Advertisment

மாவலி பதில்கள்!

mm

ஸ்டெர்லிஸ் நடராஜன், கூடுவாஞ்சேரி

கொரோனா யுகத்தில் மாவலி நலமா?

மாவலியும் மானுட சமுத்திரத்தின் ஒரு துளி. உலகப் பேரிடரான கொரோனாவின் தாக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு துளியிலும் தெரியும்.

Advertisment

மேட்டுப்பாளையம் மனோகர்- கோவை 14

இந்தியாவில் மதசார்பற்றக் கொள்கை வருங்காலத்தில் நிலைநாட்டப்படுமா?

மதசார்பற்றக் கொள்கை என்று சொன்னாலும் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்பட்டது மதநல்லிணக்க கொள்கைதான். தங்கள் மதம் சார்ந்த வழிபாடுகளை- பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் மற்றவர் களின் மத நம்பிக்கைகளுக்கும் மரியாதை தருவது வழக்கம். ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வதும் இந்த மண்ணின் சிறப்பு. எதிர்காலத்தில் இத்தகைய பண்பாடு இருக்குமா என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்திருக்கிறது மதவெறி அரசியல்.

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

தொண்டர்கள், ரசிகர்கள்-யாருடையது அதீத வெறித்த

ஸ்டெர்லிஸ் நடராஜன், கூடுவாஞ்சேரி

கொரோனா யுகத்தில் மாவலி நலமா?

மாவலியும் மானுட சமுத்திரத்தின் ஒரு துளி. உலகப் பேரிடரான கொரோனாவின் தாக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு துளியிலும் தெரியும்.

Advertisment

மேட்டுப்பாளையம் மனோகர்- கோவை 14

இந்தியாவில் மதசார்பற்றக் கொள்கை வருங்காலத்தில் நிலைநாட்டப்படுமா?

மதசார்பற்றக் கொள்கை என்று சொன்னாலும் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்பட்டது மதநல்லிணக்க கொள்கைதான். தங்கள் மதம் சார்ந்த வழிபாடுகளை- பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் மற்றவர் களின் மத நம்பிக்கைகளுக்கும் மரியாதை தருவது வழக்கம். ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வதும் இந்த மண்ணின் சிறப்பு. எதிர்காலத்தில் இத்தகைய பண்பாடு இருக்குமா என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்திருக்கிறது மதவெறி அரசியல்.

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

தொண்டர்கள், ரசிகர்கள்-யாருடையது அதீத வெறித்தனம்?

தொண்டர்கள் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள். ரசிகர்கள் என்பவர்கள் அன் பினை வெளிப்படுத்தக் கூடியவர் கள். இரண்டின் அளவும் மாறு படும்போது வெறித்தனமாக மாறு கிறது. தனக்குப் பிடித்த நடிகர் திரையில் வரும்போது சில்லறை யை சிதற விடுவதும், அவருக்குப் போட்டியாக உள்ள நடிகர் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அதில் சாணி அடிப்பதையும் தகுதிகளாக ஆக்கிக்கொண்டார்கள் ரசிகர்கள். அத்தகைய தகுதியுள்ள ரசிகர்களே, பின்னர் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும்போது தொண்டர்கள் ஆனார்கள். கட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள். தேர்தலில் நின்றார்கள். சொந்தக் கட்சியில் உள்ளவர்கள் மீதே போட்டா போட்டியில் ஆசிட் அடித்தார்கள். சாணி அடிப்பதும், ஆசிட் அடிப்பதும் எம்.எல்.ஏ. -எம்.பி.யாகி அமைச்சர்கள் பதவிப் பெறுவதற்குமான அத்தாட்சிப் பத்திரமாக மாறுவதால் இரண்டு தரப்பினரின் வெறித்தனமும் அதீதமாகிறது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

"தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, ஆளுநர் ஆட்சியா' என்று டாக்டர் ராமதாஸ் கேட்கிறாரே?

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மூத்த அரசியல் தலைவர். கள நிலவரத்தைக் கணிக்கக் கூடியவர். அவருடைய கேள்விகள்- புள்ளி விவரங்கள்-கருத்துகள் எல்லாமே ஏதேனும் ஒரு குறிப்பை மக்களுக்கு உணர்த்தக்கூடியவை. தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற போதே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைத் தாண்டி, தன்னிச்சையாக தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். அப்போது இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சியான தி.மு.க. போராட்டம் நடத்தியது. அதன்பின்னர், 7 பேர் விடுதலைத் தீர்மானம் தொடங்கி 7.5% இடஒதுக்கீடு வரை ஆளுநர் மாளிகையின் மெத்தனம் அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் நிலையிலும், பா.ம.க .நிறுவனர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றால், மக்களாட்சியா- ஆளுநர் ஆட்சியா என்பதைத் தாண்டி, அடுத்த ஆட்சி யாருடையதாக இருக்கும் என்கிற சிந்தனை யும் டாக்டரின் கேள்வியில் உள்ளது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அவர் வருவாரா- மாட்டாரா? வந்தால் தனிக் கட்சியா? பா.ஜ.க.வா?

"குருதிப்புனல்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறதாம். அது வெளியான தீபாவளியில் வெளியானதுதான் "முத்து' திரைப்படமும். வெற்றிகரமாக ஓடிய முத்து திரைப்படத்தின் ஒரு பாடலில், ‘"எந்தக்கட்சி... எந்தக்கட்சி... நம்ம கட்சி?'’ என்ற வரி வரும். அதற்கு ஹீரோ, ‘"கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு'’ என்று பாடுவார். கால்நூற்றாண்டாக காலத்தின் கையில் இருக்கும் அந்தக் கட்சி இன்னமும் அவர் கைக்கு வந்து சேரவில்லையாம். அது வந்ததும், அவரும் வருவார்... காத்திருக்கவும்.

mm

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

முகமது ரபி-டி.எம்.எஸ்., கிஷோர் குமார்-எஸ்.பி.பி. குரல்களை ஒப்பிடுங்களேன்.

"ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம்' என்பது போல ஒவ்வொருவரின் குரலும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டவை. முகமது ரபியின் சிறப்பாக சொல்லப்பட்டது என்ன வென்றால், அவர் காலத்தில் இந்தியின் பிரபல நடிகர் களின் உதடசைவு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நடித்த காட்சிகள் மூலம் உணர்ந்து, அதற்கேற்ப பின்னணி பாடினார் என்பதாகும். டி.எம்.எஸ். அவர் காலத்து இரண்டு பெரும் நட்சத்திரங் களான எம்.ஜி.ஆர்- சிவாஜி ஆகியோருக்கேற்ப தன் குரலைப் பயன்படுத்தினார். அதற்கு வாயசைத்த நடிகர்களின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. கிஷோர் குமாரின் குரல் ராஜேஷ்கண்ணா, தர்மேந்திரா, அமிதாப் பச்சன் என பெரிய ஸ்டார்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்தது. எஸ்.பி.பி.யும் தனது குரலால் ரஜினி, கமல், மோகன், கார்த்திக் என பல ஹீரோக்களின் படப் பாடல்களை சிறப்பாகத் தந்தார். அதுமட்டுமல்ல, இந்தித் திரைப்பட ஆண் பாடகர்கள் அந்தளவு இங்கே புகழ்பெறவில்லை. எஸ்.பி.பி. இந்தியிலும் பாடி வெற்றிக்கொடி நாட்டினார்.

nkn281020
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe