Advertisment

மாவலி பதில்கள்!

mm

வி.எஸ்.ஆர்.குமார், செக்கானூரணி

தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகனின் வேகம் எப்படி இருக்கும்?

Advertisment

வேகத்தைவிட நிதானமான முடிவுகள் எடுக்கும் திறமைதான் மூத்த நிர்வாகிக்குத் தேவை. தி.மு.க.வின் பொதுச்செயலாளர்களாக இருந்த அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் மூவரும் நிதானமான செயல்பாடுகளால் அந்தப் பதவியை அலங்கரித்தவர்கள்.

வண்ணை கணேசன், சென்னை 110

அரசியலில் நகைச்சுவையாகப் பேசுபவர் யார்?

நகைச்சுவையைப் பேச்சிற்கிடையே வெளிப்படுத்திய அரசியல்வாதிகள் பலர் உண்டு. இப்போது பேச்சை நகைப்பிற் கிடமாக ஆக்கிவிட்ட அரசியல்வாதிகளே அதிகம் தெரிவிகிறார்கள். குறிப்பாக, அமைச்சர்களின் பேட்டிகள்.

kk

தூயா, நெய்வேலி

Advertisment

ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். ஜெயலலிதாவாக நடிப்பவருக்கும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்களே?

விவசாயிகள் டெல்லியில் போராடும்போது அவர்களுக்கு நேரம் ஒதுக்க இயலாத பிரதமர், நடிகைக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். வெளிமாநிலத் தொ

வி.எஸ்.ஆர்.குமார், செக்கானூரணி

தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகனின் வேகம் எப்படி இருக்கும்?

Advertisment

வேகத்தைவிட நிதானமான முடிவுகள் எடுக்கும் திறமைதான் மூத்த நிர்வாகிக்குத் தேவை. தி.மு.க.வின் பொதுச்செயலாளர்களாக இருந்த அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் மூவரும் நிதானமான செயல்பாடுகளால் அந்தப் பதவியை அலங்கரித்தவர்கள்.

வண்ணை கணேசன், சென்னை 110

அரசியலில் நகைச்சுவையாகப் பேசுபவர் யார்?

நகைச்சுவையைப் பேச்சிற்கிடையே வெளிப்படுத்திய அரசியல்வாதிகள் பலர் உண்டு. இப்போது பேச்சை நகைப்பிற் கிடமாக ஆக்கிவிட்ட அரசியல்வாதிகளே அதிகம் தெரிவிகிறார்கள். குறிப்பாக, அமைச்சர்களின் பேட்டிகள்.

kk

தூயா, நெய்வேலி

Advertisment

ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். ஜெயலலிதாவாக நடிப்பவருக்கும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்களே?

விவசாயிகள் டெல்லியில் போராடும்போது அவர்களுக்கு நேரம் ஒதுக்க இயலாத பிரதமர், நடிகைக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். வெளிமாநிலத் தொழிலாளர்கள் பல மைல்கள் நடந்தே பயணிக்க வேண்டிய அவலத்தில் அவர்களுக்கு உணவு வழங்கக் கூட அக்கறை காட்டாத அரசு, தன்னு டைய பழைய பங்காளியான சிவசேனா கட்சியுடனான உரசலுக்காகவும், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் மக்கள் வரிப்பணத்தில் கங்கனா ரணவத்துக்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கிறது. ஜெ.வாக கங்கனா ரணவத் நடிக்கும் ஷூட்டிங்தான் நடைபெறுகிறதோ என நினைக்கும் அளவுக்கு, அச்சு அசலாக அதே அளவில் பாதுகாப்பு படையினர் சுற்றி நிற்க, அதே உடல்மொழியுடன் நடந்து வருகிறார் கங்கனா. மோடிக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டவ ருக்கு இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? வாஜ்பாய் காலத்தில் ஹேம மாலினி-சௌந்தர்யா எனத் தொடங்கி, மோடி காலத்தில் கங்கனா-நக்மா என அபாரமாக வளர்ந்திருக்கிறது பா.ஜ.க.

தனிசிகா எத்திராஜூலு, விருகம்பாக்கம்

மாணவர்களின் அரியர்ஸ் தேர்வு ஆல்பாஸ் அவர்களின் வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா?

அதை அப்புறம் பார்க்கலாம்... எடப்பாடி சொன்னபடி ஆல் பாஸ் உண்டா? அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சொன்னபடி தேர்வு எழுதித் தான் ஆகணுமா? எனக் கேட்கிறார்கள் இன்ஜினியர் மாணவர்கள்.

எம்.எம்.மயில்வாகனன், சென்னை

பகுத்தறிவு பேசும் தி.மு.க.வினர், மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்காக கோவையில் ஒரு கோவிலில் பூசை செய்திருக்கிறார்களே?

அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினால் என்பது கலைஞர் காலத்தில் தி.மு.க.வின் குரல். நாங்களும் இந்துக்கள் தான் என்பது மு.க.ஸ்டாலின் காலத்தில் தி.மு.கவின் குரல். இப்பவும் அர்ச்சகரிடம் கொடுத்துதான் பூசை செய்ய முடியுமே தவிர, தாங்களே கருவறையில் சென்று அர்ச்சனை செய்யமுடியாது என்பதை தி.மு.கவினர் உணர்வதற்கு பகுத்தறிவு தேவையில்லை, சிற்றறிவே போதும்.

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

சமூக வலைத்தளங்களை இங்கே ஒரு சிலர் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கையாள்கிறார்களே?

"நாம் தமிழர்' அல்லவோ!

____________

தமிழி!

எஸ்.கதிரேசன், பேராணம்பட்டு

தமிழகத்தில் பாவாடை-தாவணி கலாச்சாரம் அழிந்துவிட்டதா?

உடை என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது. 50 ஆண்டுகளுக்கு முன் அணிந்த உடையையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் அணிந்திருப்பார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. ஆதிமனிதர்களுக்கு, பிறந்தநாள் உடைதான் பொதுவானதாக இருந்தது. பின்னர், இலை-தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்கள் இவற்றை ஆணும் பெண்ணும் உடையாக்கிக் கொண்டனர். வேட்டை சமூகத்திலிருந்து வேளாண்மை நோக்கி வந்தபோது, நூலாடைகள் அணியும் வழக்கம் மெல்ல மெல்ல பரவியது. தொல்தமிழர்கள் பருத்தியில் ஆன உடையை அணிந்திருந்தார் கள் என்பதற்கான சான்றுகள் சிந்து சமவெளி நாகரிக அகழாய்வுகள் முதல் பலவற்றிலும் கிடைத்துள்ளன. பட்டுடை என்பது அடுத்தகட்ட நாகரிகமாக வெளிப்பட்டது. அத்துடன், பலவகை ஆபரணங்களும் சேர்ந்தன. அப்போதும்கூட, இந்தக்காலப் புடவை, வேட்டி, சட்டை போன்ற உடைகள் உடனடியாக வந்துவிடவில்லை. மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியை யும் மறைப்பதற்கேற்ற வகையில் உடைகள் இருந்தன. ஆண்களைப் பொறுத்தவரை இடுப்பில் அணியும் ஆடையே முக்கியமானதாகும். பெண்கள் இடுப்பில் உடுத்துவதுடன், மேற்பகுதியில் கச்சையும் அணிந்தனர். தையல் கலை வளர வளர உடையலங்காரங்களும் மாறுபட்டன. அதன் தொடர்ச்சியாக புடவை, வேட்டி, சட்டை, பாவாடை, தாவணி போன்ற உடைகள் நமக்கு ஏற்றதாக அமைந்தன. கடந்த 30 ஆண்டுகளில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களும், பெண்களின் வேலை, பயணம், வாகனம் ஓட்டுதல் போன்றவற்றிற்கு வசதியாக உடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பாவாடை-தாவணி கலாச்சாரம் மாறிவிட்டதா எனக் கவலைப்படும் பலரும் வேட்டியைக் கட்டிக்கவேண்டாம், ஒட்டிக்கிட்டா போதும் என்ற மாற்றத்தை எளிதாக ஏற்றுக் கொள்கிறோம். அதுவும் பொங்கல், தீபாவளி, திருமணம் போன்ற நாட்களில் செல்ஃபி எடுக்கும் நேரம் வரைதான் இந்த உடை. அப்புறம் அவரவர் வசதிக்கான உடைகள்தான். "பாவாடை-தாவணியில் பார்த்த உருவமா' எனப் பாடல் எழுதப்பட்ட காலத்திலேயே கூட, பெண்களுக்கான புதிய புதிய உடைகள் வந்துவிட்டன. "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே' என்ற பாட்டுக்காக உழைத்த ஆண் கலைஞர்கள் பலரும் பேண்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்தவர்கள்தான். பண்பாடு என்பது ஆண்-பெண் இரு வருக்குமானது. அதில் ஒரு தரப்பை பற்றி மட்டுமே கவலைப்படுவது நம் வழக்கமாகிவிட்டது.

nkn160920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe