Advertisment

மாவலி பதில்கள்!

ff

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

""இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிகள் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கின்றன...'' என்று ராகுல்காந்தி கூறியுள்ளது பற்றி?

Advertisment

சமூக வலைத்தளங்கள் மட்டும்தானா? நாட்டில் கொஞ்சநஞ்சம் ஜனநாயகம் மிச்சமிருந்த அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கைகளில் சிக்கிய பூமாலைகளாகியுள்ளன.

mm

முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஜெயலலிதா காலத்தில் இருந்த ராணுவ ஒற்றுமை போன்று எப்பொழுதும் இருங்கள் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனரே?

Advertisment

அ.தி.மு.க. தன் கையில்தான் என உறுதியான பிறகு, தனது தலைமையிலான கட்சியை, மற்ற நிர்வாகிகளின் சுயமரியாதையைக்கூட மதிக்காமல், ராணுவக் கட்டுப்பாடு போல ஜெயலலிதா நடத்தினார் என்பது உண்மையே. ஆனால், அந்தத் தலைமைப் பதவிக்காக அவரும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். போல மல்லுக்கட்டினார் என்பதுதான் அ.தி.மு.க.வின் வரலாறு. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதே தன்னை முதல்வ ராக்கும்படி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதின

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

""இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிகள் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கின்றன...'' என்று ராகுல்காந்தி கூறியுள்ளது பற்றி?

Advertisment

சமூக வலைத்தளங்கள் மட்டும்தானா? நாட்டில் கொஞ்சநஞ்சம் ஜனநாயகம் மிச்சமிருந்த அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கைகளில் சிக்கிய பூமாலைகளாகியுள்ளன.

mm

முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஜெயலலிதா காலத்தில் இருந்த ராணுவ ஒற்றுமை போன்று எப்பொழுதும் இருங்கள் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனரே?

Advertisment

அ.தி.மு.க. தன் கையில்தான் என உறுதியான பிறகு, தனது தலைமையிலான கட்சியை, மற்ற நிர்வாகிகளின் சுயமரியாதையைக்கூட மதிக்காமல், ராணுவக் கட்டுப்பாடு போல ஜெயலலிதா நடத்தினார் என்பது உண்மையே. ஆனால், அந்தத் தலைமைப் பதவிக்காக அவரும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். போல மல்லுக்கட்டினார் என்பதுதான் அ.தி.மு.க.வின் வரலாறு. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதே தன்னை முதல்வ ராக்கும்படி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆர். தன் மரணத்திற்கு முன்பாக ஜெ.வின் கட்சிப் பதவிகளைப் பறித்தார். கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான அண்ணா நாளிதழில், அ.தி.மு.க.வினர் யாரும் ஜெயலலிதாவுடன் அரசியல் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற விளம்பரம் வெளியானது. இது தனக்கு எதிரான சதி என ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெயலலிதா குற்றம்சாட்டினார். பின்னர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, ஜானகிராமச்சந்திரனை ஆர்.எம்.வீ. தரப்பு முதல்வராக்க, அ.தி.மு.க.வை உடைத்து, ஜானகி ஆட்சியைக் கலைக்குமளவுக்கு கட்சியைத் தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்தி னார்கள் ஜெயலலிதாவும் அவரைச் சார்ந்திருந்தவர்களும்.

வாசுதேவன், பெங்களூரு

முன்னாள் கிரிக்கெட் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சேத்தன் சௌஹான் மறைவு?

இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணி ஒரு சரிவுக்குப் பிறகு 1970களின் பிற்பகுதியில் தேறி வந்தபோது, ஓபனிங் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கருக்கு ஜோடியாக களமிறங்கியவர் சேத்தன் சவுகான். கவாஸ்கர் நின்று-நிதானித்து-ஒருநாள் முழுவதும் ஆடி மறுநாள் செஞ்சுரி அடிப்பார். எதிர்முனையில் அவருக்கு ஏற்ற வகையில் ஒத்துழைப்பு கொடுத்தவர் சவுகான். ஒரு முறைகூட அவரால் சதம் அடிக்க முடியவில்லை. கிரிக்கெட்டில் விட்டதை அரசியலில் பிடித்து, உத்தரபிரதேச அமைச்ச ரானவர், கொரோனாவுக்குப் பலியானது சோகம்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

நியாயமாகப் பார்த்தால், இந்த வருட சுதந்திர தினத்தில் "வீர மங்கை'க்கான பதக்கம் சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்குத்தானே கிடைத்திருக்க வேண்டும்?

விசாரணையில் இருக்கும் விவகாரம் என்ற காரணம் காட்டி, சாத்தான்குளம் காவல் நிலைய உண்மைகளை துணிந்து சொன்ன வருக்கு விருது தரமாட்டார்கள். விசாரணை முடிந்து தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவார்கள்.

______________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

பழங்காலத் தமிழர்களின் உடையலங்காரம் எப்படி இருந்தன? அவர்கள் வேட்டி-சேலை அணிந்திருந்தார்களா?

"உண்பது நாழி-உடுப்பது இரண்டே' என்கிறது புறநானூறு. இன்றைய வேட்டி-புடவை போல இல்லாவிட்டாலும் உடலின் மேல் பகுதியையும் கீழ்ப் பகுதியையும் மறைப்பதற்கான இரண்டு உடைகளை உடுத்துவது நமது வழக்கமாக இருந்துள் ளது. தமிழர்களின் ஐவகை நிலங்களில் வேட்டை மற்றும் மேய்ச்சல் நிலங்களான குறிஞ்சி, முல்லை நிலத்து மக்கள் இலை-தழைகளை ஆடையாக உடுத்தியிருந்ததைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. தொல்தமிழர் களான திராவிட நாகரிக சிறப்பைக் கூறும் சிந்துவெளி அகழாய்வுகளும் அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளும் அக்காலத்திலேயே பருத்தியைப் பயன்படுத்தியிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. பருத்தி ஆடைகளைப் போலவே பட்டு நூலால் நெய்யப்பட்ட ஆடைகளையும் பயன்படுத்தியிருப்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. "பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்...'’என்று தமிழர்களின் ஆடைகள் எவற்றால் ஆனவை என்பதை சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டு கிறது. ஆடைகளின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தன. காழகம், அறுவை, மடி, கூறை என்ற பெயர்களிலும் உடைகள் அழைக்கப்பட்டன. கூறைப் புடவை என்பது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, உடைகள் என்பவை அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்பவே அமையும். குளிர்ப் பகுதிகளில் கம்பளி ஆடைகளும், வெப்ப பகுதிகளில் பருத்தி உடைகளும் அணிவது இயல்பு. இதில் அரசர்களுக்கான உடைகள் அதிக விலையுள்ள தாகவும், ஏழைகளுக்கான உடைகள் எளிமையானதாகவும் இருந்துள்ளன. பழனி முருகன் கோவிலில் இந்த வேறுபாட்டை ஆண்டிக்கோலம், ராஜ அலங்காரம் என இருவகை தரிசனங் களில் காண முடியும். பெண்களைப் பொறுத்தவரை, உடை களைப் போலவே நகைகள் உள்ளிட்ட அலங்காரங்களிலும் தனி கவனம் செலுத்தியுள்ளனர். மணிகளால் ஆன அணிகலன் களும் முத்து, வெள்ளி, தங்கம் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களும் அவர்களை அலங்கரித்தன. குறிப்பாக உடலின் மேல்பகுதியின் அணிகலன்களால் நிறைத்திருந்ததை கோவில் சிற்பங்கள் வழியே இன்றளவும் காணலாம். கால மாற்றத்திற்கேற்ப பல வகையிலும் உடை மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. சாதி பேதம் காரணமாக உடைக் கட்டுப்பாடுகளும் கடைப் பிடிக்கப்பட்டன. மேலாடை அணிவதற்கான உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற தோள் சீலைப் போராட்டம் உடைகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான கலகக்குரல்.

nkn220820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe