Advertisment

மாவலி பதில்கள்!

dd

எஸ்.மோகன், கோவில்பட்டி

ஜெயிலில் இருந்து சசிகலா வந்ததும், ஜெயலலிதா இடத்தை நிரப்புவாரா?

யாருடைய இடத்தையும் யாரும் நிரப்புவதில்லை. அவரவருக்கான செயல்பாடுகளால் தங்களுக்கான இடத்தை அடைய முடியும். அத்துடன், தற்போது ஜெயலலிதாவின் இடம் என்பது மெரினா கடற்கரை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை 72

பா.ஜ.க.வுக்கு அ.தி. மு.க. 60 தொகுதிகளைத் தாரை வார்க்குமா?

Advertisment

1996-ல் தனித்து நின்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்றார் பா.ஜ.க. வேட் பாளர் வேலாயுதம். அதன் பிறகு, 2001 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 தொகுதிகளை வென்றது. அதில் ஹெச்.ராஜாவும் ஒரு எம்.எல்.ஏ. அதன்பிறகு, 2006, 2011, 2016 என எந்தத் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. தற்போது, இரட்டை இலக்கத் துடன் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் திட்டம். அதற்கேற்ப அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜன

எஸ்.மோகன், கோவில்பட்டி

ஜெயிலில் இருந்து சசிகலா வந்ததும், ஜெயலலிதா இடத்தை நிரப்புவாரா?

யாருடைய இடத்தையும் யாரும் நிரப்புவதில்லை. அவரவருக்கான செயல்பாடுகளால் தங்களுக்கான இடத்தை அடைய முடியும். அத்துடன், தற்போது ஜெயலலிதாவின் இடம் என்பது மெரினா கடற்கரை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை 72

பா.ஜ.க.வுக்கு அ.தி. மு.க. 60 தொகுதிகளைத் தாரை வார்க்குமா?

Advertisment

1996-ல் தனித்து நின்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்றார் பா.ஜ.க. வேட் பாளர் வேலாயுதம். அதன் பிறகு, 2001 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 தொகுதிகளை வென்றது. அதில் ஹெச்.ராஜாவும் ஒரு எம்.எல்.ஏ. அதன்பிறகு, 2006, 2011, 2016 என எந்தத் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. தற்போது, இரட்டை இலக்கத் துடன் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் திட்டம். அதற்கேற்ப அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகள் பற்றி பா.ஜ.க. தலைமை கவலைப்படுவதில்லை. ஓர் எம்.எல்.ஏ. கூட இல்லாமல் அ.தி.மு.க. அரசை அப்போ லோ மருத்துவமனையிலிருந்தே ஆட்டி வைக்கும் பா.ஜ.க., இரட்டை இலக்கத்தில் வென்றால், எதிர் காலத்தில் தமிழக அரசியலைத் தன தாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறது. அ.தி.மு.க தலைமை அறிந்தும் அறியாதது போல இருக்கிறது. அதன் நிலைமை அப்படி.

அ.குணசேகரன், புவனகிரி

சிதம்பரம் அருகே புவனகிரி வட்டத்தில் உள்ள தெற்குத்திட்டை கிராம தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு நேர்ந்த அவமானத்திற்கு யார் காரணம்?

ரத்தத்திலேயே ஊறியிருக்கும் சாதி உணர்வும் -அந்த சாதி உணர்வின் அடிப்படையில் கிராமங்களில் கொஞ்சமும் மாறாமல் இருக்கும் சமுதாய அமைப்பும்தான்.

அ.யாழினி பர்வதம், சென்னை-78

Advertisment

முதல்வர் இ.பி.எஸ். தாய் மறைவுக்கு அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதியது பற்றி?

ஒருவர் இறந்துவிட்டால் அதன்பிறகு அவரது நினைவைப் போற்றும் வகையில் எத்தனையோ சடங்குகள் நடத்தப்படுவது மரபு. மத்திய பா.ஜ.க. அரசு எல்லா மரபுகளுக்கும், சடங்கு மட்டுமே செய்கின்ற அரசாக இருக்கிறது. ஒரு மாநில முதல்வரின் குடும்பத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வுக்கு இரங்கல் செய்தி அனுப்பும்போது, குறைந்த பட்சம் அந்த முதல்வருக்கா வது அதில் உள்ள வரிகளின் அர்த்தம் புரியவேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரிக மரபுகூட இல்லா மல், இறப்பு நேரத்திலும் ஆணவத்தை வெளிப் படுத்துவதுபோல அமைந் துள்ளது அமித்ஷாவின் இந்தி இரங்கல் கடிதம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"குடியுரிமைச் சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். அவர்களெல்லாம் தீவிரவாதிகள்' என்கிறாரே நடிகை கங்கனா ரனாவத்?

"கருடா சவுக்கியமா' எனக் கேட்ட பரமசிவன் கழுத்து பாம்புபோல அதிகாரப் பாதுகாப்பு சூழ இருக்கிறார் கங்கனா. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தவர்கள், இந்த நாட்டில் பன்னெடுங் காலமாக வாழ்கின்ற சிறுபான்மை சமுதா யத்து மக்கள். குறிப்பாக, முஸ்லிம்கள். விவசாய சட்டங்களுக்கு எதிராக மிகப் பெரும் போராட்டத்தை டெல்லி நோக்கி நடத்தியவர்களில் பெரும் பான்மையானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். டர்பன் கட்டிய அவர்கள் சீக்கிய சமுதாயத்தினர். குடியுரி மைத் திருத்தச் சட் டப் போராட்டத் திற்கும் அவர்களுக் கும் தொடர்பில்லை. செக்கு எது -சிவலிங்கம் எது எனத் தெரியாமல் எல்லா வற்றுக்கும் தீவிரவாத முத்திரை குத்தும் பா.ஜ.க.வின் போக்கினை, அதன் பாதுகாப்பில் வாழ்க்கை நடத்தும் கங்கனாவும் பின்பற்றுகிறார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ரூ1.10 லட்சம் கோடி கடன் வாங்கு கிறதாமே மத்திய அரசு?

வரி என்பது வருவாய். கடன் என்பது வட்டி யுடன் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான வரி வருவாயை ஈட்டிவந்த நிலையில், அதனை ஒருங்கிணைத்து -முறைப்படுத்துவதாகக் கூறி ஜி.எஸ்.டி. மூலம் அதிகாரத்தைப் பறித்துக்கொண்ட மத்திய அரசு, இப்போது மாநில அரசுகளைக் கடனில் தள்ளி ஈட்டிக்காரன் போல செயல்படுகிறது.

த.சுரேஷ், நாகர்கோவில்

"பா.ஜ.க.வில் இருந்துகொண்டு, தான் ஒரு பெரியார்வாதியாக இருப் பேன்' என்று கூறிய குஷ்பு வின் கருத்தை, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

தேசியத் தலைவர் களுக்குத் தேவை, குஷ்பு மூலமாகவேனும் தாமரைப் பூவைத் தமிழ்நாட்டில் மலர வைப்பது. தற்போது காங் கிரஸ் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசர், ஏற்கனவே பா.ஜ.க. அரசில் இணை யமைச்சராக இருந்தபோதும் எம்.ஜி.ஆர். விசுவாசியாகவே இருந்தார். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருநாவுக் கரசருக்கு எம்.ஜி.ஆர். என் றால், குஷ்புவுக்கு பெரியார். அப்புறம் பா.ஜ.க.வில்தான், "அது அவரது சொந்தக் கருத்து' என்று விளக்கம் தரும் வழக்கமும் உள்ளதே!

mm

சு.வெங்கடேஷ், கோட்டயம்

அமெரிக்க துணை ஜனாதிபதியாக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் வெற்றி பெறுவாரா?

அது நவம்பரில் தெரியும். உலகெங்கும் வலதுசாரிகள் வெற்றிபெறும் இன்றைய சூழலில், நியூசிலாந்தில் இடதுசாரியான பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், ஈழத் தமிழ்ப் பெண்மணி வனுஷா நியூசிலாந்து எம்.பி.யாகியிருப்பதும் கவனத்திற்குரியது.

nkn241020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe