Advertisment

மாவலி பதில்கள்!

mavali

தூயா, நெய்வேலி

"சூரரைப் போற்று...' போற்று என சமூக வலைத்தளங்களில் போற்றுகிறார்களே?

surya

Advertisment

தீபாவளிக்கு ஒரு டஜன் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான காலம் ஒன்று உண்டு. திருவிழா போல குடும்பம் குடும்பமாக செல்வார்கள். இப்போது ஓ.டி.டி. முறையில் படங்கள் ரிலீசாவதால், வீட்டிலேயே படங்களைப் பார்த்துவிடுகிறார்கள். கொரோனா கால தீபாவளியில் ஆன்லைனில் ரிலீசான படம், "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை நடத்திய கோபிநாத்தின் புத்தகத்தை அடிப் படையாகக் கொண்டு, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா நடித்த படம், நடுத்தர வர்க்கத்தின் கனவுகளில் ஒன்றாக இருந்த விமானப் பயணம் பற்றியது. குறைந்த கட்டணத்தில் பலரும் விமானத்தில் பறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் கோபிநாத். ஒரு ரூபாயில் விமானப் பயணம் என்ற ஆஃபரைக்கூட அவர் வழங்கினார். அதனால், விமானத்துறையில் கோலோச்சியிருந்த நிறுவனங்கள், அரசாங்க அதிகார வர்க்கத்தின் துணையுடன், கோபிநாத்துக்கு எத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தன என்பதை, த

தூயா, நெய்வேலி

"சூரரைப் போற்று...' போற்று என சமூக வலைத்தளங்களில் போற்றுகிறார்களே?

surya

Advertisment

தீபாவளிக்கு ஒரு டஜன் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான காலம் ஒன்று உண்டு. திருவிழா போல குடும்பம் குடும்பமாக செல்வார்கள். இப்போது ஓ.டி.டி. முறையில் படங்கள் ரிலீசாவதால், வீட்டிலேயே படங்களைப் பார்த்துவிடுகிறார்கள். கொரோனா கால தீபாவளியில் ஆன்லைனில் ரிலீசான படம், "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை நடத்திய கோபிநாத்தின் புத்தகத்தை அடிப் படையாகக் கொண்டு, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா நடித்த படம், நடுத்தர வர்க்கத்தின் கனவுகளில் ஒன்றாக இருந்த விமானப் பயணம் பற்றியது. குறைந்த கட்டணத்தில் பலரும் விமானத்தில் பறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் கோபிநாத். ஒரு ரூபாயில் விமானப் பயணம் என்ற ஆஃபரைக்கூட அவர் வழங்கினார். அதனால், விமானத்துறையில் கோலோச்சியிருந்த நிறுவனங்கள், அரசாங்க அதிகார வர்க்கத்தின் துணையுடன், கோபிநாத்துக்கு எத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தன என்பதை, தமிழ்த் திரைக்கு ஏற்றபடி சொல்கிறது, "சூரரைப் போற்று'. தனது தந்தையின் இறுதிக்கட்டத்தில் விரைந்து வருவதற்கான விமானப் பயணம் வாய்க்காத மாறன் (சூர்யா), தன் கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகளை வானில் பறக்க வைக்கும் முயற்சியாக தொடங்கும் விமான நிறுவனத்திற்கு அத்துறையின் ஜாம்பவான்கள் ஏற்படுத்தும் கடும் நெருக்கடியும், கார்ப்பரேட் யுகத்தின் சவாலைத் தன் மனைவியின் ஆதரவுடன் வென்று காட்டும் தீரமும் படத்தில் வெளிப்படுகிறது. சினிமாவுக்கேயுரிய நம்ப முடியாத திடீர் திருப்பங்கள் இருந்தாலும், விமானத்தை அண்ணாந்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ஒவ்வொருவருக்கும், ஒருநாளாவது அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தனிமனிதர்களின் நிறைவேறாத ஆசைகளை திரையில் நிறைவேற்றும் நாயகர்களை மக்கள் கொண்டாடுவது வழக்கம். "சூரரைப் போற்று' போற்றப்படுவதற்கான காரணமும் அதுதான்.

நித்திலா, தேவதானப்பட்டி

"மூக்குத்தி அம்மன்' படக் காட்சிகள் நம்பும்படி இருக்கின்றனவா?

nayanthara

நம்பிக்கைதானே மனித வாழ்க்கை. தனது நம்பிக்கைகள் நிறைவேறவேண்டும் என நினைக்கும் பக்தர்கள் எந்தக் கடவுளை நம்பு கிறார்கள் என்பதையும், அந்தக் கடவுளின் பெயரால் யார் மக்களைச் சுரண்டி, இயற்கை வளத்தைக் கொள்ளையடித்து கல்லா கட்டுகிறார்கள் என்பதையும் கார்ப்பரேட் சாமியார் யுகத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது மூக்குத்தி அம்மன். ரசிகர்களால் கொண் டாடப்படும் நயன்தாரா, அம்மனாக வருவது கச்சிதம். சாமி மூலமாகவே சாமியார்களைத் தோலுரிப்பது கனகச்சிதம். 1952 தீபாவளிக்கு வெளியான ‘"பராசக்தி'’, "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்' எனக் கேட்டது. 68 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வெளியான படத்தில் பேசிய அம்பாளின் குரலும் ‘"பராசக்தி' பாணியிலேயே ஒலிக்கிறது.

______________

தேர்தல் களம்

சு.வெங்கடேஷ், கோட்டயம்

Advertisment

இந்திய தேர்தல் முறைக்கும் அமெரிக்க தேர்தல் முறைக்கும் என்ன வேறுபாடு? பீகார் தேர்தல் முடிவுகள் உடனடியாகத் தெரிந்து, ஆட்சி அமைந்துவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தெரிந்தாலும், ஏற்க மறுக்கிறாரே டிரம்ப்?

ஜனநாயகம் விசித்திரமானது. அதில் சாதகங்கள் அதிகம். அதே நேரத்தில் சில பாதகங்களும் உண்டு. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தாலும் இந்தியத் தேர்தல் முறைக்கும் அமெரிக்க தேர்தல் முறைக்கும் வேறுபாடு உண்டு. இந்தியத் தேர்தல் முறைக்கும் இலங்கைத் தேர்தல் முறைக்கும் வேறுபாடு உண்டு. அமெரிக்கா வில் ஜனாதிபதியே ஆட்சித் தலைவர். இந்தியாவைப் பொறுத்த வரை, ஜனாதிபதியை விட பிரதமர்தான் நடைமுறையில் அதிக அதிகாரங்கள் கொண்டவர். ஆனாலும் பிரதமரை நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில்லை. வெற்றிபெறக்கூடிய கட்சியின் எம்.பி.க்கள் கூடித் தங்களின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக யாரைத் தேர்வு செய்கிறார்களோ அவருக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் ஜனாதிபதி. அதனால்தான், 1991 தேர்தலில் நரசிம்மராவும், 1996ல் தேவகவுடாவும் பிரதமர் ஆனார்கள். முதல்வர் பதவியும் எம்.எல்.ஏ.க்கள் கூடித் தேர்வு செய்வதன் அடிப்படையில்தான். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு நேரடியாக மக்கள் வாக்களித்தாலும், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் சபை உறுப்பினர்கள் உண்டு. மாகாணத்தின் மக்கள்தொகை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உறுப்பினர்கள் எண் ணிக்கை இருக்கும். ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர்களில் யார் அந்த மாகாணத்தில் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ, அவர்களுக்கு அந்த மாகாணத்தில் உள்ள அத்தனை தேர்தல் சபை வாக்குகளும் கிடைத்துவிடும். மொத்தமாக 270+ தேர்தல் சபை வாக்குகளைப் பெறுபவரே ஜனாதிபதியாவார். இம்முறை, தபால் ஓட்டுகள் அதிகமானதால் ஜோ பைடனுக்கு 290 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்தன. ஆனால், அதிபர் டிரம்ப் இந்த வாக்குகளை மோசடி என்கிறார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு 4 வருடமும் நவம்பரில் தேர்தல் நடந்தாலும், அதன்பிறகு வரும் ஜனவரியில்தான் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பார். அதுவரை, சட்டப்போராட்டம் நடத்தலாம் என நினைக்கிறார் டிரம்ப். வல்லரசு நாடான அமெரிக்காவில் இப்போதும் வாக்குச்சீட்டு முறைதான். இந்தியா போல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கிடையாது.

nkn211120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe