வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

திறமை-அனுபவம்-அதிர்ஷ்டம் இவை மூன்றும் தோற்பது எப்போது?

திறமை சில நேரங்களில் அனுபவத்திடம் தோற்றுப் போகும். அனுபவம் சில நேரம் அதிர்ஷ்டத்திடம் தோற்றுப் போகும். தோல்வியையும் அனுபவமாக எடுத்துக் கொண்டு, திறமையை சரியாகப் பயன்படுத்தும்போது வெற்றித் தேடி வரும்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

ஜெ.யின் மரணப் போராட்டம்- எஸ்.பி.பி.யின் மரணப் போராட்டம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுமே அவர்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் தாங்க முடியாத சோக நிகழ்வுகளே! கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் எஸ்.பி.பி. தனக்கு லேசான பாதிப்பு என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டுவிட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 50 நாட்கள் கடந்து அவரது மரணச் செய்திதான் வெளியானது என்பதை ரசிகர்களால் தாங்க முடியவில்லை. முதல்நாள் வரை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முதல்வராக இருந்த ஜெயலலிதா. திடீரென நள்ளிரவு நேரத்தில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வந்தது. அதன்பிறகு ஏறத்தாழ 75 நாட்கள் அவர் என்ன நிலையில் இருந்தார் என்பதற்கான எந்த வீடியோ- புகைப்பட ஆதாரமும் இல்லாமல் தனியார் மருத்துவமனையிலிருந்து அவரது சவப் பெட்டிதான் வெளியே வந்தது. ஜெ எப்படி இறந்தார் என்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் மீதும் சவப் பெட்டி ஆணிகள் அறையப்பட்டுள்ளன.

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நேர்மையான பிரதமருக்கு நாடு ஏங்குகிறது என்கிறாரே ராகுல்காந்தி?

ராகுலின் கொள்ளுத் தாத்தா, பாட்டி உள்பட எல்லா பிரதமர்களும் எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் நேர்மையானவர்களாக இருந்ததில்லை. அதேநேரத்தில், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்களாக வும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற உண்மையான அக்கறை கொண்டவர்களாகவும் பல பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். கொடிய கொரோனா நேரத்திலும் கைத்தட் டுங்கள்- விளக்கு ஏற்றுங்கள் என்று சொல்லக்கூடிய பிரதமர்களை இதற்குமுன் இந்தியா கண்டதில்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி களின் கருத்துகளைக் கூட மதிக்காமல், அவர்களை வெளியேறச் செய்து மசோதாக்களை அவசர அவசரமாக தீர்மானங்களை நிறைவேற் றும் ஒரு பிரதமர் தலைமையிலான ஆட்சியையும் இந்தியா இது வரை பார்த்ததில்லை. இது இன்றைய பிரதமரின் பலவீனம் அல்ல. பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைக் கூட தேர்தலில் பெறமுடியாமல் போன காங்கிரசின் பலவீனம். ராகுல் காந்தி முதலில் ஏங்க வேண்டியது தன் கட்சியின் நிலைக்காகத்தான். அதை சீர்ப்படுத்தாத வரை ராகுல் மட்டுமல்ல, இந்தியாவே ஏங்கிக் கொண்டுதான் இருக்கும்.

நித்திலா, தேவதானப்பட்டி

தி.மு.கவின் புதிய கொ.ப.செ.க்கள் எப்படி?

கலகலப்பான பட்டிமன்ற நடுவராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைகள் வழியே மக்களுக்கு அறிமுகமாகி, தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட திண்டுக்கல் லியோனி, பாமர மக்களிடமும் கருத்துகளைப் பதிய வைக்கும் ஆற்றல் கொண்டவர். முனை வரும் முன்னாள் துணை வேந்தருமான சபாபதி மோகன் ஆய்வுப்பூர்வ மான தரவுகளுடன் அறிவார்ந்த தளத்தில் நடக்கும் வாதப் போர் களில் வல்லமையுடன் செயல்படக்கூடியவர். இருவரும் கிடைத்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்- இருவருக்கும் எத்தகைய வாய்ப்புகள் தலைமை யால் வழங்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது கொ.ப.செ.வின் பணி.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

2000 ரூபாய் நோட்டுகளை காண முடியவில்லையே?

தேர்தல் நேரத்தில் தேடி வரலாம்.

அ.குணசேகர், புவனகிரி

காமராஜர், கக்கன் போன்ற நேர்மையான தலைவர்கள் எப்போது இனி தமிழக அரசியலில்?

n

சுதந்திரப் போராட்ட தியாகியான நல்லகண்ணு என்ற நேர்மைமிகு கம்யூனிஸ்ட் தலைவர் தேர்தல் களத்தில் நின்றபோது தமிழகம் அவரை வெற்றி பெறவைத்ததா? செங்கோட்டையன் என்ற செல்வாக்கான அமைச்சரை எதிர்த்து நின்று வென்ற தி.மு.கவைச் சேர்ந்த கோபி வெங்கிடு என்பவர் கடைசிவரை பெட்டிக்கடை நடத்தியே வாழ்க்கை நடத்தி மறைந்தார் என்பதை தமிழகம் அறியுமா? எடப்பாடி பழனிச்சாமியை ராஜதந்திரி என நினைக்கும் அரசியல் களமும் அதற்கேற்ற மக்களும் உள்ள மாநிலத்தில் காமராஜர், கக்கன் என்ற நேர்மையாளர்களை ஏன் நினைவுபடுத்துகிறீர்கள்?

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று சுற்றிப்பார்த்தது உண்டா?

jj

ஜெயலலிதா-சசிகலா இருவருமே அந்த எஸ்டேட்டை முழுமையாக சுற்றிப் பார்த்திருப்பார்களா எனத் தெரியாது. அவர்கள் அந்த எஸ்டேட்டுக்கு சென்றுவிட்டால், நீலகிரிவாசிகளோ சுற்றுலாப் பயணிகளோ அந்த பக்கம்கூட செல்ல முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்படும். அதுமட்டுமல்ல, கொடநாடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதி மக்களின் பொதுவழியை அடைத்து, அவர்களையே பல கிலோமீட்டர்கள் சுற்றிப் போகச் செய்தவர்தான் ஜெயலலிதா.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மறைவு?

dd

வங்கிகளை எளிய மக்களின் நண்பனாக மாற்றியவர். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு வங்கிப்பணிகளில் அளிக்கப்பட வேண்டிய இடங்கள் காலியாக இருப்பதைக் கண்டறிந்து, இந்தியன் வங்கிக் கிளைகளிலும் நிர்வாக அலுவலகங்களிலும் விளையாட்டு வீரர்களுக்குப் பணி வழங்கியவர். விளையாட்டுத் துறைக்கென சுந்தரம் என்ற அதிகாரியை நியமித்து, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமிகு பயிற்சி வழங்கச் செய்தார். கோபாலகிருஷ்ணன் காலத்தில், இந்தியன் வங்கியைச் சேர்ந்த பல வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.