Advertisment

மாவலி பதில்கள்!

mavalianswers

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

பல விஷயங்களில், பாஜக.வின் 'பாச்சா' சிவசேனாவிடம் மட்டும் பலிப்பதில்லையே ஏன், எப்படி?

Advertisment

பாம்பின் கால் பாம்பறியும். இந்துத்வா எனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே. அத்துடன், மராட்டியம் என்பது சிவசேனாவின் ஹோம் பிட்ச். அதனால் அடித்து ஆடுகிறார்கள்.

Advertisment

mavali

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

"முரசொலி'யை மஞ்சள் பத்திரிகை என்கிறாரே ஜெயக்குமார்?

எம்.ஜி.ஆர். படப் பாடல்களை மேடையில் பாடியவர் அமைச்சர் ஜெயகுமார். அந்த எம்.ஜி.ஆர். தனது படங்களில் பேப்பர் படிக்கும் காட்சிகளில் அதிகம் படித்தது முரசொலிதான். ஆட்சியில் இருந்தபோதும் எம்.ஜி.ஆர். முரசொலி படித்தார். தனது அமைச்சர் பதவிக்கும் பவிசுக்கும் காரணமான கட்சியை உருவாக்கியவரையே மஞ்சள் பத்திரிகை வாசகர் என்று சொல்வதற்குப் பெயர் தைரியமா? நன்றி கெட்டத்தனமா?

பி.மணி, குப்பம் -ஆந்திரா.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

பல விஷயங்களில், பாஜக.வின் 'பாச்சா' சிவசேனாவிடம் மட்டும் பலிப்பதில்லையே ஏன், எப்படி?

Advertisment

பாம்பின் கால் பாம்பறியும். இந்துத்வா எனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே. அத்துடன், மராட்டியம் என்பது சிவசேனாவின் ஹோம் பிட்ச். அதனால் அடித்து ஆடுகிறார்கள்.

Advertisment

mavali

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

"முரசொலி'யை மஞ்சள் பத்திரிகை என்கிறாரே ஜெயக்குமார்?

எம்.ஜி.ஆர். படப் பாடல்களை மேடையில் பாடியவர் அமைச்சர் ஜெயகுமார். அந்த எம்.ஜி.ஆர். தனது படங்களில் பேப்பர் படிக்கும் காட்சிகளில் அதிகம் படித்தது முரசொலிதான். ஆட்சியில் இருந்தபோதும் எம்.ஜி.ஆர். முரசொலி படித்தார். தனது அமைச்சர் பதவிக்கும் பவிசுக்கும் காரணமான கட்சியை உருவாக்கியவரையே மஞ்சள் பத்திரிகை வாசகர் என்று சொல்வதற்குப் பெயர் தைரியமா? நன்றி கெட்டத்தனமா?

பி.மணி, குப்பம் -ஆந்திரா.

ஆறுபடை முருகனின் கையில் இருக்கும் வேலுக்கும் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் முருகனின் யாத்திரையில் பயன்படுத்திய வேலுக்கும் என்ன வேறுபாடு?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்த வைரவேல் களவுபோன விவகாரத்தின்போது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிராக கலைஞர் நீதி கேட்டு நடைபயணம் போனார். மற்ற 5 படைகளில் உள்ள முருகனிடம் இருப்பதும் தங்கம்- வெள்ளி போன்ற உயர்ந்த வேல்கள். பா.ஜ.க. பயன்படுத்துவது அட்டை வேல், மர வேல் என்று அவர்களின் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். பக்தர்கள் வணங்கும் வேல், உயர்வானது. அரசியல் செய்யப் பயன்படும் வேல்கள் டூப்ளிகேட்டுகள்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"ஜம்மு-காஷ்மீரில் மக்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. எனவே இளைஞர்கள் ஆயுதத்தை தூக்குவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது' என்று மக்கள் ஜன நாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளது பற்றி?

பா.ஜ.க.வை நம்பி கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வர் பதவியை அனுபவித்தவர் மெகபூபா. பா.ஜ.கவோ, அதிகாரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மெகபூபாவைக் கவிழ்த்ததுடன், கவர்னர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளையும் பறித்துவிட்டது. மெகபூபா உள்ளிட்ட காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் வீட்டுச்சிறையில் ஓராண்டுக்கு மேல் வைக்கப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த கோபத்தின் வெளிப்பாடான வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்படுகிறது. உணர்ச்சிவயமான வார்த்தைகள் எதிர்மறையாகவே அமையும். தீவிரவாதம் ஒருபோதும் தீர்வல்ல. எந்த ஒரு போராட்டமும் பேச்சுவார்த்தையிலோ தேர்தல் களத்திலோதான் நல்ல தீர்வை நோக்கி நகரும். ஒரு காலத்தில் ஆயுதத்தை நம்பிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (லிபரேஷன்) கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்மைக்காலமாகத் தேர்தல் பாதைக்குத் திரும்பியுள்ளனர். மாணவர்கள்- இளைஞர்கள்- உழைக்கும் மக்கள் ஆதரவுடன் பீகார் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு, 12 இடங்களை வென்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளன. காஷ்மீரிலும் ஜனநாயக வழியிலான தீர்வு சாத்தியம். அதுதான் சரியானது.

வாசுதேவன், பெங்களூரு

படித்தவுடன் பிறருக்கும் படிக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று நினைத்த புத்தகம் பற்றி?

ராகுல்காந்தி பதற்றப்படுகிறவராக இருக்கிறார் என ஒபாமாவின் சமீபத்திய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், Say It Like Obama என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தபோது தமிழக அரசியல்தான் நினைவுக்கு வந்தது. பேசியே ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்- மக்களை மயக்கிவிட்டார்கள் என விமர்சனம் வைக்கப்படும் தமிழக அரசியல் சூழலுடன், அமெரிக்காவில் இரண்டு முறை அதிபராக வென்ற பராக் ஒபாமா எப்படித் தன் பேச்சாற்றலை வெளிப்படுத்தினார். ஒரு மேடையில் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒரே வார்த்தையை எத்தனை விதமாக அவர் உச்சரிக்கிறார், அப்படி உச்சரிக்கும்போது அவரது உடல்மொழி எப்படி உள்ளது, அந்த வார்த்தைகள் மக்களிடம் எப்படி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்பதை விரிவாக விளக்குகிற புத்தகம் அது. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதிய குரலில், சொலல்வல்லன் என்பதை முதலில் வைத்தது ஏன் என்பதற்கான ஆங்கில விளக்கவுரை போல இருந்தது அந்தப் புத்தகம்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

கேள்வி-பதில் பகுதியில் தனியாக பெட்டிச் செய்தி போல தேர்தல் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிடலாமே?

களத்தை உருவாக்கித் தந்து விட்டீர்கள். தேர்தல் களம் என்ற தலைப்பிலேயே உங்கள் சார்பில் வாசகர்களின் எண்ணம் நிறைவேறும்.

nkn181120
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe