ரம்யாமணி, வெள்ளக்கோவில்

தமிழ்நாட்டில் இனி கொரோனா தொற்று படிப்படியாக குறைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித் திருக்கிறாரே?

கடவுளுக்குத்தான் தெரியும் என்ற பழனிசாமி, அவரே சாமியாகி அருள்வாக்கு தந்திருக்கிறார்.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல ரசிகர்களே இல்லாத மைதானத்தில் இங்கிலாந்து-மேற்கு இந்திய அணிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்திருக்கிறதே?

mm

ரசிகர்கள் பார்க்க முடியாமல் போனாலும் இந்த கிரிக்கெட் போட்டியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன், அமெரிக்காவில் நிறவெறிக்குப் பலியான ஃப்ளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செயல்பட்டது முக்கியமானது. போட்டியில் மேற்குஇந்திய தீவுகள் அணி வென்றபிறகு, அதன் அந்நாளைய வேகப் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் அணியின் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க பூர்வகுடி மக்களும், தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்த இந்தியர்களின் வம்சாவளியினரும் ஆவர். அவர்கள் யார் தங்கள் மீது காலனி ஆதிக்கம் செலுத்தினார்களோ அவர்களை விளையாட்டின் மூலம் வெற்றி கண்டிருப்பது என்பது, நிறுவனமயப்பட்ட ஒழுங்கை தகர்க்கும் ஆற்றலுக்கு அடை யாளமாக வெளிப்பட்டுள்ளது என்றது வரலாற்று வார்த்தைகள்.

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பொதுவாழ்வில் ஈடுபடுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என் .சங்கரய்யா என கூறுகிறாரே மு.க ஸ்டாலின்?

mm

பொதுவுடைமைக் கொள்கை என்பது பதவி சுகங்களை எதிர்பார்ப்பதல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களை செயல்படவைத்தோ- அதிகாரத்திற்கு வந்து செயல்பட்டோ உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது. அப்படி அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளில் ஒருவர் 99வது பிறந்தாள் காணும் தியாகத் தலைவர் சங்கரய்யா. அதைத்தான் மு.க.ஸ்டா லின் குறிப்பிட்டிருக்கிறார்.

மல்லிகா அன்பழகன், சென்னை 78

தமிழக அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெறுவது சரியா?

சரிதான். கொரோனா பணக் காரர்களுக்கான வியாதி என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அமைச்சர்கள் எல்லாம் என்ன ஏழை-பாழைகளா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு! தாங்கள் எந்தளவு பணக்காரர்கள் என்பதை நோய் நேரத்திலும் காட்டுவதுதானே அரசியல்வாதிகளுக்கு கெத்து.

___________

தமிழி

சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை, நெல்லை

தமிழ் கடவுள் முருகனை மையமாக வைத்து சர்ச்சைகளை உருவாக்குவது சரியா?

முருகன் சிலை கடத்தல் முதல் கந்த சஷ்டி விளக்கம் வரை பல வகையிலும் முருகன் சர்ச்சைக்குள்ளாவது காலந்தோறும் தொடர்கிறது. தமிழ்த்தென்றல் திரு.வி.க. தனது முருகன் அல்லது அழகு என்ற புத்தகத்தில் முருகன் என்ற சொல்லுக்கு மணம், அழகு, இளமை, இறைமை என்று பொருள் விளக்கம் தருகிறார். சேயோன் மேய மைவரை உலகமும் என தொல்காப்பியம் முருகனை குறிஞ்சி நிலத் தலைவனாக- இறைவனாகக் குறிப்பிடுகிறது. சங்கப் புலவரான நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் "குன்று அமர்ந்து உறைதலும் உரியன்' எனக் குறிப்பிடப்படுவதுடன், மலை கடந்து காடு, ஊர், வயல், சோலை, கடல்புரம் என அனைத்து வகை நிலத்திலும் முருக வழிபாடு இருந்ததை நிறுவுகிறார். புறநானூறு, அகநானூறு, பரிபாடல் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் முருகன் பற்றிய குறிப்பு கள் உள்ளன. இத்தகைய பின்னணியில், தமிழ்க் கடவுளாக வழிபடப் பட்ட முருகனை தங்களின் கடவுளாக நிறுவும் முயற்சிகளையும் வடமொழி இலக்கியங்கள் மேற்கொண்டிருப்பதைக் காண முடியும்.

ஸ்கந்தன், சுப்ரமணியன் உள்ளிட்ட பெயர்களில் முருகன் குறித்த புராணங்கள் வடமொழியில் இயற்றப்பட்டதுடன், இதிகாசங் களான இராமாயணம்- மகாபாரதத்திலும் சில குறிப்புகளைக் காண முடிகிறது என்கிறார் சைவ சித்தாந்த பெருமன்றத்தின் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன். முருக வழிபாட்டின் அடையாளமாக எளிய பக்தர்களால் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் மிகவும் பிற்காலத்தியது. அதற்கு முன்பே, பல பாடல்கள் உள்ளன. திருமந்தி ரத்தில் திருமூலர் முருகன் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழ் முருகனைப் புகழ்கிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் தெய்வமணிமாலையில், "ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்கிற புகழ்பெற்ற பாடலில், ‘தருமமிகு சென்னையில் "கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே' என்ற வரிகள் தமிழகத்தின் இன்றைய தலைநகர் வரை முருக வழிபாடு சிறந்து விளங்கியிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்க்கடவுளான முருகனை வடமொழிப் பண்பாட்டினர் தமதாக்க முயற்சிப்பதும், அதனை எதிர்தது தமிழ் வழிபாட்டாளர்கள் ஆன்மிகத் தளத்தில் போராடுவதும் தொடர்கிறது. இப்போதும் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற காணொலி விமர்சித்ததை எதிர்த்து வெளிப்படும் குரல்களில், வடமொழிப் பண்பாட்டின் குரல் தூக்கலாக இருக்கிறது. அவர்களின் குரல் ஒருபோதும், வடமொழி மந்திரம் தேவையில்லை.. தமிழ்க் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று ஒலிக்காது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டால், யாரை-எதனைக் காட்டமாக விமர்சிக்க வேண்டும், எதனை விமர்சிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.