Advertisment

மாவலி பதில்கள்!

ss

அ.குணசேகரன், புவனகிரி

நாளேடுகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் நடுநிலையாக எப்போது செயல்படும்?

நடுநிலை என்று மோசடி செய்ய வேண்டியதில்லை. நியாயத்தின் குரலாக இருக்க வேண்டியது அவசியம். அது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

நித்திலா, தேவதானப்பட்டி

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மரணம்?

Advertisment

dd

சமூக நீதி அரசியலின் முகமாக விளங்கியவர்-தலித் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்து நெருக்கடிநிலையும் -மிசா சிறைவாசமுமே அவரைப் பொதுவாழ்வில் அடையாளம் காட்டின. எமர் ஜென்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் கின்னஸ் சாதனை அளவுக்கான வாக்குகள் வித்தியாசத்துடன் ராம்விலாஸ் பாஸ்வான் வெற்றி பெற்றார். வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் சமூக நீதித்துறை அமைச்சராக அவர் இருந்தபோதுதான், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசுப் பணிகளிலான இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படு

அ.குணசேகரன், புவனகிரி

நாளேடுகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் நடுநிலையாக எப்போது செயல்படும்?

நடுநிலை என்று மோசடி செய்ய வேண்டியதில்லை. நியாயத்தின் குரலாக இருக்க வேண்டியது அவசியம். அது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

நித்திலா, தேவதானப்பட்டி

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மரணம்?

Advertisment

dd

சமூக நீதி அரசியலின் முகமாக விளங்கியவர்-தலித் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்து நெருக்கடிநிலையும் -மிசா சிறைவாசமுமே அவரைப் பொதுவாழ்வில் அடையாளம் காட்டின. எமர் ஜென்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் கின்னஸ் சாதனை அளவுக்கான வாக்குகள் வித்தியாசத்துடன் ராம்விலாஸ் பாஸ்வான் வெற்றி பெற்றார். வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் சமூக நீதித்துறை அமைச்சராக அவர் இருந்தபோதுதான், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசுப் பணிகளிலான இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கும் நல்ல நண்பர். ஈழத்தமிழர் நலனில் அக்கறைகொண்ட வடஇந்திய அரசியல்வாதி. மக்களுக்குப் பயன்படும் மருந்துகளின் விலைக் குறைப்பிலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பதைத் தடுப்பதிலும் பாஸ்வானின் பங்களிப்பு முக்கியமானது. அவரது சொந்த மாநிலமான பீகாரில் நடந்த அரசியல் -அதிகாரப் போட்டியில் லாலு-நித்தீஷ் ஆகியோரை எதிர்த்து தனிக்கட்சி கண்டு, பா.ஜ.க. பக்கம் சாயவேண்டிய நிலைக்கு ஆளானார் பாஸ்வான். சந்தர்ப்பவச அரசியலைக் கடந்து, சமூகநீதிக் களத்தில் அவர் சாதித்தவை என்றும் நினைவில் இருக்கும்.

மா.சந்திரேசகர், மேட்டுமகாதானபுரம்

"இந்தி மொழியிலேயே போதிய தேர்ச்சி பெறாத வட மாநிலத்தவர்கள், தமிழ்த் தேர்வில் வென்று தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் சேர்ந்தது எப்படி?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனரே?

Advertisment

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைந்துவரும் நிலையில், அதிலும் வட மாநிலத்தவர்கள் நுழைய வழி செய்த மத்திய-மாநில அரசுகளின் அரசாணைகளும், அதனடிப்படையில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நடத்திவரும் மோசடிகளும்தான்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கொரோனா எனக்கு கடவுள் கொடுத்த பரிசு' என்கிறாரே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்?

"வரும் ஜனாதிபதி தேர்தலில் கடவுள் எங்களுக்கு வேறு நல்ல பரிசு தருவார்' என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்களாம் அமெரிக்க மக்கள்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

தி.மு.க. தலைவர்கள் தென்மாவட்டங்களில் நின்று ஜெயித்ததில்லையாமே?

அண்ணா காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி யிலும் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலி லும் போட்டியிட்டவர். கலைஞர் குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறை முகம், சேப்பாக்கம், திருவாரூர் ஆகிய தொகுதி களில் நின்று 13 முறை வென்றவர். மு.க.ஸ்டாலின் ஆயிரம்விளக்கு, கொளத்தூர் இரண்டு தொகுதி களில் களம் கண்டவர். இதில் எதுவுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவை அல்ல. தி.மு.க.வில் இருந்தவரை சென்னை பரங்கிமலை (ஆலந்தூர்) தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஜி.ஆர், தனிக்கட்சி தொடங்கியதும் அருப்புக்கோட்டை, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். மூன்றுமே தென்மாவட் டம்தான். அவர் மனைவி ஜானகி அதே ஆண்டிப் பட்டியில் போட்டியிட்டுத் தோற்றார். ஜெயலலிதா போடி, பர்கூர், ஆண்டிப்பட்டி, திருவரங்கம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில் களம் கண்டவர். இதில் போடியும், ஆண்டிப்பட்டியும் தென் மாவட்டமான தேனி மாவட்டத் தொகுதிகள். "அ.தி.மு.க. தலைவர்கள் ஏன் சென்னையில் போட்டி யிடுவதில்லை' எனக் கேள்வி எழுந்த நிலையில்... ஆர்.கே.நகரில் ஜெ. களமிறங்கி வென்றார். "தி.மு.க. தலைவர்கள் தென் மாவட்டங்களில் போட்டியிடுவ தில்லை' என்ற நிலையில், தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் கலைஞரின் மகள் கனிமொழி. தேர்தல் களங்கள், வெற்றிக் கணக்குடன் காலத்திற் கேற்ப மாறுகின்றன.

oo

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

காங்கிரஸ் தலைமைக்கு பிரியங்கா வர வாய்ப்புள்ளதா?

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா துணிச்சலாக மேற்கொண்ட பயணம், அவரது பாட்டியை நினைவூட்டுவதாக இருந்தது. ஆனால், உ.பி.யில் காங்கிரஸ் கட்சி பலமாக இல்லை. பல மாநிலங்களிலும் அழுத்தமாகக் கால் ஊன்றும் நிலை காங்கிரசுக்கு மீண்டும் வந்தால் தலையாக சோனியா, ராகுல், பிரியங்கா யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

போதையின் கோரப்பிடியில் பாலிவுட்டே பயணம் செய்துள்ளதே?

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பாலிவுட் மட்டும்தானா போதையில் பயணிக்கிறது? சிக்குபவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் யோக்கியர்களாகிவிடுகிறார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

மகாத்மா காந்தியை நம்பித்தான் இந்தியாவுடன் இணைந்தோம். மோடி இந்தியாவில் இருப்போம் என காஷ்மீரிகள் நினைக்கவில்லை என்று பருக் அப்துல்லா கூறியுள்ளாரே?

ff

காந்தியின் அன்பை நம்பினார்கள். நேருவின் வாக்குறுதியை நம்பினார்கள். காந்தி சுட்டுக் கொல்லப்படுவார் என்பதையும் அதன்பிறகு, நேருவின் உறுதிமொழிகளை சிதறடிக்கும் ஆட்சி அமையும் என்பதையும் நாடே எதிர்பார்க்க வில்லை.

nkn171020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe