சி. கார்த்திகேயன், சாத்தூர் 626203
எந்த துறை தவறாக இருந்தாலும் தேவை டிஸ்மிசா, டிரான்ஸ்பரா? வெயிட்டிங் லிஸ்ட்டா?
இனி தவறே செய்யக்கூடாது என சம்பந்தப் பட்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பயந்து, திருந்துவதற்கான தண்டனை.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிஜிட்டல் ஸ்ட்ரைக் என்ன வேறுபாடு?
அண்டை நாட்டின் பெயரைச் சொல்லி- எதிரி என பகிரங்கமாக அறிவித்து, படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது சர்ஜிகல் ஸ்ட்ரைக். எல்லை மீறி வந்து தாய்நாட்டு ராணுவ வீரர்களின் உயிரைப் பறிக்கும் அண்டை நாட்டின் பெயரைச் சொல்வதற்கும் தயக்கம் காட்டி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு எனத் தீர்மானித்து, அந்நாட்டுப் பொருட்களையும்-செல்போன் ஆப்களையும் புறக்கணிப்பது டிஜிட்டல் ஸ்ட்ரைக்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்77
பா.ஜ.க.வில் நடிகைகள், நமீதா, கவுதமி, குட்டி பத்மினி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் ஆகி விட்டார்கள். இனி தமிழகத்தில் "தாமரை' மலருமா?
கமலம் என்றால் தாம
சி. கார்த்திகேயன், சாத்தூர் 626203
எந்த துறை தவறாக இருந்தாலும் தேவை டிஸ்மிசா, டிரான்ஸ்பரா? வெயிட்டிங் லிஸ்ட்டா?
இனி தவறே செய்யக்கூடாது என சம்பந்தப் பட்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பயந்து, திருந்துவதற்கான தண்டனை.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிஜிட்டல் ஸ்ட்ரைக் என்ன வேறுபாடு?
அண்டை நாட்டின் பெயரைச் சொல்லி- எதிரி என பகிரங்கமாக அறிவித்து, படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது சர்ஜிகல் ஸ்ட்ரைக். எல்லை மீறி வந்து தாய்நாட்டு ராணுவ வீரர்களின் உயிரைப் பறிக்கும் அண்டை நாட்டின் பெயரைச் சொல்வதற்கும் தயக்கம் காட்டி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு எனத் தீர்மானித்து, அந்நாட்டுப் பொருட்களையும்-செல்போன் ஆப்களையும் புறக்கணிப்பது டிஜிட்டல் ஸ்ட்ரைக்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்77
பா.ஜ.க.வில் நடிகைகள், நமீதா, கவுதமி, குட்டி பத்மினி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் ஆகி விட்டார்கள். இனி தமிழகத்தில் "தாமரை' மலருமா?
கமலம் என்றால் தாமரை. பா.ஜ.க.வின் தமிழக அலுவலகமான கமலாலயத்தில் செயற்குழு கூட்டம் நடக்கும்போது தாமரை மலர்ந்தே தீரும் என்கிற குரல் இவர்கள் மூலமாக(வும்) கேட்கும்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
2001-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்திருந்தாலும், ஒரு போலீஸ்காரர்கூட அதற்காக தண்டிக்கப்படவில்லையாமே?
சாத்தான்குளம் போல சில மட்டுமே மக்க ளின் மனசாட்சியை உலுக்குகின்றன. பெரும்பா லான லாக்கப் மரணங்கள் வெளியே தெரியாம லேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. மக்களும் கண்டு கொள்வதில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள், பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மாவுக்கட்டு போடப்படுவது எப்படி என கேட்கத் தொ டங்கியிருந்தால், லாக்கப் மரணங்கள் கட்டுப்படுத்தப்பட் டிருக்கும். மாவுக்கட்டை போலீசின் சாதுர்யமான தண்டனையாக மனதளவில் பாராட்டுவதன் விளைவு களில் ஒன்றுதான், லாக்கப் மரணங்கள் மீதான அலட்சியப் பார்வை.
மல்லிகா அன்பழகன், சென்னை 78.
சாத்தான் குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவிக்கிறார்... நெய்வேலி என்.எல்.சி தீவிபத்துக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வேதனை தெரிவிக்கிறார்... தேசிய தலைவர்களுக்கு தமிழகம் மீது திடீர் கரிசனம் ஏன்?
டிஜிட்டல் யுகத்தில் வடக்கு வாழ்ந்தால் மட்டும் போதாது, தெற்கும் தேயாமல் இருக்க வேண்டும் என்பதை தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு இ.பாஸ் இல்லாமல் சென்று வந்ததற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்கிறாரே அமைச்சர் டி.ஜெயக்குமார்?
புடிச்சி உள்ளே போடுங்க சார்... இ-பாஸ் இல்லைங்கிறதுக்கே இந்த நடவடிக்கைன்னா, உள்ளே புடிச்சிட்டுப்போய் அடிச்சி கொன்னதை மூச்சுத்திணறல் சாவுன்னு சொன்ன இ.பி.எஸ். மீது என்ன நட வடிக்கைன்னும் சொல்லிடுங்க சார்.
அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை
அடுத்த ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூற்றாண்டு விழா வருகிறதே! காங்கிரஸ் கோலாகலமாக கொண்டாடுமா?
முன்னாள் பிரதமர் நூற்றாண்டுவிழாவைவிடவும் வருங்கால பிரதமரை உருவாக்கக்கூடிய அளவுக்கு கட்சிக்குத் தலைமை பலமும் அமைப்பு பலமும் வேண் டும் என்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்.
வாசுதேவன், பெங்களூரு
சர்க்கஸ் கலை அழிந்து வருகின்றதே..?
கோவா, கர்நாடகம், மத்தியபிரதேசம்,, குஜராத் என பல மாநிலங்களிலும் அரசியல் சர்க்கஸ் மூலம் அந்தக் கலைக்குப் புத்துயிர் கொடுத்துவருகிறதே பா.ஜ.க.!
________
தமிழி
சு.வெங்கடேஷ், கோட்டயம்
மதுரைக்கு அருகேயுள்ள கீழடியில் தொடரும் ஆறாம் கட்ட அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளுடன், பழங்கால எடைக்கற் களும் கிடைத்திருப்பது எதைக் காட்டுகிறது?
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானது. “ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத் தொடர்ச்சி இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. அந்த அகழாய்வுக் குழியிலும் அதனைச் சுற்றியுள்ள குழிகளிலும் பல்வேறு அளவுகளில் கருங்கல் லால் ஆன நான்கு எடைக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளது. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150, 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பும் இக்குழிகளில் கிடைக்கப்பெற்றுள்ள இரும்புத்துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருள்களிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியனவும் கீழடி ஒரு தொழிற்கூடமாக செயல்பட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியின் வணிகச் செழிப்பினை உறுதி செய்ய முடிகிறது. இவை வணிகத்தை எடைபோடும் கற்களாக மட்டுமின்றி, வரலாற்றை எடைபோடும் கற்களாவும் இருக்கின்றன என்கிறார் சு.வெங்கடேசன்.