Advertisment

மாவலி பதில்கள்!

nn

தமிழரசிமணி, வெள்ளக்கோவில்

குஷ்பு வருகையால் தமிழக பா.ஜ.க. வளர்ச்சி அடையுமா?

பா.ஜ.க. இப்போது விரும்புவது தமிழகத்தில் தங்களின் வளர்ச்சியை அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே செல்வாக்காக உள்ள கட்சிகள் -கூட்டணிகளின் குழப்பத்தைத்தான். அதற்கேற்ப குஷ்புவுக்கும் வேலைகள் இருக்கும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

உத்தரபிரதேசத்தில் "மிஷன் சக்தி'’ திட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் பெண்கள், அங்குள்ள பெண் அதிகாரிகளிடம் தங்கள் தரப்பை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க ‘கண்ணாடி அறை’ அமைக்கப்பட்டுள்ளதாமே?

பெண்கள் பாதுகாப்பு என்பது மிக மோசமாக உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் முன்னணி வகிக்கிறது என்பதை அண்மையில் அங்கு நடந்த கொடூர நிகழ்வுகள் வெளிப் படுத்திவிட்டன. பாலியல் கொடுமைக்குள்ளாகி, உயிரிழந்த தலித் பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரையே பார்க்க அனுமதிக்காமல் காவல்துறையை வைத்து எரியூட்டியது உ.பி. அரசு. சட்டம்-ஒழுங்கு பிரச்ச

தமிழரசிமணி, வெள்ளக்கோவில்

குஷ்பு வருகையால் தமிழக பா.ஜ.க. வளர்ச்சி அடையுமா?

பா.ஜ.க. இப்போது விரும்புவது தமிழகத்தில் தங்களின் வளர்ச்சியை அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே செல்வாக்காக உள்ள கட்சிகள் -கூட்டணிகளின் குழப்பத்தைத்தான். அதற்கேற்ப குஷ்புவுக்கும் வேலைகள் இருக்கும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

உத்தரபிரதேசத்தில் "மிஷன் சக்தி'’ திட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் பெண்கள், அங்குள்ள பெண் அதிகாரிகளிடம் தங்கள் தரப்பை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க ‘கண்ணாடி அறை’ அமைக்கப்பட்டுள்ளதாமே?

பெண்கள் பாதுகாப்பு என்பது மிக மோசமாக உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் முன்னணி வகிக்கிறது என்பதை அண்மையில் அங்கு நடந்த கொடூர நிகழ்வுகள் வெளிப் படுத்திவிட்டன. பாலியல் கொடுமைக்குள்ளாகி, உயிரிழந்த தலித் பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரையே பார்க்க அனுமதிக்காமல் காவல்துறையை வைத்து எரியூட்டியது உ.பி. அரசு. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை அதற்கு காரணமாகக் காட்டியது. இப்போது கண்ணாடி அறையில் வெளிப்படையாக புகார் தெரிவிக்கலாம் என்றால், அது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவா? புகார் தருபவர் யார் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்பதற்காகவா எனக் கேட்கின்றன உத்தரபிரதேச எதிர்க்கட்சிகள். பெண்கள் பாதுகாப்பு என்று தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதா அறிவித்த சட்டங்களே நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

சீனா இன்று அமெரிக்காவையே மிஞ்சுகிற வலிமை பெற்றுள்ளதற்கு காரணம் அங்கு நிலவும் சர்வாதிகார மற்றும் அடக்குமுறை அரசியல் தானே காரணம்?

Advertisment

ஒரு கட்சி ஆட்சி நிலவும் சீனாவும், இரண்டு பெரிய கட்சிகளின் ஜனநாயகப் போட்டியால் அமையும் அரசுகளைக் கொண்டு ஆட்சிசெய்யும் அமெரிக்காவும் பொருளாதாரம் -ராணுவம் -வாணிபம் என அனைத்திலும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒற்றையாட்சி முறை என்பது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டது. கம்யூனிச சீனா அப்படிப்பட்ட நாடு. அமெரிக்காவில் ஜனாதிபதியையே பொதுமக்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு ஜனநாயகம் உண்டு. அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான செல்வாக்குடன், சீனா போலவே ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையைக் கொண்டிருந்த கம்யூனிச நாடான சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதியையும் நினைத்துப் பார்க்கவேண்டும். மக்களின் தேவையையும் மண்ணின் அரசியல் -பொருளாதார -பண்பாட்டுத் தன்மையையும் உணர்ந்து ஆட்சி செய்பவர்கள் வாய்த்தால் நாடுகள் போட்டி போட்டு முன்னேறும்.

b

அயன்புரம் த.சத்தியநாராயணன்,சென்னை 72

தேசியக்கொடியை காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா அவமதித்ததாக பா.ஜ.க குற்றம்சாட்டுகிறதா?

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இருந்தபோது, தேசியக் கொடியுடன் அம்மாநிலத் திற்கானத் தனிக்கொடியும் இருந்தது. "சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரமில்லை' என்கிற மெகபூபா, "தனது மாநி லக் கொடி திரும்பக் கிடைத்தால் தான் தேசியக்கொடியை கையில் ஏந்துவேன்' என்கிறார். உரிமைக் குரலுக்கும் அவமதிப்புக்குமான வேறுபாடு பற்றித் தெரிந்தாலும், தெரியாதது போல செயல்படுவதற்குப் பெயர்தான் அதிகார அரசியல்.

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனை பற்றி?

அடுத்த கேள்விக்கான விடையைப் படிக்கவும்.

மல்லிகா அன்பழகன், சென்னை 78

வலைத்தளங்கள் இல்லாத காலத்திலேயே பிள்ளையார் பால் குடித்த வதந்தி, நாடு முழுவதும் பரவியது எப்படி?

பிள்ளையார் பால் குடித்தது மட்டுமா? அக்கா-தங்கச்சிகளுக்கு பச்சைக் கலர் புடவை எடுத் துக் கொடுக்க வேண்டும் என்றது, வெங்கடாஜலபதி மகிமை பற்றிய இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் 100 பேருக்கு இதுபோல அனுப்பினால் அதிர்ஷ்டம் கொட்டும் -இல்லையென்றால் ஆபத்து ஏற்படும் என்றது, துர்சக்தியிடமிருந்து பாதுகாக்க வீட்டுக் கதவில் நாமம் போடச் சொன்னது... இப்படி எத்தனையோ வதந்திகள் அந்தக்காலத்தில் கும்மிடிப் பூண்டி முதல் குமரி மாவட்டம் வரை பரவியிருக்கின்றன. வதந்தி களுக்கு எல்லாக் காலத்திலும் இறக்கைகள் உண்டு. ஊடக -வலை தளக் காலத்தில் அது ஜெட் வேகத்தில் பறக் கிறது. அதில், முந்தைய வாசகர் மனதில் ஊடகங்களும் வலைத்தளமும் ஏற்படுத்திய தாக்கத்தால் உருவான கேள்வியும் ஒன்று.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு

தமிழகத்தில் மூன்றாவது அணியை அமைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக வரும் செய்திகள்?

அ.தி.மு.க. தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். சட்டமன்றத்திற்குள் இரட்டை இலக்கத்தில் உறுப்பினர்களை அனுப்ப நினைக்கும் பா.ஜ.க. இப்போது சவாரி செய்வதற்கு வசதியாக இருப்பவர்கள் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இருவரும்தான். இந்த நிலையில், மூன்றாவது அணி என்கிற மண்குதிரையில் சவாரி செய்ய நினைப்பார்களா?

mm

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14

சென்னை சூப்பர் கிங்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஏலத்தில் கிடைத்த பொருட்கள், பயன்படும் வரை லாபம். அதற்குப்பிறகு பாலீஷ் போட்டு ஷோகேஸில் வைக்க வேண்டியதுதான்.

nkn311020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe