை ஆள்பவர்கள் உணர்வ தில்லை.

வாசுதேவன், பெங்களூரு

பெருகி வரும் முதியோர் இல்லங்கள் கூறுவது எதை?

வாழ்க்கையின் வாசலில் காலம் வரைந்துள்ள கோலத்தை.

___________

தேர்தல் களம்!

சு.வெங்கடேஷ், கோட்டயம்

அ.ம.மு.க.வுக்கு "குக்கர்' சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யத்திற்கு "டார்ச் லைட்' தர மறுத்திருக்கிறதே? சின்னம் ஒதுக்குவதில் ஏன் இந்த வேறுபாடு?

தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என இருவகை அரசியல் கட்சிகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யலாம். ஆனால், தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகள் அதன் அடிப்படையில் வெற்றி பெறும் தொகுதிகள் இவற்றைக் கொண்டே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கிறது. தேசிய கட்சிகளாகவும் மாநிலக் கட்சிகளாகவும் அரசியல் கட்சிகள் அவற்றின் தன்மைக்கேற்ப அங்கீகாரம் பெறும்போதுதான் நிலையான சின்னங்கள் கிடைக்கும். இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு "இரட்டை காளைமாடு', "ராட்டை', "பசுவும் கன்றும்' ஆகிய சின்னங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒதுக்கப்பட்டு, 1980 முதல் கை சின்னம் நிரந்தரமானது. ஜனசங்கமாக இருந்து ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தல் களம் கண்ட வாஜ்பாய், அத்வானி ஆகியோர் "ஏர்உழவன்' சின்னத்தில் போட்டியிட்டனர். பின்னர் "பாரதிய ஜனதா' என "ஜனசங்கம்' மாற்றம் பெற்றபோது தாமரை சின்னம் கிடைத்தது.

தி.மு.க. முதலில் தேர்தல் களம் கண்ட 1957-ல் பெரும்பாலான வேட்பாளர்களுக்கு "உதயசூரிய'னும் சிலருக்கு "சேவல்' சின்னமும் ஒதுக்கப்பட்டது. 15 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றதால், "உதயசூரியன்' நிரந்தர சின்னமானது. பா.ம.கவுக்கு முதல் தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னம் "யானை'. அதன்பிறகு, "மாம்பழம்'. ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட சின்னம் "குடை'. அதன்பிறகு "பம்பரம்'. அ.தி.மு.க. முதன் முதலில் 1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிடும்போதே சுயேட்சை சின்னமான "இரட்டை இலை'யைத் தேர்ந்தெடுத்து மகத்தான வெற்றி பெற்றது. அதுவே அதன் நிரந்தர சின்னமானது அதன்பிறகு, ஜா-ஜெ என இரு அணிகளானபோது "இரட்டை புறா', "சேவல்' சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஜெ. மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஓ.பி.எஸ் அணிக்கு "இரட்டை மின்விளக்கு கம்ப'மும், தினகரனுக்கு "தொப்பி' சின்னமும் ஒதுக்கப்பட்டது. பிறகு இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இணைந்தபிறகு "இரட்டை இலை' மீண்டது. தினகரனின் அ.ம.மு.கவுக்கு "குக்கர்' கிடைத்தது. அங்கீகாரம் பெறாத கட்சிகளிலும், பிளவுபடும் கட்சிகளிலும் சின்ன விஷயத்தில் தேர்தல் ஆணையம் விளையாடும். கமல் கேட்டது கிடைக்காமல் போகலாம். ரஜினி கேட்பது கிடைத்தாலும் கிடைக்கலாம். எல்லாவற்றையும் மேலே இருப்பவர்கள் தீர்மானிப்பார்கள்.

nkn191220
இதையும் படியுங்கள்
Subscribe