Advertisment

மாவலி பதில்கள்!

mavali

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

எங்களை சீண்டினால் பின் விளைவுகள் மிக மோச மானதாக இருக்கும் என எச்சரிக்கிறாரே ஜெயக்குமார்?

Advertisment

அந்த ஆடிட்டர் அவமான கரமான வார்த்தைகளால் அ.தி.மு.க தலைமையை சீண்டி னாரே, அப்போது என்ன விளைவை அமைச்சர் ஏற்படுத்தினாராம்?

பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்

தி.மு.க.வை கலைஞர் வழிநடத்தியதிற்கும் தற்பொழுது மு.க.ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருப்பதற்கும் என்ன வேறுபாடு?

அறிஞர் அண்ணா அவர்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட தி.மு.க.வை அவருக்குப் பின் வழிநடத்திய கலைஞர், நெருக்கடி நிலை உள்ளிட்ட கடுமையான சூழல்களில் கட்சியைக் கட்டிக்காத்தவர். மு.க.ஸ்டாலினோ ஆட்சியோ- பதவியோ இல்லாத நெருக்கடியான சூழலில் கலைஞர் மரணத்திற்குப் பிறகு தி.மு.க.வின் தலைவரானவர். நான் கலைஞர் இல்லை. கலைஞராகவும் முடியாது என வெளிப்படையாகவே அறிவித்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் மகனாக அல்ல, கலைஞரின் தொண்டனாக கட்சியை எப்படி கொண்

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

எங்களை சீண்டினால் பின் விளைவுகள் மிக மோச மானதாக இருக்கும் என எச்சரிக்கிறாரே ஜெயக்குமார்?

Advertisment

அந்த ஆடிட்டர் அவமான கரமான வார்த்தைகளால் அ.தி.மு.க தலைமையை சீண்டி னாரே, அப்போது என்ன விளைவை அமைச்சர் ஏற்படுத்தினாராம்?

பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்

தி.மு.க.வை கலைஞர் வழிநடத்தியதிற்கும் தற்பொழுது மு.க.ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருப்பதற்கும் என்ன வேறுபாடு?

அறிஞர் அண்ணா அவர்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட தி.மு.க.வை அவருக்குப் பின் வழிநடத்திய கலைஞர், நெருக்கடி நிலை உள்ளிட்ட கடுமையான சூழல்களில் கட்சியைக் கட்டிக்காத்தவர். மு.க.ஸ்டாலினோ ஆட்சியோ- பதவியோ இல்லாத நெருக்கடியான சூழலில் கலைஞர் மரணத்திற்குப் பிறகு தி.மு.க.வின் தலைவரானவர். நான் கலைஞர் இல்லை. கலைஞராகவும் முடியாது என வெளிப்படையாகவே அறிவித்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் மகனாக அல்ல, கலைஞரின் தொண்டனாக கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைத்தான் எல்லாரும் உற்று நோக்குகிறார்கள்.

Advertisment

mm

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

ஆளுனர்களின் செயல் பாடுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடாக தெரிகிறதே?

பா.ஜ.க. அல்லது அதன் தயவுபெற்ற ஆட்சியென்றால் அதனை எப்பாடுபட்டாவது தக்க வைக்கவேண்டும். காங்கிரஸ் அல்லது மற்ற எதிர்க்கட்சி ஆட்சி என்றால் எவ்வளவு சீக்கிரமாக ஆட்சிக் கவிழ்ப்புக்கான சூழலை உருவாக்க முடியும் என கவனிக்க வேண்டும். இதுதான் பெரும் பாலான மாநிலங்களின் நிலையாக உள்ளது. ஆளுநர்களே பல மாநிலங்களில் ஆட்சியாளர் களாக இருக்கிறார்கள். அது தற்போது ராஜஸ்தானில் அப்பட்டமாக வெளிப்பட்டி ருப்பதால் காங்கிரஸ் முதல்வர் கெலாட் மாஸ்க் அணிந்து போராட்டம் நடத்துகிறார். ஜனநாயகம் முகமூடி அணிந் திருக்கிறது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

நம்முடைய 'செல்'லை மிக அவசர தேவைக்கு உபயோகிக்க முற்படும் போது, பதிவிடப் பட்ட விளம்பரங்களும், கொரோனா செய்திகளும் திரும்ப திரும்ப நம் பொன்னான நேரத்தை ஆக்கிரமித்து, நம்முடைய பொறுமையை இழக்கச் செய்து, "செல்' வாங்கினதன் நோக்கத்தையே பாழ்படுத்திவிடுகிறார்களே, இதற்கு தீர்வே இல்லையா?

அவசரத் தேவைக்கான அறிவியல் சாதனங்கள் நம் நாட்டில் ஆடம்பரத்திற்கான அடையாளமாகிவிட்டது. விரைந்து செல்வதற்கு தேவைப் படும் கார், உடனடியாக பேசுவதற்கு தேவைப்படும் செல் போன், நேரம் வீணாகாதபடி கவனிப்பதற்கான கைக்கடிகாரம் இவை எல்லாவற்றிலும் ரகம், தரம், விலை அடிப்படையிலேயே மதிப்பீடுகள் உள்ளன. மக்களின் இந்த மனநிலை, அரசாங்கத்தையும் தனியார் நிறுவனங்களையும் கொரோனா போலத் தொற்றிக் கொண்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் கோவிட்19 விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக, போன் செய்ததும் விளம்பர அறிவிப்பு வெளியானது சரி. ஆனால், இப்போது அந்த விழிப்புணர்வு மக்களைவிட அரசுகளுக்கே அதிகம் தேவைப்படுகிறது. தனது நேரத்தை அதில் செலவழிக்காமல், மக்களின் நேரத்தை விளம்பரங்களால் வீணடித்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆட் டிப்படைக்கும் தனியார் செல் போன் நிறுவனங்களும் அதே வழியைப் பின்பற்றுகின்றன.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்77

2021இல் தமிழகத்தில். சட்டமன்ற தேர்தல் நடை பெறுமா?

அது கொரோனா காலம் சாதகமா, பாதகமா என்பதைத் பொறுத்தது.

________

தமிழி

mm

நித்திலா, தேவதானப்பட்டி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் பிறப்பால் அனைவரும் சமம் என்பது தானே அர்த்தம்? அனைவரும் சமம் என்கிறபோது அப்புறம் ஏன் சாதிரீதியில் இடஒதுக்கீடு? பழந்தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இப்படி அரசவையில் பணிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனவா?

திருவள்ளுவர் தனது குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். ஆனால், சமூகத்திலோ பிறப்பின் அடிப்படையிலேயே சாதி ரீதியான பிரிவுகள் உருவாக்கப்பட்டு, மனிதர்களில் உயர்ந்தோர்- ஒடுக்கப்பட்டோர் என்ற நிலை நீடிக்கிறது.

அதனால், அனைவரும் சமம் ஆக நடத்தப்படவேண்டுமென்றால், மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வை அறிந்து, அதனை முறைப்படுத்தி அவரவருக்குரிய நீதியை வழங்கி காப்பாற்ற வேண்டியது மன்னர்களின் கடமை என்பதையும் திருக்குறளில் வள்ளுவர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். -என்கிறது குறள். சிலப்பதிகாரத்தில் மதுரையை கண்ணகி எரிக்கும்போது பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே என்று பாடுகிறார் இளங்கோவடிகள். அதாவது, தீயவர்களை தீ அழிக்கவேண்டும் என சாபமிட்ட கண்ணகி, அதில் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள், பசு, அந்தணர்கள் உள்ளிட்ட மதச்சடங்கு செய்வோர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கிறார். மாநகரை அழிக்கும் தீயிலேயே இடஒதுக்கீடு உண்டென்றால், மானுடத்தை அழிக்கும் சாதீயிலிருந்து விடுதலை பெறவும் இடஒதுக்கீடு அவசியமன்றோ!

nkn010820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe