Advertisment

மாவலி பதில்கள்!

dd

பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

பணம் ஒன்று மட்டும் மனிதனின் வாழ்க்கையை பூர்த்தி செய்து விடுகிறதா?

வாழ்க்கை ஒரு பயணம் என்பதை உணர்ந்தோர், அந்தப் பயணம் என்ற சொல்லுக்குள்ளேயே அடங்கியுள்ள பணம் பற்றித் தெளிவாக அறிந்திருப்பர். பயணம் எங்கே நிறைவடையும் என்பதை உணராதோர் பணம் மட்டுமே வாழ்க்கை என நினைத்திருப்பர்.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவை தற்போதை எலக்ட்ரானிக் யுகத்தில், மத்திய பாஜக அரசும், அகமதாபாத் போலீசாரும் கைது செய்யாமல் விட்டிருப்பது ஏன்?

Advertisment

பணம் பாதாளம் வரை பாயும். காசு கைலாசா வரை செல்லும். அதுவும், நித்தியானந்தா வெளியிட்டுள்ள கரன்சிக்குப் பெயர் ‘பொற்காசு’. அதன்முன் அரசும் சட்டமும் தூசு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

1972-ம் ஆண்டின் வனவிலங்கு சட்டப்படி, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு தவறாக இருந்த ஒரு விஷயம் இப்பொழுது மோடி விஷயத்தில் ப

பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

பணம் ஒன்று மட்டும் மனிதனின் வாழ்க்கையை பூர்த்தி செய்து விடுகிறதா?

வாழ்க்கை ஒரு பயணம் என்பதை உணர்ந்தோர், அந்தப் பயணம் என்ற சொல்லுக்குள்ளேயே அடங்கியுள்ள பணம் பற்றித் தெளிவாக அறிந்திருப்பர். பயணம் எங்கே நிறைவடையும் என்பதை உணராதோர் பணம் மட்டுமே வாழ்க்கை என நினைத்திருப்பர்.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவை தற்போதை எலக்ட்ரானிக் யுகத்தில், மத்திய பாஜக அரசும், அகமதாபாத் போலீசாரும் கைது செய்யாமல் விட்டிருப்பது ஏன்?

Advertisment

பணம் பாதாளம் வரை பாயும். காசு கைலாசா வரை செல்லும். அதுவும், நித்தியானந்தா வெளியிட்டுள்ள கரன்சிக்குப் பெயர் ‘பொற்காசு’. அதன்முன் அரசும் சட்டமும் தூசு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

1972-ம் ஆண்டின் வனவிலங்கு சட்டப்படி, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு தவறாக இருந்த ஒரு விஷயம் இப்பொழுது மோடி விஷயத்தில் பாஜகவிற்கு சரியாகிவிட்டதோ?

நாட்டு மக்களை கொரோனாவுடன் யுத்தம் நடத்தச் சொல்லி, அரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொடுத்துவிட்டு, பிரதமர் மோடியோ தன் வீட்டில் மயில் களுக்குப் பொட்டுக்கடலை ஊட்டுவது போன்ற படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிடச் செய்தார். தேசியப் பறவை யான மயிலை, 1972ஆம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி வீட்டுக்கு கொண்டு வருவது தவறு என்று 2017ல் லாலு குடும்பத்திறகு எதிராகக் கொந் தளித்தது பா.ஜ.க. இப்போது, பா.ஜ.க.வின் பிரதமர் அதையே பெருமிதமாக வெளியிட் டுள்ளார். அதிகார நெம்பு கோலில் சட்டங்கள் வசதியாக வளைக்கப்படுகின்றன.

ஜெயப்ரகாஷ், மக்கினாம் பட்டி, பொள்ளாச்சி

"ராஜீவ்காந்தி முயற்சியில் இலங்கை தமிழர்கள் 13-வது திருத்தம் மூலம் பெற்ற உரிமைகளையும் சமவாய்ப்பு களையும் ராஜபக்சே அரசு பறிக்க மோடி அரசு அனுமதிக்க கூடாது' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளது பற்றி?

நேரு காலத்தில் இந்தியர்கள் பெற்ற உரிமைகளையே தலைகீழாக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசிடம் இப்படி ஒரு கோரிக்கையா? மோடி, இந்தியாவின் ராஜ பக்சே. ராஜபக்சே, இந்தியா வின் மோடி.

mm

ம.தமிழரசிமணி, குப்பம், ஆந்திரா மாநிலம்

காஞ்சி மடத்தின் புகழ், ஜெயேந்திரர் சாமியாரோடு முடிந்துவிட்டதா?

ஜெயேந்திரர் உண்மையான சாமியாராக இல்லாததால் முடிந்துவிட்டது.

____________

தமிழி

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

தமிழ்தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொள்ளாமல் யாரேனும் இன்னும் இருக்கிறார்களா?

உலகின் தொன்மையான மொழிகளில் நம் தமிழ் மொழிக்கு முதன்மையான இடம் உண்டு. அது இன்றைய நிலையில் பேசப்படும் தமிழா, வேறு வகைப்பட்டதா என்கிற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பரவிய முதல் மனித இனத்திடம் காணப்படும் ஒற்றுமைகள் குறித்த ஆய்வுகள், தமிழோடு நெருக்கமாக இருப்பதை பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வரலாறும் அது தொடர்பான ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டே இருப்பது வழக்கம். எப்படிப் பார்த்தாலும், இந்திய மொழிகளில் திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் மொழியான தமிழ்மொழியே மூத்த மொழி என்பதை மொழியியலாளர்கள் பலர் தொடர்ந்து நிறுவி வருகின்றனர். ஆனால், சமஸ்கிருதத்தையும் அதன் திரிபு வடிவமான கலப்பு மொழியான இந்தியையும் உயர்த்திப் பிடிக்கும் கூட்டம் காலங்காலமாகத் தமிழுக்கு எதிரான பொய்யான முடிவுகளை முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களின் நோக்கம், சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களின் வழியில் இந்தியப் பண்பாட்டைக் கட்டமைத்து, தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்திதான் இந்தியா என நிலைநிறுத்துவதாகும். ஆயுஷ் எனப்படும் இந்திய ஒன்றிய அரசின் மருத்துவத் துறையில் ஆயுர்வேதம் எனும் சமஸ்கிருத வழி மருத்துவம், சித்தம் என்கிற தமிழ் வழி மருத்துவம், யோகம் என்கிற மூச்சுக்கலை, யுனானி-ஹோமியோ ஆகிய அலோபதியல்லாத மருத்துவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் சார்பில் நடைபெற்ற யோகா தொடர்பான காணொலி நிகழ்வில் அந்த அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் மட்டும் பேசமுடியும் என்றும், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்றும் கூறி தென்னிந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்களையும் பயிற்சியாளர்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ஓர் அமைச்சகத்தின் செயலாளர் என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பது வழக்கம். அவர் குடிமைத் தேர்விலேயே ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியையும் பெற்றிருப்பார். தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் இதனைக் காண முடியும். ஆனால், இந்த கொடேச்சா ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் அமைச்சகத்தில் செயலாளராக்கப்பட்டவர். அதனால் மூத்த மொழியான தமிழையும், இணைப்பு மொழியும் அரசின் அலுவல் மொழியுமான ஆங்கிலத்தையும், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளையும் கொச்சைப்படுத்தி, இந்தியாவை ஹிந்தியாவாக்கும் வெறியுடன் செயல்பட்டிருக்கிறார்.

nkn290820
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe