Advertisment

மாவலி பதில்கள்!

mavali

பி.மணி, குப்பம், ஆந்திரா

தமிழ்நாட்டில் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவில் அடிக்கடி ரெய்டு என்கிற செய்தியை கேட்கமுடிகிறது ஏன்?

Advertisment

அதிகாரத்தில் இருப்பவர்கள் இரண்டு வகைகளில் ரெய்டு நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ஒன்று, வழிக்கு வராதவர்களை மிரட்டு வதற்கு. மற்றொன்று, வழுக்கி விழுந்தவர்களை அமுக்குவதற்கு. இதில் 1.தி.மு.க. 2. அ.தி.மு.க.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

அரசியல் கட்சி திட்டத்தை கைவிட்டாரா ரஜினிகாந்த்?

தனக்கு 2016ல் சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பதை வெளிப்படையாக அறிவித்து, கொரோனா பேரிடர் காலத்தில் பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதை விளக்கி, தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தபிறகே பணிகளில் ஈடுபட முடியும் என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கிறார் ரஜினி. ஆண்டவன் கையிலிருந்த அவரது அரசியல் தற்போது தடுப்பு மருந்தின் கரங்களில் இருக்கிறது.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

""சம்பளம் கட

பி.மணி, குப்பம், ஆந்திரா

தமிழ்நாட்டில் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவில் அடிக்கடி ரெய்டு என்கிற செய்தியை கேட்கமுடிகிறது ஏன்?

Advertisment

அதிகாரத்தில் இருப்பவர்கள் இரண்டு வகைகளில் ரெய்டு நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ஒன்று, வழிக்கு வராதவர்களை மிரட்டு வதற்கு. மற்றொன்று, வழுக்கி விழுந்தவர்களை அமுக்குவதற்கு. இதில் 1.தி.மு.க. 2. அ.தி.மு.க.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

அரசியல் கட்சி திட்டத்தை கைவிட்டாரா ரஜினிகாந்த்?

தனக்கு 2016ல் சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பதை வெளிப்படையாக அறிவித்து, கொரோனா பேரிடர் காலத்தில் பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதை விளக்கி, தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தபிறகே பணிகளில் ஈடுபட முடியும் என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கிறார் ரஜினி. ஆண்டவன் கையிலிருந்த அவரது அரசியல் தற்போது தடுப்பு மருந்தின் கரங்களில் இருக்கிறது.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

""சம்பளம் கட்டுபடியாகவில்லை பிரதமர் வேலையை விடப்போகிறேன்''... என்று இங்கிலாந்து பிரதமர் "போரிஸ் ஜான்சன்' கூறினாராமே?

Advertisment

mavali

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கான ஆண்டு ஊதியம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 402 பவுண்டு. இந்திய மதிப்பில் பார்த்தால் 1 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய். அவர் பிரதம ராவதற்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தவர். டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் தலையங்கம்- கட்டுரைகள் எழுதிய போது மாதத்திற்கு 21 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித் திருக்கிறார். அப்படியென்றால் ஓராண்டுக்கு எவ்வளவு என கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதுபோல, மாதத்திற்கு 2 முறை மேடைப் பேச்சு என்ற முறையில் அவருக்கு கிடைத்த ஆண்டு வருமானம் 1 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். அதாவது, பிரதமராவதற்கு முன்பு பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும் அவர் ஒரு வருடத்தில் சம்பாதித்தது கிட்டத்தட்ட 2 கோடியே 62 லட்ச ரூபாய். பிரதமரானபிறகு அதில் பாதிதான் சம்பாதித்து வந்தார். இரண்டு திருமண முறிவுகள். அந்த மனைவியரின் குழந்தைகள். தற்போதைய வாழ்விணையருக்கு கடந்த ஏப்ரலில் பிறந்துள்ள குழந்தை என 56 வயது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் என்னதான் செய்வார்? அதனால்தான், பிரதமர் வேலையை விடப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

பிறப்பு சான்றிதழில் தாயின் பெயர் மட்டும் போதும் தந்தையின் பெயரை இன்ஷியலாக சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ரமேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளாரே?

விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவர், தனக்கு குழந்தை வேண்டும் என விரும்பியதால் விந்தணு கொடையாளர் மூலம் செயற்கை கருத்தரிப்பு வாயிலாக குழந்தை பெற்றுக் கொண்டார். பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும்போது தந்தை பெயர் கேட்டிருக்கிறார்கள். தாயுடன் இல்லறம் நடத்தியிருந்தால்தான் ஒருவர் தந்தையாக முடியும். விந்தணு கொடை வழங்கியதால் தந்தையாக முடியாது என்பது அந்தப் பெண்ணின் வாதம். மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கவில்லை. அந்தப் பெண்மணி நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், ஒற்றைப் பெற்றோராக குழந்தையை தாய் வளர்க்கும் நிலையில் தந்தையின் இனிஷியலை சேர்க்க வேண்டியதில்லை என்றும் தந்தையை இழந்த- தந்தையைப் பிரிந்த- தாயின் பாதுகாப்பில் மட்டும் வளர்கிற குழந்தைகளுக்கு இது பொருந்தும் என முக்கியத்துவமான தீர்ப்பினை வழங்கி யிருக்கிறார்.

mavali

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-608001.

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது குறித்து?

சாரம் சரிந்தது. அதற்குள் உள்ள அரசியல் சாராம்சம் வெளிப்பட்டால் ஊழல் சாம்ராஜ்ஜிய மும் சரியும்.

ம.தமிழரசி மணி, வெள்ளக்கோவில்

பா.ஜ.கவின் பெண்கள் அணியின் தேசிய தலைவராக தமிழகத்தை சார்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறாரே?

வழக்கறிஞர். விவாதங்களில் கண்ணியமாகப் பேசக்கூடிய அபூர்வ பா.ஜ.க.காரர். தமிழகத்தின் மேற்கு மண்ட லத்தில் இருந்து அரசியலுக்கு வந்த பெண்மணி. தன் கணவரை சுற்றிய சர்ச்சைகளைக் கடந்து, பா.ஜ.க.வின் தேசியத் தலைவரால் கட்சியின் தேசியப் பொறுப்பைப் பெற்றிருக்கிறார். இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்கள் கோலோச்சிய தமிழக பா.ஜ.கவில் தமிழிசை, எல்.முருகன், வானதி சீனிவாசன் போன்றவர் களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதை திராவிடக் கட்சிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

வாசுதேவன், பெங்களூரு

ஆச்சரியக்குறி கேள்விக்குறியாகவும், கேள்விக்குறி ஆச்சரியக்குறியாகவும் மாறுவது எப்பொழுது?

உரிமைக்கான போராட்டம் தொடங்கும்போதும், உரிமைகளை வென்றெடுக்கும்போதும்! "நாம்' என்ற படத்தில், “என்னடா ஆச்சரியக்குறி போடுகிறாய்?’ என்று தொழிலாளியை ஜமீன்தார் கேட்பார். ""ஆம்.. ஆச்சரியக்குறிதான். கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாகும். கேள்விக்குறிக்கும் அரிவாளுக்கும் அதிக வித்தியாசமில்லை'' என்பார் தொழிலாளி. கலைஞர் வசனத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.

nkn041120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe