Advertisment

மாவலி பதில்கள்!

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அம்மா அரசுக்கு சர்மாக் களின் சான்று தேவையில்லை என்கிறதே அதிமுக?

கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை என்பதில் எடப்பாடி அரசு உறுதியாக இருந்தது. கர்நாடக எடியூரப்பா அரசு அனுமதி கொடுத்தது. அதனை ஆண்மை யுள்ள அரசு என ட்வீட் செய்தார் ஹெச்.ராஜா. அதற்கு பதிலளித்து பதிவு செய்த அ.தி.மு.க. ஐ.டி.விங் கோவை சத்யன், ஆண்மை யெனப்படுவது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுவதாகும் என புதுக்குறள் எழுதி ராஜாவை பகடி செய்தார். கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் ஜெபம், முஸ்லிம்களின் பக்ரீத் தொழுகை இவற்றை கொரோனா சூழலால் தவிர்க்கச் சொன்னது அரசு. அது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கும் பொருந்தும் என்பது அரசின் நிலைப்பாடு. இது ஹெச்.ராஜாக்களை எரிச்சலடைய வைக் கிறது. அ.தி.மு.க.வின் இன்றைய முத லாளிகள் மோடியும் அமித்ஷாவும்தான். பா.ஜ.க.வில் உள்ள மற்றவர்களின் சான்றிதழ், ஆட்சியின் மிச்ச நாட்களைக் கடக்கவிருக்கும் அ.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அம்மா அரசுக்கு சர்மாக் களின் சான்று தேவையில்லை என்கிறதே அதிமுக?

கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை என்பதில் எடப்பாடி அரசு உறுதியாக இருந்தது. கர்நாடக எடியூரப்பா அரசு அனுமதி கொடுத்தது. அதனை ஆண்மை யுள்ள அரசு என ட்வீட் செய்தார் ஹெச்.ராஜா. அதற்கு பதிலளித்து பதிவு செய்த அ.தி.மு.க. ஐ.டி.விங் கோவை சத்யன், ஆண்மை யெனப்படுவது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுவதாகும் என புதுக்குறள் எழுதி ராஜாவை பகடி செய்தார். கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் ஜெபம், முஸ்லிம்களின் பக்ரீத் தொழுகை இவற்றை கொரோனா சூழலால் தவிர்க்கச் சொன்னது அரசு. அது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கும் பொருந்தும் என்பது அரசின் நிலைப்பாடு. இது ஹெச்.ராஜாக்களை எரிச்சலடைய வைக் கிறது. அ.தி.மு.க.வின் இன்றைய முத லாளிகள் மோடியும் அமித்ஷாவும்தான். பா.ஜ.க.வில் உள்ள மற்றவர்களின் சான்றிதழ், ஆட்சியின் மிச்ச நாட்களைக் கடக்கவிருக்கும் அ.தி.மு.கவினருக்குத் தேவையில்லை.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

Advertisment

பணமும் அதிகாரமும் ஒன்று சேர்ந்து உலகை ஆட்டிப் படைக்கிறதே, அதன் முன்பு "திறமை' கைகட்டி, வாய் மூடி நிற்க வேண்டியதுதானா?

அதிகாரம் கையில் இருந்தால் பணம் எப்படி வேண்டுமானாலும் வரும். அதற்கு நிதி என்று பெயரிடலாம். நிவாரண உதவி என்று சொல்லலாம். கணக்கு கேட்கவோ-தணிக்கை செய்யவோ அவசியமில்லை எனத் தீர்மானிக்கலாம். அதற்கு முன்பாக, வாதத் திறமைகூட கைகட்டி வாய்மூடி நிற்கக்கூடும். உதாரணம், பி.எம்.கேர்ஸ். எனினும், பணமும்-அதிகாரமும் நிலையானதல்ல. சர்வாதிகாரிகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துப் போட்டுள்ளது ஜனநாயகம்.

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

தர்மயுத்தம், மௌனயுத்தம் இவற்றில் எது ஓ.பி.எஸ்.க்கு வெற்றியை தேடிதரும்?

அவர் நேரடிப் போட்டிக் களத்தில் இருந்து எப்போதோ வெளியேற்றப்பட்டு விட்டார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, டெல்லி பா.ஜ.க. தலைமையின் சிபாரிசு என்கிற ஒயில்டு கார்டு என்ட்ரி.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

இந்தி மொழியை இந்திய மாநிலங்களில் முதலில் திணிக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தானே?

சந்தேகமேயில்லை. இந்தியாவை ஹிந்தியாவாக்க காங்கிரசார் முயற்சித்தார்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் அனைத்து மக்களும் ஒரே மொழியைப் பொதுவாக அறிந்திருக்க வேண்டும் என காந்திகூட விரும்பினார். இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நேரு ஆட்சிக்காலத்திலிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான இந்தியா என்பது பல்வகை மொழி-பண்பாடுகளைக் கொண்டது என்பதை தமிழகம்தான் முதலில் டெல்லிக்கு உணர்த்தியது. அதன்பின் மற்ற மாநிலங்களும் உரத்துக் கூறின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவர்களே தங்கள் தாய்மொழிக்காகக் குரல் கொடுத்தனர். அதனால், காங்கிரஸ் அரசு பின்னாளில் இந்தித் திணிப்பை மெல்ல ஒத்திவைத்தது. காங்கிரசார் பலரை தன் வலையில் விழவைக்கும் பா.ஜ.க.வோ அன்றைய காங்கிரசாரின் வேலையை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.

mm

சு.வெங்கடேஷ், கோட்டயம்

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணம் எது?

முதன் முதலில் 1983ல் உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் கூட்டு முயற்சியும். 2011ல் உலகக் கோப்பையை வென்றதும் அதனைக் கூட்டாளிகளிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்ற தோனியின் மகிழ்ச்சியும்.

ஜெயப்ரகாஷ், மக்கினாம்பட்டி, பொள்ளாச்சி

""100 பி.ஜே.பி. தொண்டர்களுக்கு 1 திமுக தொண்டன் சமம்'' என்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியுள்ளது குறித்து?

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதனால்தான் மிஸ்டுகாலில் 100 உறுப்பினர்களை சேர்க்க முடியாத பா.ஜ.க தலைமையும் ஒரு வி.பி.துரைசாமி, ஒரு கு.க.செல்வம் என குறி வைத்து தூக்குகிறது போலும்.

_________

தமிழி

தூயா, நெய்வேலி

பிள்ளையார் ஊர்வலம் தமிழர்களின் பண்பாடா?

கணபதி, விநாயகர், விக்னேஸ் வரன் போன்ற பெயர்கள் யாவும் வடமொழிச் சொற்கள். வாதாபி கணபதி என்பதால், சாளுக்கிய தலைநகர் வாதாபி மீது படையெடுத்து வென்ற நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி அங்கிருந்து கொண்டு வந்த விநாயகர் உருவம்தான் தமிழ்நாட்டில் புதிய வழிபாட்டை உருவாக்கியது என்பவர் களும் உண்டு. சித்தி விநாயகர், புத்தி விநாயகர், சக்தி விநாயகர் என்றெல் லாம் பெயர்கள் இருந்தாலும் தமிழர் களுக்கு அவர் எப்போதும் பிள்ளையார் தான். ஆற்றங்கரையோர அரசமரத்தடி யில் அதனை வணங்குவது ஒரு வகை என்றால், வீட்டில் வணங்கும் வழக்கமும் தமிழர்களுக்கு உண்டு. பசு மாட்டுச் சாணத்தை உருண்டையாகப் பிடித்து, அதன் மீது சந்தனம்-குங்குமம் பொட்டு வைத்து, அருகம்புல்லைச் செருகினாலே கிராமத்து வீடுகளில் பிள்ளையார் ஆகி விடுவார். புடிச்சி வச்சா பிள்ளையாரு, வழிச்சி எறிஞ்சா சாணி என்பது ஊர்ப்புறங்களில் சொல்லப்படுவது உண்டு. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடும் தமிழகத்தின் சில கிராமங்களில் பழக்க மாக இருக்கிறது. விநாயகர் ஊர்வலம் என்பது மதத்தை வைத்து கலவர அரசியல் செய்வோரின் வட நாட்டு இறக்குமதி.

nkn260820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe